டிடிவியை பார்த்து மிரளும் தி.மு.க! கே.என்.நேரு ஆடியோ, வீடியோ வெளியானதால் அதிர்ச்சி!

தினகரனின் வளர்ச்சி அதிமுகவிற்கு மட்டுமல்ல, திமுகவுக்கும் மிகப்பெரும் அதிர்ச்சியாகவே இருக்கிறது தினகரனின் வளர்ச்சியும் அவர் நடத்திக் கொண்டிருக்கும் அரசியலும். அதனால் தான் என்னவோ, தினகரனின் வலது கையாகவும், சசிகலா குடும்பத்தில் நம்பிக்கைக்குரியவராகவும் இருந்த செந்தில் பாலாஜியை ஸ்கெட்ச் போட்டு திமுகவிற்கு தூக்கினார்கள்.

ஆனாலும், தினகரனோ கொஞ்சமும் கலங்காமல் தில்லாகவும், வழக்கமான தனக்கே உரிய கூலாக கையாண்டார். எங்கிருந்தாலும் வாழ்க என ஒரே பதிலளித்தார். அதுமட்டுமல்லாமல், எங்கள் கட்சி உறுப்பினர் திமுகவில் சேர்வதற்கு கூட விழா எடுக்கிறார்கள். அந்த அளவிற்கு திமுகவின் நிலை சென்றுவிட்டது என கூறினார்.

தினகரன் சொன்னதைப்போலவே, திமுக அமமுகவின் வளர்ச்சியால் டரியலில் இருப்பது கே.என்.நேரு வீடியோ அம்பலப்படுத்தியிருக்கிறது.

அண்ணா சிலைக்கு மாலை போட திமுக, அதிமுக எல்லாம் 100 பேர தான் கூட்டுவோம். ஆனால், இந்த டிடிவி தினகரன் மட்டும் 1000 பேர கூட்டி காட்டுறார் என திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளருமான கே.என்.நேரு தனது ஆதரவாளர்களுடன் பேசிக்கொண்டிருந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை பார்க்கும்போது தினகரனை பார்த்தால் திமுக மிரளுது நங்காவே தெரிகிறது என சமூக வலை தளங்களிலும், அரசியல் விமர்சகர்களும் கருத்து கூறி வருகின்றனர்.

அதுமட்டுமல்ல, தினகரனைப் பற்றி பேசும் கே.என்.நேரு, தினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜியை திமுகவிற்கு அழைத்து வந்ததில் டீல் பேசி முடித்த டீமில் கே.என்.நேரு முக்கிய நபர் என்பது குறிப்பிடதக்கது.

Share

Recent Posts

பொங்கலுக்கு விலை குறைந்த சாம்சங் ஸ்மார்ட்போன்கள்.!

தமிழர் திருநாளாம் தை பொங்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. இதையொட்டி சாம்சங் ஸ்மார்ட்போன் நிறுவனம் தற்போது விலையை குறைந்து விற்பனையை அதிரவிட்டுள்ளது.இதனால் ஏராளமான வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போன்களை வாங்க முன்…

2 hours ago

வோடபோன் வழங்குகிறது மேலும் புதிய சலுகை ரூ.396க்கு உங்களுக்கு கிடைக்கும் 96.6GB டேட்டா…!

தொடர்ந்து வோடபோன் நிறுவனம் சமீபத்தில் ரூ.1,499 விலையில் புதிய சலுகையை அறிவித்தது. பின் சில சலுகைகளை மாற்றியமைத்து பயனர்களுக்கு அதிகளவு பலன்களை வழங்கியது. இதைத்தொடர்ந்து வோடபோன் ரூ.396…

2 hours ago

ட்ராய் யின் அதிரடி அறிவிப்பு 100 DTH சேனல்களுக்கு மாதம் ரூ.153 கட்டணம் செலுத்த வேண்டும்

மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் கேபிள் மற்றும் DTH . சேவை கட்டணம் பற்றி புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் 100 இலவச அல்லது…

2 hours ago

மாதம் 100 டிவி சேனல்கள் ரூ.153 கட்டனம் : டிராய்

இந்திய தொலைத் தொடர்பு ஒழங்குமுறை ஆனையம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் , விருப்பமான 100 டிவி சேனல்களை ரூ.153 கட்டணத்தில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்த…

2 hours ago

Honor 10 Lite 24MP Ai செல்பி கேமராவுடன் அறிமுகம்

சிறப்பு செய்திHonor முதல் முறையாக டியூவ்ட்ராப் நோட்ச் உடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 2மாதங்களுக்கு முன்பே சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த போன் பிளிப்கார்டில் எக்ஸ்க்ளுசிவாக விற்பனை…

2 hours ago

பொங்கல் பிளான் தெறிக்கவிடும் பிஎஸ்என்எல்: ஏர்டெல்லுக்கு சாவல்.!

பிஎஸ்என்எல் நிறுவனம் பொங்கல் பிளான் போல் ரூ.798க்கு அறிவித்துள்ளது. இந்த ஆப்பர் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.மேலும், இது ஏரடெல் நிறுவனத்திற்கு கடும் போட்டியை ஏற்படும்…

2 hours ago