‘தமிழர்கள் ஒருபோதும் இந்த அநீதியை மறக்க மாட்டார்கள்’ – மத்திய அரசுக்கு கமல் கண்டனம்!

காவிரி வரைவு திட்டத்தைத் தாக்கல் செய்ய மேலும் 2 வாரம் அவகாசம் கோரியுள்ள மத்திய அரசுக்கு நடிகர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் கொடுத்த 6 வார காலஅவகாசம் முடிந்தும் மத்திய அரசு மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. மத்திய அரசின் செயல்பாடுகளை எதிர்த்து தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு…

அறைக்கு வெளியே குவிந்திருந்த ரோஜா மலர்கள்! இனுக்காவுக்கு பிரியா விடைகொடுத்த சிங்கப்பூர்!

உலகின் கடைசி வெப்ப மண்டல துருவக் கரடியான இனுக்கா, கருணைக்கொலை செய்யப்பட்டுள்ளதாக இன்று சிங்கப்பூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. குழந்தைப் பருவத்தில் இனுக்கா… பனிக்கரடி… கடும் உறைபனி சூழ்ந்த ஆர்க்டிக் பகுதியில் காணப்படும் ஒருவகை கரடி இனம். ஆனால் இனுக்கா என்னும் பனிக்கரடியின் பிறப்பும் இறப்பும் அப்படியிருக்கவில்லை. சிங்கப்பூர் உயிரியல் பூங்காவில் 1990-ம் ஆண்டு டிசம்பர்…

`ஒரு மனிதனாக அந்தப் பதிலைச் சொன்னேன்!’ – சர்ச்சைப் பேச்சுக்கு சல்மான் குர்ஷித் விளக்கம்

`காங்கிரஸ் கைகளில் இஸ்லாமியர்களின் ரத்தக்கறை உள்ளது’ எனப் பேசி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சல்மான் குர்ஷித். டெல்லி, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் நேற்று மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார் முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சல்மான் குர்ஷித். நிகழ்ச்சியில் அவரிடம் கேள்வி…

அமெரிக்காவுக்குத் தண்ணி காட்டிய தீவு… வழிநடத்தபோகும் காஸ்ட்ரோ சகோதரர்கள் அல்லாத ஒருவர்!

கியூபாவில் சுமார் 60 ஆண்டுகளுக்குப் பின்னர் காஸ்ட்ரோ சகோதரர்கள் (பிடல், ராவுல்) அல்லாத ஒருவர், அந்நாட்டின் அதிபர் பொறுப்பை ஏற்கவுள்ளார். 1492- ம் ஆண்டின் முடிவில் கொலம்பஸ் கண்டறிந்த தீவான கியூபா, 16- ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஸ்பெயினின் ஆதிக்கத்துக்கு உள்ளானது. கிட்டத்தட்ட மூன்று நூற்றாண்டுகள் கியூபாவைச் சுரண்டியது ஸ்பெயின். பின்னர் 19- ம் நூற்றாண்டின் கடைசியில் கியூபாவை…

எண்ணூர் எண்ணெய்க் கசிவு – நீதிமன்ற உத்தரவை அடுத்து நிதியுதவி வழங்கப்பட்டது

எண்ணூரில், கப்பல்கள் மோதி எண்ணெய் கசிந்த விவகாரத்தில், நீதிமன்றம் அளித்த உத்தரவைத் தொடர்ந்து, இன்று பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது. சென்னை எண்ணூர் துறைமுகத்திலிருந்து, சென்ற வருடம் ஜனவரி 28-ம் தேதி, விசாகப்பட்டினம் நோக்கி எரிவாயு நிரப்பிய கப்பல் ஒன்று சென்றுகொண்டிருந்தது. எம்.பி.டபிள்யூ மாப்பிள் என்ற கப்பலும் மும்பையிலிருந்து சென்னை துறைமுகம் நோக்கி வந்த எம்.டி.டான் காஞ்சிபுரம் என்ற எண்ணெய்க்…

கட்டணம் செலுத்தாததால் கலாம் படித்த பள்ளியில் மின்சாரத்தை துண்டித்த தமிழக அரசு!

ராமேஸ்வரத்தில் உள்ள டாக்டர் அப்துல்கலாம் பயின்ற நடுநிலைப் பள்ளியில் மின்கட்டணம் கட்டப்படாததால் மின் இணைப்பை துண்டித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம் வர்த்தகன் தெரு பகுதியில் மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் இயங்கும் நடுநிலைப்பள்ளி எண் -1 செயல்பட்டு வருகிறது. 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் இந்த பள்ளியில்தான் மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம் தனது ஆரம்ப…

`தஞ்சையிலும் ஆளுநர் இதைத்தான் செய்தார்!’ – அணிவகுக்கும் அடுத்த சர்ச்சை

பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விளக்கம் அளிப்பதற்காகச் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது பெண் செய்தியாளர் ஒருவரின் கன்னத்தில் தட்டிக் கொடுத்தார். இதில் ஏற்பட்ட சர்ச்சை அடங்வதற்குள் கோயில் நிகழ்ச்சிக்காகத் திருவையாறு வந்தபோதும் ஆளுநர் இப்படித்தான் நடந்துகொண்டார் என அவர்மீது குற்றச்சாட்டு கிளப்புகிறார்கள் சமூக ஆர்வலர்கள். பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளைத் தவறாகப் பயன்படுத்துவதற்காக அவர்களிடம் செல்போனில்…

ஹரி என்கிற கோணல் மனிதனை நிறுத்தி நம்மை துணுக்குற வைத்த ஃபஹத்..! – மலையாள கிளாசிக் – 6

நார்த் 24 காதம் இந்தப் படத்தில் பிரேம்ஜி ஒரு கதாபாத்திரத்தில் வருகிறார். அவரது மனைவி வட இந்தியப் பெண். வளர்ந்த குழந்தைகூட இருக்கிறது. கதாநாயகி நாராயணியின் சந்தேகத்தை பிரேம்ஜியிடம் கேட்கிறார் நெடுமுடி. நீங்கள் உங்கள் காதலை அவளிடம் எப்படிச் சொன்னீர்கள்? அதற்கு அவன் “அன்புக்கு ஒரு பாஷையும் கிடையாது, அதை அனுபவத்தில் தான் தெரிந்துகொள்ள வேண்டும்” என்கிறான். வாழ்க்கையே…

ஐபிஎல் போட்டியின்போது பாலியல் தொல்லை! – போலீஸில் புகார் அளித்த இளம்பெண்

ஐபிஎல் போட்டியின் பாலியல் தொல்லை கொடுத்ததாக இளம்பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் மும்பை போலீஸார் ஒருவரைக் கைது செய்துள்ளனர். மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் இடையிலான ஐபிஎல் லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் டெல்லி அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது. போட்டியின் போது…

‘குறும்படக் குழுவினரை நெகிழவைத்த டிராஃபிக் டி.எஸ்.பி’

ஏப்ரல் 15-ம் தேதி விடியற்காலை 3 மணி. கல்லூரி மாணவர்களோடு கூடிய குறும்படக் குழு ஒன்று குறும்படம் ஒன்றை ஈரோடு சத்தியமங்கலம் சாலையில் ஷூட் செய்து கொண்டிருந்தது. அந்தக் குறும்படத்தின் பெயர் ‘இரும்பு வெறியர்கள்’. பைக் ரேஸினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அந்தக் குறும்படம் தயாராகிக் கொண்டிருந்தது. பரபரப்பாக ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்க, அந்த…