எங்க எல்லை இல்லை… ஆடு திருட்டில் அலைக்கழித்த போலீசார்

மணப்பாறை: எங்க எல்லை இல்லை… அலைக்கழித்த போலீசாரால் நொந்து போய் விட்டார் ஆட்டை தொலைத்தவர்கள். என்ன விஷயம் தெரியுங்களா?

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே கரட்டுப்பட்டி, வடதோட்டத்தில் வசித்து வருபவர் செபஸ்தியான். திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை அருகே இவரது வீடு உள்ளது. நேற்று மாலை இவர் தனது ஒரு ஆட்டை புல்வெளியில் மேய்ச்சலுக்கு கட்டியிருந்தார்.

அப்போது ஒரு ஆட்டோவில் வந்த 3 பேர் ஆட்டை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு தப்பி விட்டனர். இதை கண்ட செபஸ்தியான், அவரது மகன் ஜான்பிரிட்டோ பைக்கில் அவர்களை துரத்தினர்.
இதைக்கண்ட கடத்தல்காரர்கள் வந்த வழியிலேயே ஆட்டோவை திருப்பினர். அப்போது எதிரே பஸ் வந்ததால் நிலை தடுமாறி ஆட்டோ கவிழ்ந்தது.

அப்போது ஆட்டோவில் வந்த ஒரு நபர் பஸ்சில் ஏறி தப்பினார். 2 பேர் சிக்கினர். அவர்களை செபஸ்தியான் மற்றும் பொதுமக்கள் மடக்கி அங்கு வந்த பேட்ரோல் மற்றும் வையம்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் திருச்சி உறையூர் நடராஜன் (35), மணிகண்டன்(36) என்பது தெரிய வந்தது.

இந்நிலையில் ஆடு திருடிய இடம் தங்கள் எல்லை இல்லை என வையம்பட்டி போலீசார் சொல்லி மணப்பாறை போலீஸ் ஸ்டேஷனுக்கு போலீசார் கொண்டு வந்தனர். அங்கு வந்த பின் மணப்பாறை போலீசார் சம்பவ இடம் தங்கள் எல்லை இல்லை என்றனர். அப்போது சாலையில் நடக்கும் சம்பவங்கள் மட்டுமே தங்களது கட்டுப்பாட்டில் வரும் சாலைக்கு வெளியே நடக்கும் சம்பவங்கள் மணப்பாறை கட்டுப்பாட்டில் வரும் என வையம்பட்டி போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து 4 மணி நேர அலைக்கழிப்பிற்குப்பின் ஒரு வழியாக வழக்கை மணப்பாறை போலீசார் ஏற்றுக் கொண்டனர்.

Share
Tags: vivegam

Recent Posts

மும்மொழி கொள்கை கட்டுரை போட்டி

சென்னை: மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை குறித்து, பள்ளி, கல்லுாரி மாணவ, - மாணவியருக்கு, தனியார் தொண்டு நிறுவனம் சார்பில், கட்டுரைப் போட்டி அறிவிக்கப்பட்டு உள்ளது.&'பள்ளிகளில், மும்மொழிக்…

6 hours ago

கலை கல்லூரிகள் திறப்பு: ராகிங் தடுக்கப்படுமா?

சென்னை: கோடை விடுமுறை முடிந்து, நாளை மறுநாள், கலை, அறிவியல் கல்லுாரிகள் திறக்கப்படுகின்றன.தமிழகத்தில் உள்ள பள்ளிகளில், இறுதியாண்டு தேர்வுகள் மற்றும் பொதுத் தேர்வுகள், ஏப்ரலில் முடிந்து, கோடை…

6 hours ago

முதல் ஆயிரம் மாணவர்களில் 30 பேர் மட்டும் தமிழர்கள் – ஜெஇஇ ரிசல்ட்

ஐஐடி, என்ஐடி கல்லூரிகளில் சேர தேசிய அளவில் நடத்தப்பட்ட ஜெஇஇ முதன்மைத் தேர்வில் முதல் ஆயிரம் இடங்களைப் பிடித்த மாணவர்களில் 30 பேர் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்…

6 hours ago

பத்தாம் வகுப்பு படித்த ஆண்களுக்கு மத்திய அரசு பணி

மத்திய அரசின் கீழ் செயல்படும் எல்லை சாலை கழகத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள ஆண்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள்…

6 hours ago

உங்கள் வேலைவாய்ப்பை அதிகப்படுத்துவதற்கான திறன்கள்…!

வேலைவாய்ப்பு திறன்எழுத்தாளர்: வினோத் குமார் சங்கரன்Gyanamite, தமிழில் திறமை மற்றும் வேலைவாய்ப்பை வளர்க்க நிறைய வீடியோக்கள் மற்றும் வலைப்பதிவுகளைகொண்ட தளம்.நம் நாட்டில் உள்ள மாணவர்களையும் இளைஞர்களையும்,அவர்களுக்குத் தொடர்புடைய…

6 hours ago

ரூ.60,000 ஊதியத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை

ONGC நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.காலிப் பணியிடங்கள்:Medical Officer பிரிவில் 45 பணியிடங்களும், Security Officer…

6 hours ago