‘மோடிக்கு எதிராக போராட்டம் நடத்தி வருவதால் அய்யாக்கண்ணு மீது தாக்குதல்’ – கே.பாலகிருஷ்ணன் கண்டனம்!

திருச்செந்தூர் கோயில் அருகில் நோட்டீஸ் வழங்கிய விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணுவை, பா.ஜ.க மகளிர் அணித்தலைவர் கன்னத்தில் அறைந்து செருப்பை காட்டி இழிவாகப் பேசிய சம்பவத்தை சி.பி.எம். மாநில செயற்குழு கண்டிப்பதாக மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், ”விவசாயிகள் பிரச்சனையில் மத்திய, மாநில அரசுகளின் அலட்சியத்தைக் கண்டித்தும், கோரிக்கைகளை முன்வைத்தும் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் சங்கத்தினர் கன்னியாகுமரி முதல் சென்னை வரை நடைபயண பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் திருச்செந்தூர் கோவில் அருகில் பொதுமக்களுக்கு நோட்டீஸ் வழங்கிக் கொண்டிருந்த போது தூத்துக்குடி மாவட்ட பா.ஜ.க மகளிர் அணித் தலைவர் நெல்லையம்மாள், அய்யாக்கண்ணுவை கன்னத்தில் அறைந்ததோடு, செருப்பை எடுத்துக்காட்டி இழிவாகப் பேசி மிரட்டியுள்ளார்.
நோட்டீஸ் கொடுப்பதையும் பா.ஜ.க-வினர் தடுத்துள்ளனர்.

ஜனநாயக நாட்டில் தங்களது கருத்தை தெரிவிக்க அனைவருக்கும் உரிமை உண்டு. இதற்காக தாக்குதலில் ஈடுபடுவது ஏற்கக் கூடியதல்ல. மோடி அரசுக்கு எதிராக அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதால் ஏற்பட்ட ஆத்திரத்தின் காரணமாகவே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதை தமிழிசை சவுந்தரராசன் நியாயப்படுத்தியதும், ஹெச். ராஜா, தாக்கியவர்களை பாராட்டியதும் அநாகரீகமான அரசியல், வன்மையாக கண்டிக்கத்தக்கது. நெல்லையம்மாள் மற்றும் பா.ஜ.க-வினர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

Share
Tags: vikatan

Recent Posts

பேஸ்புக், டுவிட்டருக்கு போட்டியாக தமிழரின் சமூக வலைத்தளம்

இணையத்தில் சமூக வலைத்தளம் என்றாலே நம் நினைவுக்கு வருவது ஃபேஸ்புக், ட்விட்டர் தான். இவை தவிர பல்வேறு இதர சேவைகள் இருந்தாலும் இந்த சேவைகள் பெரும்பாலும் வெளிநாட்டு…

47 mins ago

உஷார்.! உங்கள் பேஸ்புக் புகைப்படங்களும் கூட லீக் ஆகி இருக்கலாம்.!

பேஸ்புக் நிறுவனத்திற்கு 2018 ஆம் ஆண்டு மிகவும் மோசமான ஆண்டாகவே இருந்திருந்தது. வருடத்தின் இறுதியை நெருங்கிவிட்ட நிலையில் தற்பொழுது இன்னொரு பெரிய பிரச்சனையில் பேஸ்புக் நிறுவனம் சிக்கியுள்ளது.6.8…

47 mins ago

டிஜிட்டலில் தெறிக்க விடும் பள்ளி கல்விதுறை.! வியக்கும் பிற மாநிலங்கள்.!

தமிழக பள்ளி கல்விதுறை பல்வேறு மாற்றங்களை கண்டு வருகின்றது. மேலும், டிஜிட்டல் யுகத்தில் தற்போது வேகமாக சென்று கொண்டிருகின்றது. இதனால் மற்ற மாநிலங்களை காட்டிலும் பல்வேறு நடவடிக்கைகள்…

47 mins ago

இணையத்தில் லீக் ஆன பேஸ்புக் புகைப்படங்கள் – பயனாளர்கள் அதிர்ச்சி

பேஸ்புக்கில் இருந்து 6.8 மில்லியனுக்கும் அதிகமான புகைப்பட்டங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.உலகம் முழுவதும் சுமார் 200 கோடிக்கும் அதிகமானவர்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளம்…

47 mins ago

ரூ.6,100க்கு செம்ம ஸ்டைலான ஸ்மார்ட்போன்… சியோமிக்கு போட்டியாக களம் இறங்கும் மொபிஸ்டார்

Mobiistar C1 Shine : வியட்நாம் நாட்டினைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான மொபிஸ்டார் (Mobiistar C1 Shine) தற்போது புதிய போன் ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறது.Mobiistar…

47 mins ago

வானிலிருந்து வந்து 244000 ஆண்டுகளுக்கு முன்பு பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..

இன்று வரை உலகத்தில் பெரும் மர்மம் நிறைந்த பகுதியாகவே மெசபடோமியா இருக்கின்றது. அங்கு ஏராளமான வினோதங்களும் நிறைந்துள்ளதாவே இருக்கின்றது. இன்று வரை பல்வேறு ஆராய்ச்சியாளர்களும் முகாமிட்டு வருகின்றனர்.அங்கு…

47 mins ago