சாதாரண பொங்கல் இந்த வருடம் சரித்திர பொங்கலாகப் போகிறது – சரியான நேரத்தில் உணர்ந்து கொண்ட தமிழர்கள் : எடுத்த அசத்தல் முடிவு.!

பொங்கல் பண்டிகைக்கு மட்டுமே மண்பாண்டங்கள் விற்பனை ஆவதால் மண்பாண்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை மிகப்பெரிய கேள்விக்குறியாகி உள்ளது.

மனித நாகரிகம் தோன்றியதில் சுட்டு எடுக்கப்பட்ட மண்பாண்டங்களுக்கு பிரதான இடம் இருந்தது. சமைப்பது, உண்பது உள்பட வீடுகளின் அன்றாடத் தேவைகளில் மண்பாண்டங்கள் முக்கியப் பங்கு வதிதன.

வெங்கலம், பித்தளை, சில்வர் மாற்றங்கள் நிகழ்ந்தாலும் அனைத்து வீடுகளிலும் மண்பாண்டங்களும் குறிபிடத்தக்க இடத்தை வகித்து வந்தது.

தமிழர்களின் திருவிழாக்கள் அனைத்திலும் மண்பாடங்களே முக்கியத்துவம் பெறும்.காலப்போக்கில் தமிழர்களின் விழாக்களிலும் மண்பாண்டங்களைப் புறக்கணிக்க ஆரம்பித்துவிட்டனர்.

மண்பாண்டத்தை விடாமல் கடைப்பிடிப்பது பொங்கல் பண்டிககை மட்டும்தான். அதிலும் நகர்புறங்களில் பொங்கலுக்கும் சில்வர் பாத்திரங்களைப் பயன்படுத்தத் தொடங்கி பல வருடங்கள் ஆகிவிட்டன.

கிராமப்பபுறங்களில் மட்டுமே மண்பானைகளில் பொங்கல் வைக்கும் நடைமுறை உள்ளது. மண்பாண்டத் தொழில் செய்யும் பன்னீர்செல்வம் என்பவர் கூறுகையில், பரம்பரை பரம்பரையாக இத்தொழிலை நாங்கள் செய்து வருகிறோம். நான், எனது மனைவி, மகள், மகன், சகோததி அனைவரும் இந்தத் தொழிலைச் செய்து வருகிறோம்.மண் கிடைப்பது மிகவும் சிரமமாக உள்ளது.

உழைப்பும் கடுமையாக உள்ளது. ஆனால், பானைகளை குறைந்த விலைக்கே விற்பனை செய்ய வேண்டியுள்ளது.

கொஞ்சம் கூடுதலாக விலைசொன்னால் பானை வேண்டாம் சில்வர் பாத்திரத்திலேயே பொங்கல் வைத்துக்கொள்கிறோம் எனச் சொல்லிவிடுவார்களோ என பயமாக இருக்கிறது. இந்தத் தொழிலுக்கு நிதி உதவிக்கும் விற்பனைக்கும் அரசு உதவினால் நன்றாக இருக்கும்.

இந்த வருடம் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், மண் பானை வியாபாரத்தை காட்டிலும் சிறிய அளவிலான குவளைகள், ஐஸ் கிரீம் வைப்பது போன்ற செப்புகள் அதிக அளவில் விற்பனையாவதாக தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

மும்மொழி கொள்கை கட்டுரை போட்டி

சென்னை: மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை குறித்து, பள்ளி, கல்லுாரி மாணவ, - மாணவியருக்கு, தனியார் தொண்டு நிறுவனம் சார்பில், கட்டுரைப் போட்டி அறிவிக்கப்பட்டு உள்ளது.&'பள்ளிகளில், மும்மொழிக்…

6 hours ago

கலை கல்லூரிகள் திறப்பு: ராகிங் தடுக்கப்படுமா?

சென்னை: கோடை விடுமுறை முடிந்து, நாளை மறுநாள், கலை, அறிவியல் கல்லுாரிகள் திறக்கப்படுகின்றன.தமிழகத்தில் உள்ள பள்ளிகளில், இறுதியாண்டு தேர்வுகள் மற்றும் பொதுத் தேர்வுகள், ஏப்ரலில் முடிந்து, கோடை…

6 hours ago

முதல் ஆயிரம் மாணவர்களில் 30 பேர் மட்டும் தமிழர்கள் – ஜெஇஇ ரிசல்ட்

ஐஐடி, என்ஐடி கல்லூரிகளில் சேர தேசிய அளவில் நடத்தப்பட்ட ஜெஇஇ முதன்மைத் தேர்வில் முதல் ஆயிரம் இடங்களைப் பிடித்த மாணவர்களில் 30 பேர் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்…

6 hours ago

பத்தாம் வகுப்பு படித்த ஆண்களுக்கு மத்திய அரசு பணி

மத்திய அரசின் கீழ் செயல்படும் எல்லை சாலை கழகத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள ஆண்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள்…

6 hours ago

உங்கள் வேலைவாய்ப்பை அதிகப்படுத்துவதற்கான திறன்கள்…!

வேலைவாய்ப்பு திறன்எழுத்தாளர்: வினோத் குமார் சங்கரன்Gyanamite, தமிழில் திறமை மற்றும் வேலைவாய்ப்பை வளர்க்க நிறைய வீடியோக்கள் மற்றும் வலைப்பதிவுகளைகொண்ட தளம்.நம் நாட்டில் உள்ள மாணவர்களையும் இளைஞர்களையும்,அவர்களுக்குத் தொடர்புடைய…

6 hours ago

ரூ.60,000 ஊதியத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை

ONGC நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.காலிப் பணியிடங்கள்:Medical Officer பிரிவில் 45 பணியிடங்களும், Security Officer…

6 hours ago