அரியலூரில் அதிகாலை நிறுத்தப்படும் வாகனங்கள்..! – காவலர்களின் ஆரோக்ய முயற்சி

அரியலூரில் அதிகாலை நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துகளை தவிர்ப்பதற்காக காவல்துறையினர் ஆரோக்யமான முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

பொங்கல் காலம் என்பதால் சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பும் மக்கள் கூட்டத்தால், நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளன. அதேசமயம் தொடர் பணியால், பேருந்துகள் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள் சோர்வடைந்து, அதிகாலை நேரத்தில் அரை தூக்கத்தில் வாகனத்தை இயக்குகின்றனர்.

இதனால் விபத்துக்கள் ஏற்பட்டு பரிதாப உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
எனவே இதை தடுப்பதற்காக அரியலூர் எஸ்பி சீனிவாசன் புதிய முயற்சி ஒன்றை கடைபிடித்து வருகிறார். அவரது அறிவுரைப்படி அரியலூர் நெடுஞ்சாலையில் இரவு 1 மணி முதல் அதிகாலை 5 மணி வரை வரும் வாகனங்களை நிறுத்தும் காவல்துறையினர், ஓட்டுநர்களிடம் சிறிது நேரம் பேசுகின்றனர். அந்தப் பேச்சில் ஓட்டுநர்களின் அரைதூக்கம் கலைந்ததும், அவர்களுக்கு சூடான டீ அல்லது நீர் கொடுக்கின்றனர்.

இதனால் அவர்களின் தூக்கம் கலைந்து புத்துணர்வு கிடைக்கிறது. இதன்மூலம் அதிகாலை விபத்துகளும் குறைகின்றனர். இந்த நடைமுறைப்படி டி. பாலூர் காவல்துறையினரும் அதிகாலையில் ஓட்டுநர்களுக்கு டீ வழங்கியுள்ளனர். இந்த முறையை தமிழகம் முழுவதும் கடைபிடித்தால், பெரும்பாலான விபத்துகளை தடுக்கலாம் என ஓட்டுநர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Share

Recent Posts

பாஜகவிற்கு அதிர்ச்சி அளித்த மரணம்! சிகிச்சை பலனின்றி மறைந்தார் அருண் ஜெட்லீ!

முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜகவின் மூத்த மூத்த தலைவருமான அருண் ஜெட்லி உடல்நிலை குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில்…

12 mins ago

பிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறும் நபர்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

பிக்பாஸ் மூன்றாவது சீசன் தொடங்கி 60வது நாட்களைக் கடந்துவிட்டது. இதுவரை பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா, சாக்ஷி, சரவணன், மதுமிதா அபிராமி ஆகியோர் வெளியேறியுள்ளனர்.…

12 mins ago

அருண் ஜேட்லியின் மறைவு நமது பொது வாழ்க்கையில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது: குடியரசுத் தலைவர் இரங்கல்

புதுடெல்லி: முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மறைவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஒரு…

12 mins ago

அமைச்சர்களுக்கு எடப்பாடி வைத்த டெஸ்ட்…அதிமுக அதிகாரத்தை கைப்பற்றிய இபிஎஸ்!

அதிமுகவில் தற்போது முழு அதிகாரத்தையும் எடப்பாடி கைப்பற்றி விட்டதாக தகவல் வருகின்றன. இதனால் ஓபிஎஸ் தரப்புக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். ஓபிஎஸ்க்கு மத்தியில்…

12 mins ago

மாணவ போராளி அருண் ஜெட்லி, கடந்து வந்த பாதை!!

அருண் ஜெட்லி, கடந்த 1952-ஆம் ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி, புதுடெல்லியில் பிறந்தார். தனது பள்ளி, கல்லூரி படிப்பை டெல்லியில் முடித்தார். தன்னுடைய தந்தையை போலவே சட்டம்…

12 mins ago

#BREAKING | அருண் ஜெட்லி காலமானார்

பாஜக மூத்த தலைரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஜெட்லி, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலமானார். பாஜக மூத்த தலைவரான…

12 mins ago