என் நண்பன் அந்த பக்கம் நிற்கும்போது எதுவுமே சாத்தியம்தான்!! சிலிர்த்த கோலி.. நெகிழ்ந்த ரோஹித்

மறுமுனையில் ரோஹித் சர்மா நிற்கும்போது, எவ்வளவு பெரிய இலக்கையும் எளிதாக எட்டிப்பிடித்து விடலாம் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி புகழ்ந்தார்.

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 323 ரன்கள் என்ற கடின இலக்கை ரோஹித் சர்மா – கோலி ஜோடியின் அபாரமான ஆட்டத்தால் இந்திய அணி 42 ஓவரிலேயே எளிதாக எட்டி வெற்றி பெற்றது.

தவான் இரண்டாவது ஓவரிலேயே 4 ரன்களில் அவுட்டான போதும், ரோஹித்தும் கோலியும் அபாரமாக ஆடி அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றனர். களமிறங்கியது முதலே கோலி அடித்து ஆட, ரோஹித் வழக்கம்போல களத்தில் நிலைக்கும் வரை நிதானமாக ஆடினார்.
ரோஹித் களத்தில் நிலைத்து நின்றுவிட்டால் அதன்பிறகு அவரை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என்பது எதிரணி அறிந்த விஷயம்தான். ஆனாலும் அவரது விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை. விக்கெட்டுக்கான வாய்ப்பே கொடுக்காமல் இருவருமே அபாரமாக ஆடினர்.

கோலி 140 ரன்கள் எடுத்து அவுட்டாக, ரோஹித் சர்மா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 152 ரன்கள் குவித்தார். இதன்மூலம் தனிப்பட்ட முறையும் பார்ட்னர்ஷிப்பாகவும் இருவரும் பல சாதனைகளை வாரி குவித்துள்ளனர்.

போட்டிக்கு பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, வெஸ்ட் இண்டீஸ் அணி சிறப்பாக பேட்டிங் செய்து 322 ரன்களை குவித்தது. நாங்கள் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தால் இலக்கை எட்டுவது கடினமல்ல என்பதை உணர்ந்திருந்தோம். அதுவும் ரோஹித் சர்மா மறுமுனையில் பேட்டிங் ஆடும்போது எவ்வளவு பெரிய இலக்கும் கடினமாக இருக்காது. பொதுவாக ரோஹித்தும் தவானும் அடித்து ஆடுவார்கள் என்பதால் முதல் மூன்று வீரர்களில் நான் தான் களத்தில் நிலைத்து நின்று ஆட விரும்புவேன். ஆனால் இந்த முறை நான் அடித்து ஆடுகிறேன்; நீங்கள் நிலைத்து ஆடுங்கள் என்று ரோஹித்திடம் கூறினேன். அதேபோல ரோஹித்தும் ஆடினார்.

நான் அவுட்டான பிறகு ராயுடு களத்திற்கு வந்ததும் என் பணியை ரோஹித் கையில் எடுத்துக்கொண்டார். இதுதான் ஒருநாள் போட்டியின் சிறந்த பேட்டிங் முறை என்று கருதுகிறேன். பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடுவதுதான் முக்கியம். நானும் ரோஹித்தும் இணைந்து 200 ரன்களுக்கு மேல் குவிப்பது இது 5 அல்லது 6வது முறையாக இருக்கும் என நினைக்கிறேன். ரோஹித்துடன் பேட்டிங் செய்வது மகிழ்ச்சியான விஷயம். நாங்கள் இப்படி பேட்டிங் செய்தால் அது அணிக்கு மிகப்பெரிய பலமாகவும் வெற்றிக்கு உதவும் என்பதும் எங்களுக்கு தெரியும் என்று கோலி நெகிழ்ந்தார்.

Share

Recent Posts

ஜப்பானில் மக்கள் கூட்டத்துக்குள் கார் புகுந்ததில் 2 வயது குழந்தையுடன் இளம் பெண் பலி

டோக்கியோ :ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள இகேபுகுரோ மாவட்டத்தில் சுரங்கப்பாதை ரெயில் நிலையம் ஒன்று உள்ளது. இந்த ரெயில் நிலையம் அமைந்துள்ள சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும்.இந்த…

10 hours ago

இந்தியாவில் மின் உற்பத்திக்காக 12 புதிய அணுஉலைகள் நிறுவ திட்டம்- வெளியான தகவல்

மாஸ்கோ:ரஷியாவில் உள்ள கோச்சி என்ற நகரில் அண்மையில் 11-வது சர்வதேச அணுசக்தித்துறை கண்காட்சி நடைபெற்றது. 'ரொசாட்டம்' என்ற அமைப்பின் ஆதரவுடன் நடந்த இந்த கண்காட்சியில் 74 நாடுகளை…

10 hours ago

அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற இந்தியர்கள் 2 பேர் கைது

நியூயார்க்:அமெரிக்காவிற்குள் ஆட்கடத்தல் கும்பல் மூலம் சட்டவிரோதமாக ஊடுருவ முயன்று, பாலைவனப் பகுதியில் வழிதெரியாமல் சிக்கித் தவிக்கும் அகதிகளை மீட்பதற்காக மெக்சிகோ எல்லைப்பகுதியில் சூரிய மின்சக்தி மூலம் இயங்கும்…

10 hours ago

12 குழந்தைகளை வீட்டில் அடைத்து கொடுமைபடுத்திய தம்பதிக்கு ஆயுள்தண்டனை

கலிபோர்னியா:அமெரிக்கவின் கலிபோர்னியாவை சேர்ந்தவர் டேவிட் ஆலன் டர்பின் (வயது57). இவரது மனைவி லூயிஸ் அன்னா டர்பின் (50). இவர்களுக்கு 12 குழந்தைகள் உள்ளனர். குழந்தைகள் பிறந்ததில் இருந்து…

10 hours ago

எகிப்து அதிபரின் பதவிக்காலம் ஆறாண்டுகளாக நீட்டிப்பு

கெய்ரோ:எகிப்து நாட்டின் அதிபராக அப்டெல் பட்டா சிசி பதவி வகித்து வருகிறார். தற்போதைய நிலவரப்படி அதிபரின் பதவிக்காலம் நான்காண்டுகளாக உள்ள நிலையில், மேலும் இரண்டாண்டுகள் அதிகரித்து அதிபரின்…

10 hours ago

கனடாவில் பனிச்சரிவில் சிக்கி வீரர்கள் 3 பேர் பலி

ஒட்டாவா:கனடாவின் அல்பெர்டா மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணங்களுக்கு இடையே ஹவ்ஸ் பீக் என்கிற மலை உள்ளது. இது அந்நாட்டின் மிக உயரமான மலைகளில் ஒன்றாகும். இந்த நிலையில்,…

10 hours ago