மாநிலங்களவை எம்பி பதவிக்கு மன்மோகன் சிங் மீண்டும் போட்டி…நாளை ராஜஸ்தானில் வேட்புமனு தாக்கல்

ஜெய்ப்பூர்: மாநிலங்களவை எம்பி பதவிக்காக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நாளை ராஜஸ்தான் மாநிலத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (89), அசாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்பியாகத் தேர்வு செய்யப்பட்டிருந்தார். அவரது பதவிக்காலம் கடந்த ஜூன் மாதம் நிறைவடைந்தது. மீண்டும் அவரை எம்பியாக தேர்வு செய்ய கட்சி தலைமை முடிவு செய்துள்ளது. அதனால், ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடப்பதால், அம்மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்பியாக ேதர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. ஏற்கனவே எம்பியாக இருந்த பாஜ மாநிலத் தலைவர் மதன் லால் சைனி கடந்த ஜூன் மாதம் காலமானார்.
அவர் கடந்த ஆண்டுதான் மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டிருந்தார் என்பதால், அங்கு மாநிலங்களவைக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த இடத்தில்தான் மன்மோகன் சிங் போட்டியிடுகிறார். அவர் நாளை (ஆக. 13) தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய இருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 200 உறுப்பினர்களைக் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சி 112 எம்எல்ஏக்களுடன் பெரும்பான்மை பலம் பெற்றுள்ளது. மேலும் பகுஜன் சமாஜ் மற்றும் சில சுயேச்சை எம்எல்ஏக்களும் அக்கட்சிக்கு ஆதரவளித்துள்ளனர். அதனால், மன்மோகன் சிங் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. இவர் கடந்த 1991ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை அசாமில் இருந்து தொடர்ந்து 5 முறை மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டவர்; தொடர்ந்து இருமுறை பிரதமராக இருந்ததுடன், மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர், ஆர்பிஐ கவர்னர், திட்டக்குழு துணைத் தலைவர், நிதியமைச்சர் என பல முக்கியப் பொறுப்புகளையும் வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

கூகுள் புதிய ஆண்ட்ராய்டு பெயரை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு Q இயங்குதளம் ஆண்ட்ராய்டு 10 என்ற பெயரில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இத்துடன் புதிய இயங்குதளத்துக்கான லோகோவையும் வெளியிட்டது.இதுவரை ஆண்ட்ராய்டு Q…

11 hours ago

கணினியை இப்படி எல்லாம் பயன்படுத்தி இருக்கிறீங்களா?

இன்றைய உலகில் கணினியின் தேவை அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. ஒவ்வொருவரும் கணினியின் பயனை உணர்ந்துக்கொள்வது அவசியமாகிவிட்டது. கணினியைப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாதாகிவிட்டது. இன்று கணினியை எளிய முறையில் கையாள…

11 hours ago

RS 13,999 விலையில் அறிமுகமானது MOTOROLA ONE ACTION.

மோட்டோரோலா ஒன் அதிரடி இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இந்த புதிய மோட்டோரோலா தொலைபேசி ஆகஸ்ட் 30 முதல் விற்பனைக்கு வருகிறது. நிறுவனத்தின் மற்ற ஸ்மார்ட்போன்களைப் போலவே,…

11 hours ago

200 ஆண்டுகள் ஏலியனாக வாழ்வேன் : நித்தியானந்தா ! வைரலாகும் வீடியோ !

நித்தியானந்தா என்றாலே எப்போதும், பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. சுவாமி நித்தியானந்தா ஆன்மீகத்தையும் தாண்டி அறிவியல் பூர்வமாகவும், ஐன்டீன்ஸ் விதியை தவறு என்று கூறி உலகத்தையும் திருப்பி போட்டார்.இந்நிலையில்,…

11 hours ago

சாலைகளில் செல்போன் பேசியபடி செல்லும் பெண்கள்தான் முதல் இலக்கு: கொள்ளையன் பகீர் வாக்குமூலம்.!

இப்போது வரும் புதிய தொழில்நுட்பங்கள் அனைத்தும் மக்களுக்கு பயன்படும் வகையில் தான் இருக்கிறது, ஆனால் அந்த தொழில்நுட்பத்தை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும், எந்த இடத்தில் பயன்படுத்தக்…

11 hours ago

உணவாக மாறிய டைட்டானிக் கப்பல்! என்ன நடந்தது தெரியுமா?

ஒரு நூற்றாண்டிற்கு முன்னால் கடலுக்குள் மூழ்கிய ஆர்எம்எஸ் டைட்டானிக் கப்பல், அதன் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக ஒரு புதிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.கடலில் உள்ள உப்பு…

11 hours ago