“மேல்முறையீடு இல்லை, தேர்தலை சந்திக்க முடிவு” – ஆலோசனைக்கு பின் தினகரன் பேட்டி

மேல்முறையீட்டால் தேர்தல் தள்ளிப்போவதை நாங்கள் விரும்பவில்லை என்றும் தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளதாகவும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகர் எடுத்த முடிவில் தவறில்லை என்று 3வது நீதிபதி சத்திய நாராயணன் தீர்ப்பு அளித்தார். இந்த தீர்ப்பை ஓபிஎஸ்-ஈபிஸ் தரப்பினர் கொண்டாடினர்.
இதனிடையே, தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாகவும், இதற்கிடையில் இடைத்தேர்தல் வந்தாலும் சந்திக்க தயார் என்றும் டிடிவி தரப்பினர் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் மதுரையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் டிடிவி தினகரன் ஆலோசனை நடத்தினார். ஆதரவாளர்களுடனான ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேல்முறையீட்டால் தேர்தல் தள்ளிப்போவதை நாங்கள் விரும்பவில்லை என்றும் தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அப்போது பேசிய தினகரன், “தமிழ்நாட்டில் பெரும்பாலான மக்கள் தேர்தலையே விரும்புகிறார்கள். தேர்தலை சந்திப்போம் என்று நான் எடுத்த முடிவு சரியானது என அனைவரும் தெரிவித்திருந்தனர். மக்களின் கருத்துக்களை கேட்ட பின்னர், பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் இந்த முடிவினை கூறினர். 90 சதவீதம் தொண்டகள் எங்களுடன் தான் உள்ளனர்.

கிட்டதட்ட எல்லா தகுதிநீக்க எம்.எல்.ஏக்களுடனும் பேசியாகிவிட்டது. இன்னும் ஒருசிலருடன் பேச வேண்டியுள்ளது. இதர தகுதிநீக்க எம்.எல்.ஏக்களுடன் ஆலோசித்த பிறகு, வரும் அக்டோபர் 31ம் தேதி மதுரை மண்ணில் இருந்து இந்த முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். அந்தந்த தொகுதிகளில் மக்களின் கருத்துகளை தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் கேட்டு வருகிறார்கள்.

மேல்முறையீட்டால் தேர்தல் தள்ளிப்போவதை நாங்கள் விரும்பவில்லை. உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதன் மூலம், இந்த ஆட்சி தொடர்ந்து நீடிக்க அது உதவும். இந்த கருத்தினைத்தான் சாதாரண மக்களும் தெரிவித்து வருகிறார்கள்” என்றார்.

Share

Recent Posts

ஜப்பானில் மக்கள் கூட்டத்துக்குள் கார் புகுந்ததில் 2 வயது குழந்தையுடன் இளம் பெண் பலி

டோக்கியோ :ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள இகேபுகுரோ மாவட்டத்தில் சுரங்கப்பாதை ரெயில் நிலையம் ஒன்று உள்ளது. இந்த ரெயில் நிலையம் அமைந்துள்ள சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும்.இந்த…

9 hours ago

இந்தியாவில் மின் உற்பத்திக்காக 12 புதிய அணுஉலைகள் நிறுவ திட்டம்- வெளியான தகவல்

மாஸ்கோ:ரஷியாவில் உள்ள கோச்சி என்ற நகரில் அண்மையில் 11-வது சர்வதேச அணுசக்தித்துறை கண்காட்சி நடைபெற்றது. 'ரொசாட்டம்' என்ற அமைப்பின் ஆதரவுடன் நடந்த இந்த கண்காட்சியில் 74 நாடுகளை…

9 hours ago

அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற இந்தியர்கள் 2 பேர் கைது

நியூயார்க்:அமெரிக்காவிற்குள் ஆட்கடத்தல் கும்பல் மூலம் சட்டவிரோதமாக ஊடுருவ முயன்று, பாலைவனப் பகுதியில் வழிதெரியாமல் சிக்கித் தவிக்கும் அகதிகளை மீட்பதற்காக மெக்சிகோ எல்லைப்பகுதியில் சூரிய மின்சக்தி மூலம் இயங்கும்…

9 hours ago

12 குழந்தைகளை வீட்டில் அடைத்து கொடுமைபடுத்திய தம்பதிக்கு ஆயுள்தண்டனை

கலிபோர்னியா:அமெரிக்கவின் கலிபோர்னியாவை சேர்ந்தவர் டேவிட் ஆலன் டர்பின் (வயது57). இவரது மனைவி லூயிஸ் அன்னா டர்பின் (50). இவர்களுக்கு 12 குழந்தைகள் உள்ளனர். குழந்தைகள் பிறந்ததில் இருந்து…

9 hours ago

எகிப்து அதிபரின் பதவிக்காலம் ஆறாண்டுகளாக நீட்டிப்பு

கெய்ரோ:எகிப்து நாட்டின் அதிபராக அப்டெல் பட்டா சிசி பதவி வகித்து வருகிறார். தற்போதைய நிலவரப்படி அதிபரின் பதவிக்காலம் நான்காண்டுகளாக உள்ள நிலையில், மேலும் இரண்டாண்டுகள் அதிகரித்து அதிபரின்…

9 hours ago

கனடாவில் பனிச்சரிவில் சிக்கி வீரர்கள் 3 பேர் பலி

ஒட்டாவா:கனடாவின் அல்பெர்டா மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணங்களுக்கு இடையே ஹவ்ஸ் பீக் என்கிற மலை உள்ளது. இது அந்நாட்டின் மிக உயரமான மலைகளில் ஒன்றாகும். இந்த நிலையில்,…

9 hours ago