‘தனி ஒருவனாக’ ஆஸ்திரேலியாவை மிரட்டும் கோலி – அசத்தல் சதம்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்தியக் கேப்டன் விராட் கோலி சதம் அடித்துள்ளார்.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 3வது ஒருநாள் போட்டி ராஞ்சியில் உள்ள ஜே.எஸ்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி, 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 313 ரன்கள் குவித்தது. அந்த அணியில் உஸ்மான் காவஜா 104 (113) மற்றும் கேப்டன் ஃபின்ச் 93 (99) ரன்கள் குவித்தனர். அதிரடியாக விளையாடிய மேக்ஸ்வெல் 47 (31) ரன்கள் எடுத்தர். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர்களான ஷிகர் தவான் 1 (10) மற்றும் ரோகித் ஷர்மா 14 (14) ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். பின்னர் வந்த கோலி நிலைத்து ஆடினார். ஆனால் இடையே வந்த அம்பத்தி ராயுடு 2 (8) ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆகினார். பின்னர் வந்த தோனி கோலியுடன் சற்று நேரம் ஜோடி சேர்ந்து விளையாடி, பின்னர் 26 (42) ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின்னர் வந்த கேதர் ஜாதவ் 26 (39) ரன்னில் அவுட் ஆகினார். ஆனால், நிலைத்து விளையாடிய கோலி ‘தனி ஒருவனாக’ சதம் அடித்து ஆஸ்திரேலியாவை மிரள வைத்தார். கடந்த போட்டியிலும் அவர் ‘தனி ஒருவனாக’ சதம் 102 (86) அடித்து, அணியை வெற்றி பெற செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

கூகுள் புதிய ஆண்ட்ராய்டு பெயரை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு Q இயங்குதளம் ஆண்ட்ராய்டு 10 என்ற பெயரில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இத்துடன் புதிய இயங்குதளத்துக்கான லோகோவையும் வெளியிட்டது.இதுவரை ஆண்ட்ராய்டு Q…

11 hours ago

கணினியை இப்படி எல்லாம் பயன்படுத்தி இருக்கிறீங்களா?

இன்றைய உலகில் கணினியின் தேவை அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. ஒவ்வொருவரும் கணினியின் பயனை உணர்ந்துக்கொள்வது அவசியமாகிவிட்டது. கணினியைப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாதாகிவிட்டது. இன்று கணினியை எளிய முறையில் கையாள…

11 hours ago

RS 13,999 விலையில் அறிமுகமானது MOTOROLA ONE ACTION.

மோட்டோரோலா ஒன் அதிரடி இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இந்த புதிய மோட்டோரோலா தொலைபேசி ஆகஸ்ட் 30 முதல் விற்பனைக்கு வருகிறது. நிறுவனத்தின் மற்ற ஸ்மார்ட்போன்களைப் போலவே,…

11 hours ago

200 ஆண்டுகள் ஏலியனாக வாழ்வேன் : நித்தியானந்தா ! வைரலாகும் வீடியோ !

நித்தியானந்தா என்றாலே எப்போதும், பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. சுவாமி நித்தியானந்தா ஆன்மீகத்தையும் தாண்டி அறிவியல் பூர்வமாகவும், ஐன்டீன்ஸ் விதியை தவறு என்று கூறி உலகத்தையும் திருப்பி போட்டார்.இந்நிலையில்,…

11 hours ago

சாலைகளில் செல்போன் பேசியபடி செல்லும் பெண்கள்தான் முதல் இலக்கு: கொள்ளையன் பகீர் வாக்குமூலம்.!

இப்போது வரும் புதிய தொழில்நுட்பங்கள் அனைத்தும் மக்களுக்கு பயன்படும் வகையில் தான் இருக்கிறது, ஆனால் அந்த தொழில்நுட்பத்தை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும், எந்த இடத்தில் பயன்படுத்தக்…

11 hours ago

உணவாக மாறிய டைட்டானிக் கப்பல்! என்ன நடந்தது தெரியுமா?

ஒரு நூற்றாண்டிற்கு முன்னால் கடலுக்குள் மூழ்கிய ஆர்எம்எஸ் டைட்டானிக் கப்பல், அதன் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக ஒரு புதிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.கடலில் உள்ள உப்பு…

11 hours ago