ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரத்துக்கு 5 நாள் சிபிஐ காவல் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கார்த்தி சிதம்பரம், சிபிஐ அதிகாரிகளிடையே நடைபெற்ற சுவாரஸ்யமான உரையாடல் வெளியாகியுள்ளது

கார்த்தி சிதம்பரம் தனது நண்பர்களுடன் தமிழில் பேசிக் கொண்டிருந்தார்.

இதனை பார்த்த சிபிஐ அதிகாரிகள், ‘ஆங்கிலத்தில் பேசுங்கள்’ என்று அவரிடம் கூறினர்.

‘உங்களுக்கு அதுதான் பிரச்னை என்றால், நீங்களும் ஒருவருக்கொருவர் ஆங்கிலத்தில் தான் பேசிக் கொள்ள வேண்டும்’ என்று கார்த்தி சிதம்பரம் அதிரடியாக கூறினார்.

சிபிஐ அதிகாரிகள் சும்மா இருப்பார்களா..?. ‘நீங்கள் தான் காவலில் இருக்கிறீர்கள், நாங்கள் அல்ல’ என்று படாரென கூறிவிட்டனர்.

இதுஒருபுறம் இருக்க, நீதிமன்ற விசாரணையின் போது, கார்த்தி சிதம்பரத்திற்கு வீட்டு சாப்பாடு வழங்க அனுமதிக்க வேண்டும் என்று அவரது தரப்பில் கேட்டிருக்கிறார்கள். ஆனால், நீதிமன்றம் அதற்கு மறுத்துவிட்டது. தேவையான மருத்துகளை மருத்துவரின் பரிந்துரைப்படி கொடுக்கலாம் என்று அனுமதித்துள்ளது. மேலும், தினமும் காலை ஒரு மணி நேரமும் மாலை ஒரு மணி நேரமும் கார்த்தி சிதம்பரத்தின் வழக்கறிஞர் அவரைச் சந்திக்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Reply