பாத்ரூம் போன கேப்புல கூட்டணியை மாத்துன ஆள் நீ… தி.மு.க.விடம் மச அடி வாங்கும் அந்த தலைவர் யார்?

“தி.மு.க.வை எனக்கு பிடிக்கவில்லை. பிரதமரை ‘சேடிஸ்ட்’ என ஸ்டாலின் சொன்னது தவறு.” சமீபத்தில் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரான சரத்குமார் வைத்த விமர்சனம் இது. ஒரு காலத்தில் தி.மு.க.வினால் அதிகப்படியான அரசியல் லாபம் பெற்று தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர் இன்று இப்படி பேசுவதை தி.மு.க.வினரால் ஜீரணிக்க முடியவில்லை.

சரத்குமாரின் இந்த பேச்சுக்கு சமூக வலைதளங்களில் பதிலடி தந்திருக்கும் தி.மு.க. இணையதள அணியினர்…”நாட்டாமை படம் நல்லா ஓடிட்டு இருக்கும்போதே அதை ஜெயா டி.வி.யில ஒளிபரப்புனப்ப, அந்தம்மாட்ட வீஞ்சிக்கிட்டு நீங்க ஓடி வந்து ஒட்டுன இடம் எங்க தலைவர் கலைஞரின் காலடி. உன்னை எம்.பி.யாக்கி அழகு பார்த்தார் தலைவர்.

‘நான் செத்தால் என் பிணத்தின் மேல் தி.மு.க. கொடியை போர்த்தி அடக்கம் செய்ய வேண்டும்.’ அப்ப்டின்னு வாய் கிழிய பேசினீங்களே டியர் சரத்துக்குமாரு! அதே தி.மு.க.வை இப்போ பிடிக்காம போயிடுச்சாமே. அதைச் சொன்னதும் உங்க வாயிதான், இதை சொல்றதும் உங்க வாயிதான். அன்னைக்கு பதவி கிடைச்சதுக்காக தி.மு.க.வை புகழந்த அந்த வாயை நல்ல வாயின்னும், இன்னைக்கு எங்கேயோ ஒண்டுறதுக்காக எங்களை பழிக்கிற வாயை…வாயின்னும் நாங்க எடுத்துக்கலாமா?!

சில அரசியல் தலைவர்களெல்லாம் தேர்தலுக்கு தேர்தல்தான் கொள்கையையும், கூட்டணியையும் மாத்துவாங்க. ஆனா சில மணி நேரத்துக்கு ஒரு முறை கூட்டணியை மாத்துற ஒரே ஆளு நீங்கதான். எப்பேர்ப்பட்ட கொள்கை சிங்கம் நீங்க! ஜெயலலிதா கொடுக்கிறேன்னு சொன்ன வெறும் ரெண்டு சீட்டுக்காக, பாத்ரூம் போற கேப்புல கூட்டணியை மாற்றி, தேனிக்கு ஓடிப்போயி அந்தம்மா கால்ல விழுந்த தன்மான சிங்கம் நீயெல்லாம் எங்க தளபதியை பற்றி பேசுறதா?தோத்துப்போற எடப்பாடி உனக்கு பத்து தொகுதி தருவார். அத்தனையிலும் சேர்த்து பத்து ஓட்டு வாங்கிட்டு அப்புறமா அறிவாலயம் வாசல் பக்கமா நீங்க வரலைன்னா, எங்க காதை அறுத்துக்குறோம்!” என்று போட்டுப் பொளந்துள்ளனர். சித்தப்பூ என்ன இப்படி கிழிக்கிறாய்ங்க!?…

Share

Recent Posts

பள்ளி மாணவர்களுடன் தகாத உறவு வைத்த ஆசிரியை ‘போக்சோ’ சட்டத்தில் கைது

ஆரணி:ஆரணியை அடுத்த பையூர் காலனி பகுதியை சேர்ந்தவர் உமேஷ்குமார் (வயது 45), ஆசிரியர். இவரது மனைவி நித்யா (30). வேலூர் மாவட்டம் மாமண்டூர் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக…

47 mins ago

குடியாத்தம் அருகே பிளாஸ்டிக் கிடங்கில் தீ விபத்து

குடியாத்தம்: குடியாத்தம் அருகே பழைய பிளாஸ்டிக் பொருள்கள் சேமித்து வைக்கும் கிடங்கில் ஏற்பட்ட திடீா் தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருள்கள் எரிந்து…

47 mins ago

கிளி ஜோசியத்தை நம்பி நான் அரசியல் செய்யவில்லை- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

சென்னை:தமிழகத்தில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகளும் புதுச்சேரி தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. தமிழ்நாடு…

47 mins ago

அ.தி.மு.க. சிறைக்கு செல்வதை தவிர்க்கவே பா.ஜ.க.வுடன் கூட்டணி- ஸ்டாலின் குற்றச்சாட்டு

அரூர்:அரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கிருஷ்ணகுமாருக்கு ஆதரவாக அரூரில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது, அமித்ஷாவிடம் அ.தி.மு.க.வை எடப்பாடி பழனிசாமி அடகு…

47 mins ago

ஈரோடு தொகுயில் உதய சூரியன் சின்னம்… பணிந்தது ம.தி.மு.க

திமுக கூட்டணியில் மதிமுக ஈரோடு தொகுதியில் போட்டியிடுகிறது. அந்த கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கையில் மதிமுக தனி சின்னத்தில் நிற்கும் என்று அறிவித்தார்.ஆனால்…

47 mins ago

திருப்பூர் தொகுதியில் 27-ந்தேதி பிரசாரத்தை தொடங்குகிறார் பிரேமலதா

சென்னை:அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க. 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தே.மு.தி.க. வேட்பாளர்களை ஆதரித்து கடந்த காலங்களில் விஜயகாந்த் தேர்தல் பிரசாரம் செய்தார். தற்போது உடல் நலம்…

47 mins ago