பரபரப்பான அரசியல் சூழலில் கொங்கு மண்டலத்திலிருந்து அமைச்சர் தங்கமணிக்கு பறந்த கடிதம் – வெளியான அதிர்ச்சி தகவல்.!

கடந்த 2017 ஆம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய சட்டப்போராட்டத்தின் பயனாக தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைகள் ஓரத்தில் அமைக்கப்பட்டிருந்த 3321 மதுக்கடைகள் மூடப்பட்டன. அத்துடன் தமிழக அரசு முடித்திருந்தால் எந்த பிரச்சினையும் எழப்போவதில்லை.

படிப்படியாக மதுவிலக்கு என்பது தான் அரசின் கொள்கை என்று கூறிவரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, உச்சநீதிமன்றத் தீர்ப்பை ஓர் வாய்ப்பாக பயன்படுத்தி அதிக எண்ணிக்கையிலான கடைகளை மூடியிருக்க வேண்டும். மாறாக மூடப்பட்டக் கடைகளை குடியிருப்புப் பகுதிகளில் வலுக்கட்டாயமாக திறக்க முற்பட்டதால் தான் தமிழக அளவில் போராட்டம் வெடித்து தேவையற்ற பதற்றம் ஏற்பட்டது.

பொதுவாக குடிப்பது ஆண்களாக இருந்தாலும் அதனால் பாதிக்கப்படுவது பெண்களும், குழந்தைகளும் தான்.
கணவனோ, தந்தையோ, மகனோ, சகோதரனோ குடித்து விட்டு வருவதால் பொருளாதாரம், குடும்ப வன்முறை, உடல்நலம், மனநலம் என அனைத்து வகைகளிலும் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில், திருப்பூர் மாவட்டம், சாமளாபுரம் பகுதியில் அதிமுக பிரமுகருக்கு டாஸ்மாக் கடை அமைக்க சூலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் சிபாரிசு கடிதத்தை கொடுத்தது, பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அவர் நமது கழகத்தின் பொறுப்புகளில் சிறப்பாக பணியாற்றியவர் என்பதால் அவரின் இடத்தில் டாஸ்மாக் கடை வைத்து நடந்த அனுமதிக்க அரசு அனுமதியளிக்க சிபாரிசு செய்ய வேண்டுமென சூலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் மின்சாரம் மற்றும் மதுவிலக்குத்துறை அமைச்சர் பி.தங்கமணிக்கு கடிதம்மூலம் சிபாரிசு செய்துள்ளார். இது அப்பகுதி மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share

Recent Posts

பொங்கலுக்கு விலை குறைந்த சாம்சங் ஸ்மார்ட்போன்கள்.!

தமிழர் திருநாளாம் தை பொங்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. இதையொட்டி சாம்சங் ஸ்மார்ட்போன் நிறுவனம் தற்போது விலையை குறைந்து விற்பனையை அதிரவிட்டுள்ளது.இதனால் ஏராளமான வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போன்களை வாங்க முன்…

3 hours ago

வோடபோன் வழங்குகிறது மேலும் புதிய சலுகை ரூ.396க்கு உங்களுக்கு கிடைக்கும் 96.6GB டேட்டா…!

தொடர்ந்து வோடபோன் நிறுவனம் சமீபத்தில் ரூ.1,499 விலையில் புதிய சலுகையை அறிவித்தது. பின் சில சலுகைகளை மாற்றியமைத்து பயனர்களுக்கு அதிகளவு பலன்களை வழங்கியது. இதைத்தொடர்ந்து வோடபோன் ரூ.396…

3 hours ago

ட்ராய் யின் அதிரடி அறிவிப்பு 100 DTH சேனல்களுக்கு மாதம் ரூ.153 கட்டணம் செலுத்த வேண்டும்

மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் கேபிள் மற்றும் DTH . சேவை கட்டணம் பற்றி புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் 100 இலவச அல்லது…

3 hours ago

மாதம் 100 டிவி சேனல்கள் ரூ.153 கட்டனம் : டிராய்

இந்திய தொலைத் தொடர்பு ஒழங்குமுறை ஆனையம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் , விருப்பமான 100 டிவி சேனல்களை ரூ.153 கட்டணத்தில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்த…

3 hours ago

Honor 10 Lite 24MP Ai செல்பி கேமராவுடன் அறிமுகம்

சிறப்பு செய்திHonor முதல் முறையாக டியூவ்ட்ராப் நோட்ச் உடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 2மாதங்களுக்கு முன்பே சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த போன் பிளிப்கார்டில் எக்ஸ்க்ளுசிவாக விற்பனை…

3 hours ago

பொங்கல் பிளான் தெறிக்கவிடும் பிஎஸ்என்எல்: ஏர்டெல்லுக்கு சாவல்.!

பிஎஸ்என்எல் நிறுவனம் பொங்கல் பிளான் போல் ரூ.798க்கு அறிவித்துள்ளது. இந்த ஆப்பர் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.மேலும், இது ஏரடெல் நிறுவனத்திற்கு கடும் போட்டியை ஏற்படும்…

3 hours ago