விஜய் ஹசாரே தொடரில் தன்னிடம் தேவையில்லாமல் வார்த்தைகளை உதிர்த்த முகமது சிராஜின் பந்துவீச்சை வெளுத்து விட்டார் பிரித்வி ஷா.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி, அறிமுக போட்டியிலேயே சதமடித்த இளம் வீரர் பிரித்வி ஷா, இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் அபாரமாக பேட்டிங் ஆடினார். இரண்டு டெஸ்ட் போட்டியில் மூன்று இன்னிங்ஸ் ஆடிய பிரித்வி ஷா, 237 ரன்களை குவித்தார்.

பயமே இல்லாமல் தனது இயல்பான ஆட்டத்தை ஆடி கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்தார் பிரித்வி ஷா. வெஸ்ட் இண்டீஸை வெளுத்து வாங்கிய கையோடு, விஜய் ஹசாரே தொடரில் மும்பை அணிக்காக ஆடிவருகிறார் பிரித்வி ஷா.

ஹைதராபாத்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் ரோஹித் சர்மாவுடன் இணைந்து தொடக்க வீரராக களமிறங்கினார் பிரித்வி ஷா.
document.getElementById(“sampleDiv”).innerHTML = ‘

‘; setTimeout(function() { document.getElementById(“sampleDiv”).innerHTML = ‘

‘; }, 5000); TickTickNews

Leave a Reply