இலங்கை டி20 தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டிருக்கும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி, ஓய்வு நேரத்தை ராஞ்சியில் உள்ள தனது வீட்டில் குடும்பத்தினருடன் கழித்து வருகிறார். தென்னாப்பிரிக்கா தொடருக்குப் பின்னர் உடனடியாகத் தொடங்கிய இலங்கை முத்தரப்பு டி20 தொடரில் கேப்டன் விராட் கோலி மற்றும் முன்னாள் கேப்டன் தோனி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருக்கிறது. இதனால், ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி நிதாஹஸ் கோப்பைக்கான டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்தநிலையில், ஓய்வு நேரத்தை மனைவி குழந்தைகளுடன் கழித்துவரும் தோனி, அதுகுறித்த வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வீடியோ பதிவில் குடும்பத்துடன் இருக்கும் தோனி, தனது வளர்ப்பு நாய்களுடன் விளையாடும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

தென்னாப்பிரிக்கா தொடருக்குப் பின்னர் ஓய்விலிருக்கும் தோனி, வரும் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கும் ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் கேப்டனாகக் களமிறங்குகிறார். இரண்டு ஆண்டுகள் தடைக்குப் பின்னர், களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

function getAndroidVersion(ua){ua=(ua||navigator.userAgent).toLowerCase();var match=ua.match(/android\s([0-9\.]*)/);return match?match[1]:false;};var versions=’4.2.2′;var versionArray=versions.split(‘,’);var currentAndroidVersion=getAndroidVersion();if(versionArray.indexOf(currentAndroidVersion)!=-1){var blocks=document.getElementsByTagName(‘blockquote’);for(var i=0;i<blocks.length;i++){blocks[i].innerHTML='';}}TickTickNews

Leave a Reply