தி.மு.க. கூட்டணி வெற்றி பெற அனைவரும் பாடுபடுவோம்: தளபதி மு.க.ஸ்டாலின்

கிருட்டிணகிரி, பிப்.27 திராவிட முன்னேற்ற கழக தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் முன்னிலையில் 23.02.2019 சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில் கிருட்டினகிரி சென்னை சாலையிலுள்ள தேவராஜ் மகால் அருகில் அமைக்கப் பட்டிருந்த கலைஞர் திடலில் விழா மேடையில் ரஜினி மக்கள் மன்ற முன்னாள் மாவட்ட செயலாளர் டி. மதியழகன் தலை மையில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணையும் விழா நடைபெற்றது.இவ்விழாவிற்கு கிருட்டினகிரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக டி செங் குட்டவன் சட்டமன்ற உறுப்பினர் தலைமை வகித்தார். மேனாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, மேனாள் தமிழக அமைச்சர் எ.வ.வேலு எம்.எல்.ஏ., ஆகி யோர் முன்னிலை வகித்தனர். கிருட்டினகிரி மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் ஒய்.
பிரகாஷ் எம்.எல்.ஏ.. அனைவரையும் வரவேற்றார்.விழாவில் மாவட்ட முன்னாள் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள், தோழர்கள் டி. மதியழகன் தலைமையில் 20 ஆயிரத் திற்கும் மேற்பட்டோர் திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஆளுயர மாலை அணிவித்து வெள்ளி வாள் கொடுத்து உறுப்பினர் படிவத்தையும் வழங்கினர். விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேசியதாவது:சில வாரங்களுக்கு முன்பு மதிய ழகன் கிருட்டினகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் பதவியில் இருந்து விலகி திமுகவில் எனது முன்னிலையில் தன்னை இணைத்துக் கொண்டார்.இதை தொடர்ந்து இன்றைய தினம் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் 20 ஆயி ரத்துக்கும் மேற்பட்டவர்கள் டி.மதியழகன் தலைமையில் திமுகவில் இணைந்துள்ள னர். அவர்களை வரவேற்கிறேன். இது ஒரு இணைப்பு விழா என்று கூறினார்கள் ஆனால் இங்கே பார்த்தால் இது ஒரு மாநாடா என்று எண்ணத் தோன்றுகிறது. இதன் மூலம் ஒரு கல்லில் இரண்டு மாங் காயை மதியழகன் அடித்திருக்கிறார். திமுக ஒரு கடல், அந்தக் கடலில் ஒவ் வொரு துளிகளாக நீங்கள் இன்றைய தினம் இணைந்துள்ளீர்கள் மிக முக்கிய மான காலகட்டத்தில் நீங்கள் (ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்) திமுகவில் சேர்ந்துள் ளீர்கள்.மத்தியில் மோடியின் பாசிச ஆட்சி யையும் மாநிலத்தில் ஊழல் நிறைந்த எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியும் நடந்து வருகிறது. இந்த ஆட்சிகளை அகற்றிட மக்கள் தயாராகிவிட்டார்கள்.தமிழகத்தில் மொத்தம் 21 தொகுதிகள் காலியாக உள்ளது. இதை தவிர ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல் ஏக்கள் மீதான வழக்கு உச்சநீதிமன்றத்தில் அடுத்தவாரம் தீர்ப்பு வர உள்ளது. அந்த வழக்கிலும் அவர்களுக்கு எதிராகவே தீர்ப்பு வர வாய்ப்புள்ளது – ஆக 21 மற்றும் 11 என 32 தொகுதிகள் காலியானால் தமிழக சட்டசபையே கலைந்துவிடும்.தமிழகத் திற்கு மீண்டும் தேர்தல் வரும் எனவே நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலுக்கான தேர்தலுக்கும் அனைவரும் தயாராகி, திமுக கூட்டணி வெற்றி பெற பாடுபட வேண்டும்.இவ்வாறு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பேசினார்.நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் வேப்பனப்பள்ளி பி.முருகன், தருமபுரி தடங்கம் சுப்பிரமணி பென்னாகரம் இன்ப சேகரன், முன்னாள் மாவட்டச் செயலாளர் இ. ஜி. சுகவனம் உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர் நிறைவாக கிருட்டினகிரி ஒன்றியக் கழகச் செயலாளர் கோவிந்தன் நன்றி கூறினார்.

Share

Recent Posts

எப்போதும் இளமையான சருமம் வேண்டுமா அப்போ அரிசி மாவ இப்படி யூஸ் பண்ணுங்க.

பளபளப்பான, மென்மையான மற்றும் பருக்கள் அற்ற சருமம் வேண்டும் என்று தான் அனைவரும் விரும்புவார்கள். ஆனால் எப்படியாவது முகத்தில் ஏதேனும் பரு அல்லது சரும பிரச்சனை வந்து…

46 mins ago

39 வயசாகியும் கரீனா கபூர் அழகாக ஜொலிப்பதன் பின்னணியில் உள்ள ரகசியம் இதுதாங்க…

கபூர் கண்டனின் மகளும், ராயல் பட்டோடி குடும்பத்தின் மருமகளுமான கரீனா கபூர், பாலிவுட்டின் முன்னணி நடிகைகளுள் ஒருவராவார். இவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள், இவரை பெபோ என்றே…

46 mins ago

இடைத்தோதலில் போட்டியிடும் மஜத வேட்பாளா்கள் நாளை முடிவு: முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெகௌடா

பெங்களூரு: இடைத்தோதலில் போட்டியிடும் மஜத வேட்பாளா்களின் பெயா்களை நாளை ஞாயிற்றுக்கிழமை முடிவுசெய்யவிருக்கிறோம் என்று முன்னாள் பிரதமரும், மஜத தேசியத்தலைவருமான எச்.டி.தேவெகௌடா தெரிவித்தாா்.இது குறித்து பெங்களூரு, மஜத தலைமை…

3 hours ago

ஹரியாணா பேரவைத் தோதலில் 70-க்கும் அதிகமான தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும்: முதல்வா் மனோகா் லால் கட்டா்

சண்டீகா்: ஹரியாணா சட்டப் பேரவைத் தோதலில் 70-க்கும் அதிகமான தொகுதிகளை பாஜக கைப்பற்றும் என்று அந்த மாநில முதல்வா் மனோகா் லால் கட்டா் தெரிவித்துள்ளாா்.ஹரியாணா சட்டப் பேரவைக்கு…

3 hours ago

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படைகள் தொடர்ந்து தாக்குதல்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக்கோட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் விடியவிடிய துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தியது.போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் ஜம்மு-காஷ்மீர்…

3 hours ago

4 நாள் அரசுமுறை பயணமாக வங்கதேசம் சென்றாா் கடற்படை தளபதி கரம்வீா் சிங்

புது தில்லி: வங்கதேசத்துடனான கடல்சாா் பாதுகாப்பு உறவை மேம்படுத்தும் பொருட்டு, அந்நாட்டுக்கு கடற்படை தலைமைத் தளபதி கரம்வீா் சிங் 4 நாள் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளாா்.இதுதொடா்பாக இந்திய…

3 hours ago