உயிர் பலி வாங்கிய கார் ஏ.சி…!

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே காரில் ஏ.சி. போட்டு படுத்து தூங்கிய மேலாளர் பரிதாபமாக உயிர் இறந்தார்.

திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா கமலாபுரம் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் அனந்தகிருஷ்ணன் 44 வயது. அனந்தகிருஷ்ணன் ஈரோடு மாவட்டம் ரகுபதி நாயக்கன் பாளையத்தில் உள்ள ஒரு தனியார் கிளப்பில் மேனேஜராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 10 மணியளவில் அனந்தகிருஷ்ணன் திருச்சியில் உள்ள தனது அம்மாவுக்கு போன் செய்து தான் இன்று கிளம்பி ஊருக்கு வருவதாக தகவல் கூறியிருக்கிறார் பிறகு அவருடைய நண்பர் ஒருவரின் கார் மூலம் அனந்தகிருஷ்ணன் திருச்சிக்கு புறப்பட்டு உள்ளார்.

மாலை 6.30 மணி அளவில் அனந்தகிருஷ்ணன் ஈரோடு முத்துக்கவுண்டன் பாளையம் – பரிசல் துறை சாலையில் காரில் வந்துகொண்டிருந்தபோது அசதியாக இருக்க காரில் ஏ.சி.போட்டு சிறிது நேரம் தூங்கிவிட்டு செல்லலாம் என்று நினைத்து சாலையோரம் காரை நிறுத்தி ஏசி போட்டு தூங்கியுள்ளார். பின்னர் சிறிது நேரத்திலேயே மூச்சு திணறல் ஏற்பட்டு அப்படியே காருக்குள் மயங்கி கிடந்துள்ளார்.
அவ்வழியாக வந்தவர்கள் காருக்குள் மயங்கி கிடப்பதை பார்த்து கார் கதவை திறந்துள்ளனர். பேச்சு மூச்சு இல்லாமல் இருந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அனந்தகிருஷ்ணன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

உடல் சோர்வு, மதிய வெயிலின் தாக்கத்திற்கு காரில் ஓடும் ஏ.சி.யை போட்டு சிறிது நேரம் தூங்கலாம் என நினைத்து தூங்கியவர் ஆக்ஸிஜன் குறைந்து மூச்சு திணறல் ஏற்பட்டு அப்படியே காருக்குள் மயங்கி விழுந்து இறந்துள்ளார். இப்படித்தான் காரில் ஏ.சி.போட்டு தூங்கும் வழக்கம் பலருக்கும் உள்ளது. ஆனால் அது உயிருக்கே ஆபத்தாக முடியும் என்பதை இச்சம்பவம் உணர்த்தியுள்ளது. மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Recent Posts

அங்கன்வாடி குழந்தைகளுக்கு கழிவறை அருகில் சமைத்தால் என்ன தவறு? – அமைச்சரின் சர்ச்சை பேச்சு

மத்திய பிரதேத மாநிலம் சிவபுரி மாவட்டம் கரோராவில் இருக்கும் அங்கன்வாடி மையத்தில் படிக்கும் குழந்தைகளுக்கு சமைக்கப்படும் உணவு கழிவறை அருகில் வைத்து சமைக்கப்படுகிறது. சமையல் பாத்திரங்களை கழிவறை…

19 mins ago

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலனம் மேலடுக்கு சுழற்சி காரணமாக லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்…

19 mins ago

திண்டுக்கலில் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து: 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம்!

திண்டுக்கல்லில் பள்ளி மாணவர்களை ஏற்றி கொண்டு சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.திண்டுக்கல் அருகே உள்ள முள்ளிபாடி புனித வள்ளார்…

19 mins ago

சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் ராமன்சிங் மருத்துவமனையில் திடீர் அனுமதி

ராய்ப்பூர்:சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வர் ராமன் சிங் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.சத்தீஸ்கர் மாநில முதல்…

19 mins ago

பிகிலுக்கு போட்டியாக வெளியாகும் நேர்கொண்ட பார்வை ஸ்பெஷல் – அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.!

நேர்கொண்ட பார்வை படத்தில் இருந்து அடுத்த சர்ப்ரைஸ் நாளை வெளியாக உள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.NKP 3rd Song Announcement : தமிழ்…

19 mins ago

பாஜகவின் அடுத்த அதிரடி ப்ளான்! கலக்கத்தில் கட்சிகள்!

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் பாஜக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. இதில் பாஜக மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்று தனி…

19 mins ago