ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பும்ரா இல்லை.. விராட் கோலியின் ஆஸ்தான பவுலருக்கு வாய்ப்பு

இந்திய அணியின் நட்சத்திர பவுலர் பும்ராவிற்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் 12ம் தேதி தொடங்குகிறது. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் முடிந்தவுடன் அங்கிருந்து அப்படியே நியூசிலாந்து செல்லும் இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது.

இந்த அனைத்து அணிகளிலுமே இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இடம்பெற்றிருந்தார். இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அதிகமாக பந்துவீசியதால் அவரது வேலைப்பளுவை குறைக்கும் விதமாக அவருக்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றதற்கு பும்ராவின் மிரட்டலான பவுலிங்கும் முக்கியமான காரணம். 21 விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலராக பும்ரா திகழ்கிறார். அதிகமாக பந்துவீசியதால், உலக கோப்பையை மனதில் வைத்து பும்ராவிற்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

பும்ராவிற்கு பதிலாக ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் முகமது சிராஜும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் சித்தார்த் கவுலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சிராஜ் ரஞ்சி டிராபியில் நன்றாக பந்துவீசியதால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சிராஜின் பவுலிங்கில் மிரட்டல் எதுவும் இருக்காது. எனினும் அவருக்கு இதற்கு முன்பும் வாய்ப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அதை அவர் பெரிதாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. ஐபிஎல்லில் விராட் கோலி கேப்டனாக இருக்கும் ஆர்சிபி அணியில் சிராஜ் ஆடுகிறார். ஐபிஎல்லிலும் பல இக்கட்டான சூழல்களில் கடைசி ஓவர்களை சிராஜிடம் வழங்கியிருக்கிறார் விராட் கோலி. ஆனால் சிராஜ் போட்டியை வெற்றி பெற்று கொடுத்ததில்லை என்பது ஒருபுறமிருந்தாலும், சிராஜின் மீது கோலி அதீத நம்பிக்கை வைத்திருக்கிறார் என்பது தெரிந்த விஷயமே.

விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா(துணை கேப்டன்), ஷிகர் தவான், கேஎல் ராகுல், அம்பாதி ராயுடு, தினேஷ் கார்த்திக், தோனி(விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், சாஹல், கலீல் அகமது, பும்ரா, ஷமி.

Share

Recent Posts

கூகுள் புதிய ஆண்ட்ராய்டு பெயரை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு Q இயங்குதளம் ஆண்ட்ராய்டு 10 என்ற பெயரில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இத்துடன் புதிய இயங்குதளத்துக்கான லோகோவையும் வெளியிட்டது.இதுவரை ஆண்ட்ராய்டு Q…

11 hours ago

கணினியை இப்படி எல்லாம் பயன்படுத்தி இருக்கிறீங்களா?

இன்றைய உலகில் கணினியின் தேவை அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. ஒவ்வொருவரும் கணினியின் பயனை உணர்ந்துக்கொள்வது அவசியமாகிவிட்டது. கணினியைப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாதாகிவிட்டது. இன்று கணினியை எளிய முறையில் கையாள…

11 hours ago

RS 13,999 விலையில் அறிமுகமானது MOTOROLA ONE ACTION.

மோட்டோரோலா ஒன் அதிரடி இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இந்த புதிய மோட்டோரோலா தொலைபேசி ஆகஸ்ட் 30 முதல் விற்பனைக்கு வருகிறது. நிறுவனத்தின் மற்ற ஸ்மார்ட்போன்களைப் போலவே,…

11 hours ago

200 ஆண்டுகள் ஏலியனாக வாழ்வேன் : நித்தியானந்தா ! வைரலாகும் வீடியோ !

நித்தியானந்தா என்றாலே எப்போதும், பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. சுவாமி நித்தியானந்தா ஆன்மீகத்தையும் தாண்டி அறிவியல் பூர்வமாகவும், ஐன்டீன்ஸ் விதியை தவறு என்று கூறி உலகத்தையும் திருப்பி போட்டார்.இந்நிலையில்,…

11 hours ago

சாலைகளில் செல்போன் பேசியபடி செல்லும் பெண்கள்தான் முதல் இலக்கு: கொள்ளையன் பகீர் வாக்குமூலம்.!

இப்போது வரும் புதிய தொழில்நுட்பங்கள் அனைத்தும் மக்களுக்கு பயன்படும் வகையில் தான் இருக்கிறது, ஆனால் அந்த தொழில்நுட்பத்தை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும், எந்த இடத்தில் பயன்படுத்தக்…

11 hours ago

உணவாக மாறிய டைட்டானிக் கப்பல்! என்ன நடந்தது தெரியுமா?

ஒரு நூற்றாண்டிற்கு முன்னால் கடலுக்குள் மூழ்கிய ஆர்எம்எஸ் டைட்டானிக் கப்பல், அதன் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக ஒரு புதிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.கடலில் உள்ள உப்பு…

11 hours ago