3 ஆண்டுகள் சிறை தண்டனை:தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி வழக்கில் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.

தீ வைத்த வழக்கில் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை:

திமுக ஆட்சிக்காலத்தில் ஓசூர் அருகே நடைபெற்ற போராட்டத்தில் பேருந்துகள் மீது கல் வீசி , தீ வைத்த வழக்கில் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தனது விளையாட்டு துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

3 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு:

இதன் பின் 3 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இதன் பின் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.அதில் பாலகிருஷ்ணரெட்டி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பொதுச்சொத்து சேதவழக்கில் தரப்பட்ட தீர்ப்பை நிறுத்திவைக்க வேண்டும்.எனக்கு எதிராக நேரடி குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை.தீர்ப்புக்கு தடைவிதிக்கவேண்டும்.”நான் அந்த வழக்கில் 72-வது குற்றவாளி” . “காவலர் அளித்த புகார் மற்றும் சாட்சியத்தின் அடிப்படையில் என் மீது வழக்கு உள்ளது “.காவல் ஆய்வாளரை திட்டியதால் என் மீது வழக்கு என காவலரே சாட்சி அளித்துள்ளார். 28 சாட்சிகளில் ஒருவர் கூட என் பெயரை சொல்லவில்லை .தீர்ப்பு வந்தவுடனேயே அமைச்சர் பதவியிலிருந்து விலகிவிட்டதால் எனது கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்த உயர்நீதிமன்றம் ,பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிகிக்கப்பட்ட தீர்ப்பை ஏன் தடுக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியது . பாலகிருஷ்ணன்ரெட்டி அரசியல் தலைவராக உள்ள நிலையில் வழக்கை எடுத்துச்செல்வதில் முன் மாதிரியாக இருக்க வேண்டும். 3ஆண்டு சிறைதண்டனையை தடுக்க சொன்னால் சரி. தீர்ப்பையேஏன் தடுக்கவேண்டும்.ஏன் தடை விதிக்க வேண்டும். அரசியல் கட்சி தலைவராக உள்ள நிலையில் வழக்கை எடுத்து செல்வதில் முன்மாதிரியாக இருக்கனும்.ஏன் தீர்பை தடை செய்ய வேண்டும்.பாலகிருஷ்ணரெட்டிக்கு கீழ்நீதிமன்றம்அளித்ததீர்ப்பு தவறுஎன கூறுகிறீர்களா? என்றும் தண்டனைக்கு தடை விதிக்கலாமா? வேண்டாமா? என்பதை மட்டும் கூறுங்கள் என்றும் கேள்வி எழுப்பியது .காவல்துறையின்விளக்கத்தை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

பாலகிருஷ்ணா ரெட்டி வழக்கில் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு:

இந்நிலையில் பாலகிருஷ்ணா ரெட்டி வழக்கில் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.பாலகிருஷ்ணரெட்டி விடுத்த கோரிக்கையை நிராகரித்தது சென்னை உயர்நீதிமன்றம்.

Share

Recent Posts

ஹிப்ஹாப் ஆதியின் நட்பே துணை படத்தின் ரிலீஸ் தேதி வெளியிட்ட படக்குழு

பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் `நட்பே துணை'. ஹாக்கி விளையாட்டு மற்றும் நட்பை மையப்படுத்திய இந்த படத்தில் ஆதி ஜோடியாக…

3 hours ago

படப்பிடிப்பில் இயக்குனருடன் பிரபல நடிகை மோதல்

தமிழில் பாயும் புலி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஆறாது சினம், சத்ரியன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா தத்தா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானார்.தற்போது…

3 hours ago

காஷ்மீரில் அத்துமீறி பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி

ஜம்மு:ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடந்த பிப்ரவரி மாதம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 துணை ராணுவ படையினர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு சென்று தீவிரவாத முகாம்கள்…

3 hours ago

கன்னியாகுமரி தொகுதியில் கோடீஸ்வர வேட்பாளர்களுக்கு இடையே போட்டியா?

கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ், பாஜக மற்றும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களின் சொத்து பட்டியல் அடிப்படையில் பார்த்தால் அங்கு கோடீஸ்வர வேட்பாளர்களுக்கு இடையிலான போட்டி போல் காட்சியளிக்கிறது.17-ஆவது…

3 hours ago

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும்; அமைச்சர் அருண் ஜெட்லி உறுதி!

2019-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் மாற்றத்தை கொண்டுவருபவர் மோடி தான் எனவும், வரும் தேர்தலில் பாஜக வெற்றிப் பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என மத்திய நிதி…

3 hours ago

Exclusive Interview: மோடி அலை குறித்து மே 23 அன்று தெரியும் -அருண் ஜேட்லி

மத்திய அமைச்சர் நிதி மந்திரி அருண் ஜெட்லியிடம் ஜி நியூஸ் பத்திரிகை தலைமை ஆசிரியர் சுதிர் சௌத்ரி நேர்காணலை மேற்க்கொண்டார். அப்பொழுது அவர் வரும் மக்களவை தேர்தலைக்…

3 hours ago