காவல் நிலையத்தைக் கலாய்த்த டிக்டாக்! -ஆக்ஷனுக்கு எதிராக ஆக்ஷன்!

சிவகாசி கிழக்கு காவல் நிலையைத்தில் அடுத்தடுத்து பதிவு செய்த இரண்டு வழக்குகளும் ‘போதை’ சம்பந்தப்பட்டவை. கைது செய்யப்பட்டவர்கள் இளைஞர்களாக உள்ளனர்.

அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட ரூ.6.5 லட்சம் மதிப்பிலான பான்மசாலா மற்றும் புகையிலைப் பொருட்கள் சிவகாசி பாறைப்பட்டி சோதனைச்சாவடியில் சிவகாசி பாறைப்பட்டி சோதனைச் சாவடியில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அந்த வேனில் வந்த மூன்று இளைஞர்களிடமிருந்து ரூ.1 லட்சத்து 98 ஆயிரமும் கைப்பற்றப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தமிழகத்தில் பான்மசாலா போன்ற புகையிலைப் பொருட்கள் விற்பனையெல்லாம் ஜுஜுபி தான்!
இதைக் காட்டிலும் பெரிய விவகாரமாக இருக்கிறது, இளைஞர்கள் நால்வர் கைது செய்யப்பட்ட வழக்கு. அது என்னவென்று பார்ப்போம்!

‘வந்த இடத்துல வாயை வச்சிட்டு சும்மா இருக்காம.. தேவையில்லாம பேசி மாட்டிக்கிட்டானுவ..’ என்று சிவகாசி காக்கிகள் சிரித்தபடி சொன்ன விவகாரம் இது –

சிவகாசி துலுக்கப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் நால்வர், பசுபதி பாண்டியன் நினைவு தினத்தை முன்னிட்டு, வாகனத்தில் செல்வதற்கு அனுமதி கேட்டு சிவகாசி கிழக்கு காவல் நிலையம் வந்தனர். காவல் நிலையங்களின் மீது அவர்களுக்கு அப்படி என்ன கோபமோ? வந்த வேலையைக் காட்டிலும், பெரிய காரியம் ஒன்றை அரங்கேற்றினர்.

சிறுத்தை என்ற திரைப்படத்தில் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடிகர் கார்த்தி, கொடூர வில்லன் ஒருவனுடைய வீட்டு வாசல்படியில் கால் வைக்க முற்படும்போது, ‘ராக்கெட்.. வாஸ்து பார்த்து வலது கால் எடுத்து வச்சு போறதுக்கு இது என்ன மாமியார் வீடா? எச்சக்கல.. கேப்மாரி.. மொள்ளமாரி.. முடிச்சவிக்கி வீடு இது.. இதுக்கெல்லாம் போடு லெஃப்ட் லெக்..’ என்று வசனம் பேசி, இடது காலை ஸ்ட்ராங் ஆக எடுத்து வைப்பார்.

இந்த இளைஞர்களுக்கு, காவல் நிலையத்தைப் பலரும் மாமியார் வீட்டுக்கு ஒப்பிடுவது நினைவுக்கு வந்து தொலைத்திருக்கிறது. அதனால், டிக்டாக் செயலியில் உள்ள சிறுத்தை வசனத்துக்கேற்ப, சிவகாசி காவல் நிலைய வாசலில் ‘ஆக்ஷன்’ காட்டியதோடு, சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டனர். காவல் நிலையம் என்பது மொள்ளமாரி.. கேப்மாரி.. முடிச்சவிக்கிகளின் வீடா? வந்ததே கோபம் காக்கிகளுக்கு. ஈஸ்வரன், சங்கரேஸ்வரன், முருகேசன், குருமதன் ஆகிய நான்கு இளைஞர்களின் மீது, 294(b), 504, 505, ITACT4 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

இன்றைய இளைஞர்களின் டிக்டாக் மோகமானது, ‘ஆட்டைக் கடிச்சு.. மாட்டைக் கடிச்சு.. கடைசில மனுஷனைக் கடிச்ச கதையா..’ காவல் நிலையத்தைக் கிண்டல் பண்ணும் அளவுக்குத் துணிச்சலைத் தந்தது கொடுமைதான்!

Share

Recent Posts

ஹிப்ஹாப் ஆதியின் நட்பே துணை படத்தின் ரிலீஸ் தேதி வெளியிட்ட படக்குழு

பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் `நட்பே துணை'. ஹாக்கி விளையாட்டு மற்றும் நட்பை மையப்படுத்திய இந்த படத்தில் ஆதி ஜோடியாக…

2 hours ago

படப்பிடிப்பில் இயக்குனருடன் பிரபல நடிகை மோதல்

தமிழில் பாயும் புலி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஆறாது சினம், சத்ரியன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா தத்தா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானார்.தற்போது…

2 hours ago

காஷ்மீரில் அத்துமீறி பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி

ஜம்மு:ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடந்த பிப்ரவரி மாதம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 துணை ராணுவ படையினர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு சென்று தீவிரவாத முகாம்கள்…

2 hours ago

கன்னியாகுமரி தொகுதியில் கோடீஸ்வர வேட்பாளர்களுக்கு இடையே போட்டியா?

கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ், பாஜக மற்றும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களின் சொத்து பட்டியல் அடிப்படையில் பார்த்தால் அங்கு கோடீஸ்வர வேட்பாளர்களுக்கு இடையிலான போட்டி போல் காட்சியளிக்கிறது.17-ஆவது…

2 hours ago

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும்; அமைச்சர் அருண் ஜெட்லி உறுதி!

2019-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் மாற்றத்தை கொண்டுவருபவர் மோடி தான் எனவும், வரும் தேர்தலில் பாஜக வெற்றிப் பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என மத்திய நிதி…

2 hours ago

Exclusive Interview: மோடி அலை குறித்து மே 23 அன்று தெரியும் -அருண் ஜேட்லி

மத்திய அமைச்சர் நிதி மந்திரி அருண் ஜெட்லியிடம் ஜி நியூஸ் பத்திரிகை தலைமை ஆசிரியர் சுதிர் சௌத்ரி நேர்காணலை மேற்க்கொண்டார். அப்பொழுது அவர் வரும் மக்களவை தேர்தலைக்…

2 hours ago