ஜெயலலிதா:கொடநாடு கொலைகள்

ஜெயலலிதா இறந்த பிறகும், அதற்கு முன்பும் கொடநாடு எஸ்டேட்டில் பல கொள்ளை – கொலை முயற்சிகள் நடந்தன. பல மரணங்கள் நிகழ்ந்து மூடி மறைக்கப்பட்டன. ஒவ்வொரு மரணத்துக்கும் ஒரு காரணம் சொல்லப் பட்டது.

ஜெயலலிதா இறந்த பிறகு கொடநாடு எஸ்டேட்டில் 2017-ல் நடந்த கொள்ளை மற்றும் கொலை சம்பவத்தை தொடர்ந்து, கார் விபத்து – கத்தி குத்து – லாரி விபத்து உள்பட பல்வேறு கொலைகள் அரங்கேறின. இதுகுறித்து, தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் அதிச்சியான தகவல்களை ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளார்.

கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 24.4.2017-ந் தேதி காவலாளி ஓம்பிரகாஷ் கொலை செய்யப்பட்டார். இதில் மற்றொரு காவலாளி கிருஷ்ணபகதூருக்கு படுகாயம் ஏற்பட்டது.
மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பணம், தங்கக்கட்டிகள், ஏராளமான ஆவணங்கள் மற்றும் பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டது.

இதுகுறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் மற்றும் சிலர் வழக்கில் சம்பந்தப்பட்டு இருப்பது தெரியவந்தது.

சம்பவம் நடந்த இரண்டு தினங்களில் சேலத்தில் நடந்த ஒரு விபத்தில் டிரைவர் கனகராஜ் கொல்லப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக கேரளாவை சேர்ந்த சயன், வாளையார் மனோஜ், மனோஜ்சாமி, திபு, ஜித்தின்ராய், உதயகுமார், சந்தோஷ்சாமி, சதீசன், சம்சீர் அலி, பிஜின் ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே வழக்கு விசாரணைக்கு திபு ஆஜராகவில்லை. அவர் வேறொரு வழக்கில் கண்ணனூர் சிறையில் இருந்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. வழக்கில் தொடர்புடைய மற்ற 7 பேரும் கோர்ட்டில் ஆஜராகினர். கேரள போலீசார் திபுவை மாவட்ட நீதிபதி வடமலை முன்பு ஆஜர்படுத்தினர்.

இதைத்தொடர்ந்து, முக்கிய குற்றவாளிகளின் மர்ம மரணங்கள் இந்தியாவின் கொடூரமான கொலைகள் நடந்த வியாபம் ஊழல் மர்ம மரணங்களை நினைவூட்டுவதாக மாறின.

கோடநாடு கொள்ளை சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டது போயஸ் தோட்டத்தில் கார் டிரைவராக பணியாற்றிய கனகராஜ்தான். அவரது நண்பரான கோவையை சேர்ந்த சயன் அவரது நண்பர் சஜீவன் ஏற்பாட்டின் பேரில் கேரளாவை சேர்ந்த கூலிப்படையினர் இந்த கொள்ளையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

கொடநாடு கொள்ளையின் மூளையாக செயல்பட்ட டிரைவர் கனகராஜ் சேலம் அருகே கார் மோதி விபத்தில் பலியானார். இது விபத்தா? கொலையா என்று தெரியாமலேயே வழக்கு முடிக்கப்பட்டது.

கனகராஜின் நண்பரான சயன், அவரது மனைவி வினுப்பிரியா, மகள் நீது ஆகியோருடன் காரில் கேரளாவுக்கு தப்பிச் சென்ற போது பாலக்காடு அருகே லாரி மோதி விபத்தில் சிக்கினார். இதில் வினுப்பிரியா, நீது ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயம் அடைந்த சயன் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அந்த சயனை கொல்ல பல முயற்சிகள் நடந்த நிலையில், அவர் கேரளா தப்பிச் சென்றார். தொடர்ந்து, டெல்லியில் தலைமறைவான சயன் தற்போது கொடநாடு கொள்ளை மற்றும் கொலைகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாகவும், 5 கோடி ரூபாய் கொடுத்து கூலிப்படை அமைத்து இந்த செயல்களை அவர் செய்ததாக, தெகல்கா முன்னாள் ஆசிரியர் துணையுடன் டெல்லி பத்திரிகையாளர்கள் முன்பாக வெளிப்படையாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

Share

Recent Posts

எப்போதும் இளமையான சருமம் வேண்டுமா அப்போ அரிசி மாவ இப்படி யூஸ் பண்ணுங்க.

பளபளப்பான, மென்மையான மற்றும் பருக்கள் அற்ற சருமம் வேண்டும் என்று தான் அனைவரும் விரும்புவார்கள். ஆனால் எப்படியாவது முகத்தில் ஏதேனும் பரு அல்லது சரும பிரச்சனை வந்து…

51 mins ago

39 வயசாகியும் கரீனா கபூர் அழகாக ஜொலிப்பதன் பின்னணியில் உள்ள ரகசியம் இதுதாங்க…

கபூர் கண்டனின் மகளும், ராயல் பட்டோடி குடும்பத்தின் மருமகளுமான கரீனா கபூர், பாலிவுட்டின் முன்னணி நடிகைகளுள் ஒருவராவார். இவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள், இவரை பெபோ என்றே…

51 mins ago

இடைத்தோதலில் போட்டியிடும் மஜத வேட்பாளா்கள் நாளை முடிவு: முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெகௌடா

பெங்களூரு: இடைத்தோதலில் போட்டியிடும் மஜத வேட்பாளா்களின் பெயா்களை நாளை ஞாயிற்றுக்கிழமை முடிவுசெய்யவிருக்கிறோம் என்று முன்னாள் பிரதமரும், மஜத தேசியத்தலைவருமான எச்.டி.தேவெகௌடா தெரிவித்தாா்.இது குறித்து பெங்களூரு, மஜத தலைமை…

3 hours ago

ஹரியாணா பேரவைத் தோதலில் 70-க்கும் அதிகமான தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும்: முதல்வா் மனோகா் லால் கட்டா்

சண்டீகா்: ஹரியாணா சட்டப் பேரவைத் தோதலில் 70-க்கும் அதிகமான தொகுதிகளை பாஜக கைப்பற்றும் என்று அந்த மாநில முதல்வா் மனோகா் லால் கட்டா் தெரிவித்துள்ளாா்.ஹரியாணா சட்டப் பேரவைக்கு…

3 hours ago

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படைகள் தொடர்ந்து தாக்குதல்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக்கோட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் விடியவிடிய துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தியது.போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் ஜம்மு-காஷ்மீர்…

3 hours ago

4 நாள் அரசுமுறை பயணமாக வங்கதேசம் சென்றாா் கடற்படை தளபதி கரம்வீா் சிங்

புது தில்லி: வங்கதேசத்துடனான கடல்சாா் பாதுகாப்பு உறவை மேம்படுத்தும் பொருட்டு, அந்நாட்டுக்கு கடற்படை தலைமைத் தளபதி கரம்வீா் சிங் 4 நாள் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளாா்.இதுதொடா்பாக இந்திய…

3 hours ago