சேலத்தில் கறிக்கடைக்காரரை தாக்கிய போலீஸ் எஸ்ஐக்கள் இருவர் இடமாற்றம்! ‘முதியவரிடம் மன்னிப்பு கேட்டு கெஞ்சல்!!’

சேலத்தை அடுத்த கம்மாளப்பட்டியைச் சேர்ந்தவர் மூக்குத்தி கவுண்டர் (75). இவர், அன்னதானப்பட்டி போலீஸ் நிலையம் அருகே கறிக்கடை நடத்தி வருகிறார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 13) என்பதால், கறிக்கடையில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக இருந்தது. அங்கு போலீஸ் ஜீப்பில் வந்த அன்னதானப்பட்டி சப்&இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணி, வாகனத்தில் இருந்தபடியே, ‘2 கிலோ ஆட்டுக்கறி போடுடா…’ என மரியாதைக்குறைவாகவும், அதிகார தொனியிலும் கேட்டார். அதற்கு மூக்குத்தி கவுண்டர், ‘மரியாதையாக பேசுங்கள்’ என்று கூறினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த எஸ்ஐ பாலசுப்ரமணி மற்றும் அவருடன் வந்த எஸ்எஸ்ஐ சிவபெருமாள் ஆகியோர் வாகனத்தில் இருந்து இறங்கி வந்து மூக்குத்திகவுண்டர் மற்றும் அவருடைய மனைவி பழனியம்மாளை தகாத வார்த்தைகளால் திட்டினர்.
மேலும், அந்த முதியவரை அடித்து உதைத்து வலுக்கட்டாயமாக போலீஸ் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மூக்குத்தி கவுண்டரின் மகன் விஜயகுமார், போலீஸ் நிலையத்துக்கு சென்றார். எதற்காக எனது தந்தையை அடித்தீர்கள்? என கேட்டார். இதைக்கேட்ட அங்கிருந்த போலீசார் விஜயகுமாரையும் தாக்கியுள்ளனர். பிறகு, தந்தை, மகன் இருவரிடமும் ஒரு வெற்றுத்தாளில் கைரேகை வாங்கிக்கொண்டு போலீசார் அவர்களை விடுவித்தனர்.

போலீசார் தாக்கியதில் காயம் அடைந்த இருவரும், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கருக்கு தகவல் அளிக்கப்பட்டது. கமிஷனர் விசாரணை நடத்தினார்.

கறிக்கடைக்காரரை தாக்கிய எஸ்ஐ பாலசுப்ரமணி, எஸ்எஸ்ஐ சிவபெருமாள் ஆகியோரை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டார். அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கும் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையே, தங்கள் வேலைக்கு பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக எஸ்ஐ பாலசுப்ரமணி, கறிக்கடைக்காரர் மூக்குத்திகவுண்டர், அவருடைய மனைவி பழனியம்மாள், மகன் விஜயகுமார் ஆகியோரிடம் மன்னிப்பு கேட்டார். இது வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

Share

Recent Posts

பள்ளி மாணவர்களுடன் தகாத உறவு வைத்த ஆசிரியை ‘போக்சோ’ சட்டத்தில் கைது

ஆரணி:ஆரணியை அடுத்த பையூர் காலனி பகுதியை சேர்ந்தவர் உமேஷ்குமார் (வயது 45), ஆசிரியர். இவரது மனைவி நித்யா (30). வேலூர் மாவட்டம் மாமண்டூர் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக…

41 mins ago

குடியாத்தம் அருகே பிளாஸ்டிக் கிடங்கில் தீ விபத்து

குடியாத்தம்: குடியாத்தம் அருகே பழைய பிளாஸ்டிக் பொருள்கள் சேமித்து வைக்கும் கிடங்கில் ஏற்பட்ட திடீா் தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருள்கள் எரிந்து…

41 mins ago

கிளி ஜோசியத்தை நம்பி நான் அரசியல் செய்யவில்லை- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

சென்னை:தமிழகத்தில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகளும் புதுச்சேரி தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. தமிழ்நாடு…

41 mins ago

அ.தி.மு.க. சிறைக்கு செல்வதை தவிர்க்கவே பா.ஜ.க.வுடன் கூட்டணி- ஸ்டாலின் குற்றச்சாட்டு

அரூர்:அரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கிருஷ்ணகுமாருக்கு ஆதரவாக அரூரில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது, அமித்ஷாவிடம் அ.தி.மு.க.வை எடப்பாடி பழனிசாமி அடகு…

41 mins ago

ஈரோடு தொகுயில் உதய சூரியன் சின்னம்… பணிந்தது ம.தி.மு.க

திமுக கூட்டணியில் மதிமுக ஈரோடு தொகுதியில் போட்டியிடுகிறது. அந்த கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கையில் மதிமுக தனி சின்னத்தில் நிற்கும் என்று அறிவித்தார்.ஆனால்…

41 mins ago

திருப்பூர் தொகுதியில் 27-ந்தேதி பிரசாரத்தை தொடங்குகிறார் பிரேமலதா

சென்னை:அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க. 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தே.மு.தி.க. வேட்பாளர்களை ஆதரித்து கடந்த காலங்களில் விஜயகாந்த் தேர்தல் பிரசாரம் செய்தார். தற்போது உடல் நலம்…

41 mins ago