சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியில் கோலியை ஏமாற்றிதான் அவுட்டாக்குனேன்!! பாகிஸ்தான் பவுலர் சொல்லும் ரகசியம்

கடந்த ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி போட்டியில் விராட் கோலியை அவுட்டாக்கியது எப்படி என்ற ரகசியத்தை பாகிஸ்தான் பவுலர் முகமது ஆமிர் உடைத்துள்ளார்.

கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி போட்டியில் பாகிஸ்தானிடம் 180 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து இந்திய அணி கோப்பையை இழந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஃபகார் ஜமான் அபாரமாக ஆடி சதம் விளாசினார். அசார் அலி மற்றும் முகமது ஹஃபீஸ் ஆகிய இருவரும் அரைசதம் அடித்தனர். அதனால் அந்த அணி 50 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்களை குவித்தது.

339 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவை தவிர மற்ற வீரர்கள் யாருமே சோபிக்காததால், வெறும் 158 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட்டாகி, 180 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
அந்த சமயத்தில் அபாரமான ஃபார்மில் இருந்த தவான், ரோஹித், கோலி ஆகிய முதல் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தியது பாகிஸ்தான் பவுலர் முகமது ஆமிர்.

இந்நிலையில், இவர் விராட் கோலியை வீழ்த்தியது எப்படி என்ற ரகசியத்தை பகிர்ந்துள்ளார். விராட் கோலியின் மனநிலையுடனும் அவரது சிந்தனையுடனும் ஆடியது குறித்து பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள முகமது ஆமிர், ரோஹித் சர்மா நான் வீசிய இன்ஸ்விங் பந்தில் தான் அவுட்டானார். இதையடுத்து களத்திற்கு வந்த கோலி, களத்தில் நிலைப்பதற்கு முன்னதாக சில அவுட் ஸிவிங் பந்துகளில் திணறினார். நான் வீசிய பந்தில் கோலி ஒரு கேட்ச் கொடுத்தார். ஆனால் அதை அசார் அலி தவறவிட்டார். அப்போது என் மனதில் ஓடியது எல்லாம் ஒரே ஒரு விஷயம்தான். கோலி போன்ற வீரர்களுக்கு கேட்ச்களை தவறவிடக்கூடாது. அப்படி விட்டுவிட்டால், அவர் இறுதி வரை நின்று ஆட்டத்தை வெற்றிகரமக முடிக்க வல்லவர். அதனால் அவரது விக்கெட்டை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என்று வேண்டிக்கொண்டே அடுத்த பந்தை வீச சென்றேன்.

நான் அடுத்த பந்தை வீச செல்லும்போது, இன்ஸ்விங்தான் வீச போகிறேன் என்று விராட் கோலி கணித்திருந்ததை அவரது உடல்மொழியே காட்டியது. அதனால் இன்ஸ்விங்கிற்கு தயாராக இருந்தார் கோலி. ஆனால் அப்போது நான் அவுட் ஸ்விங் வீசினேன். கோலி கேட்ச் கொடுத்து அவுட்டானார் என்று முகமது ஆமிர் தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

ஜப்பானில் மக்கள் கூட்டத்துக்குள் கார் புகுந்ததில் 2 வயது குழந்தையுடன் இளம் பெண் பலி

டோக்கியோ :ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள இகேபுகுரோ மாவட்டத்தில் சுரங்கப்பாதை ரெயில் நிலையம் ஒன்று உள்ளது. இந்த ரெயில் நிலையம் அமைந்துள்ள சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும்.இந்த…

10 hours ago

இந்தியாவில் மின் உற்பத்திக்காக 12 புதிய அணுஉலைகள் நிறுவ திட்டம்- வெளியான தகவல்

மாஸ்கோ:ரஷியாவில் உள்ள கோச்சி என்ற நகரில் அண்மையில் 11-வது சர்வதேச அணுசக்தித்துறை கண்காட்சி நடைபெற்றது. 'ரொசாட்டம்' என்ற அமைப்பின் ஆதரவுடன் நடந்த இந்த கண்காட்சியில் 74 நாடுகளை…

10 hours ago

அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற இந்தியர்கள் 2 பேர் கைது

நியூயார்க்:அமெரிக்காவிற்குள் ஆட்கடத்தல் கும்பல் மூலம் சட்டவிரோதமாக ஊடுருவ முயன்று, பாலைவனப் பகுதியில் வழிதெரியாமல் சிக்கித் தவிக்கும் அகதிகளை மீட்பதற்காக மெக்சிகோ எல்லைப்பகுதியில் சூரிய மின்சக்தி மூலம் இயங்கும்…

10 hours ago

12 குழந்தைகளை வீட்டில் அடைத்து கொடுமைபடுத்திய தம்பதிக்கு ஆயுள்தண்டனை

கலிபோர்னியா:அமெரிக்கவின் கலிபோர்னியாவை சேர்ந்தவர் டேவிட் ஆலன் டர்பின் (வயது57). இவரது மனைவி லூயிஸ் அன்னா டர்பின் (50). இவர்களுக்கு 12 குழந்தைகள் உள்ளனர். குழந்தைகள் பிறந்ததில் இருந்து…

10 hours ago

எகிப்து அதிபரின் பதவிக்காலம் ஆறாண்டுகளாக நீட்டிப்பு

கெய்ரோ:எகிப்து நாட்டின் அதிபராக அப்டெல் பட்டா சிசி பதவி வகித்து வருகிறார். தற்போதைய நிலவரப்படி அதிபரின் பதவிக்காலம் நான்காண்டுகளாக உள்ள நிலையில், மேலும் இரண்டாண்டுகள் அதிகரித்து அதிபரின்…

10 hours ago

கனடாவில் பனிச்சரிவில் சிக்கி வீரர்கள் 3 பேர் பலி

ஒட்டாவா:கனடாவின் அல்பெர்டா மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணங்களுக்கு இடையே ஹவ்ஸ் பீக் என்கிற மலை உள்ளது. இது அந்நாட்டின் மிக உயரமான மலைகளில் ஒன்றாகும். இந்த நிலையில்,…

10 hours ago