எட்டு வழி சாலை திட்டம்! அன்புமணி பெற்ற தடைக்கு எதிரான மத்திய அரசின் வழக்கு! உச்சநீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!

கடந்த ஆண்டு சென்னை முதல் சேலம் வரையிலான 8 வழி பசுமை சாலை திட்டத்தினை மத்திய அரசு அறிவித்தது. அதற்கான நிலம் கையகப்படுத்தும் பணியும் நடைபெற்றது. இந்த திட்டத்திற்கு விவசாயிகள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு நிலவியது. அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரையில் முதலில் திராவிட முன்னேற்றக் கழகம் அதனை வரவேற்று பேசியது. பின்னர் தேர்தல் நேரத்தில் எதிர்ப்பதாக கூறியது.

பாமக உள்ளிட்ட கட்சிகள் இந்த திட்டத்திற்கு எதிராக களமிறங்கியது. குறிப்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் மக்களை சந்தித்து கருத்து கேட்டு, பாதிக்கப்படும் மக்களை அழைத்துக்கொண்டு நேராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மேலும் மக்களவையில் இது குறித்து பேசிய அன்புமணி ராமதாஸ் இந்த திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் துறையின் அனுமதி கிடைக்கவில்லை என்பதனை மக்களுக்கு தெரியப்படுத்தி, அதனை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

இதனையடுத்து நிலம் கையகப்படுத்தப்பட்ட உத்தரவிற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது. மீண்டும் நிலங்களை விவசாயிகளிடம் ஒப்படைக்குமாறும் தெரிவித்திருந்த நிலையில், 8 வழி சாலை திட்டத்திற்கு எதிராக தடை விதித்து வெளியிட்ட தீர்ப்பினை, ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் இந்த திட்டத்தின் திட்ட இயக்குனர் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கு விசாரணையானது கடந்த ஜூன் 3ஆம் தேதி எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் கேவியட் மனுவை தாக்கல் செய்திருந்த அன்புமணி சார்பில் பாமக வழக்கறிஞர் பாலு ஆஜராகினார். வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு உயர் நீதிமன்றம் விதித்த தடையை நீக்க மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டது. இது குறித்து விளக்கமளிக்க அன்புமணி உள்ளிட்ட அனைத்து மனுதாரர்களுக்கும் நோட்டிஸ் அனுப்பி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணையானது கடந்த ஜூலை 31 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பசுமை வழிச் சாலை வழக்கு, – சென்னை உயர்நீதிமன்ற தடை உத்தரவுக்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் ஆகஸ்ட் 7ம் தேதிக்கு ஒத்தி வைத்தது. அன்புமணி ராமதாஸ் சார்பில் மூத்த வழக்கறிஞர் எம் என் ராவ் ஆஜரானார்.

இந்நிலையில் இன்று விசாரணைக்கு வந்த வழக்கில் மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி கிடைக்கும் வரை எந்தவொரு கட்டுமான பணிகளையும் மேற்கொள்ள மாட்டோம் என 8 வழிச்சாலை திட்டம் குறித்து உச்சநீதிமன்றத்தில், மத்திய அரசு உறுதி அளித்தது.

அனுமதி கிடைக்கும் வரை, பணி இல்லையென்றால் நீதிமன்றத்திடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள்? என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்ற தடை உத்தரவுக்கு இடைக்காலமாக தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்தது.

வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவிப்பு

Share

Recent Posts

கூகுள் புதிய ஆண்ட்ராய்டு பெயரை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு Q இயங்குதளம் ஆண்ட்ராய்டு 10 என்ற பெயரில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இத்துடன் புதிய இயங்குதளத்துக்கான லோகோவையும் வெளியிட்டது.இதுவரை ஆண்ட்ராய்டு Q…

11 hours ago

கணினியை இப்படி எல்லாம் பயன்படுத்தி இருக்கிறீங்களா?

இன்றைய உலகில் கணினியின் தேவை அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. ஒவ்வொருவரும் கணினியின் பயனை உணர்ந்துக்கொள்வது அவசியமாகிவிட்டது. கணினியைப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாதாகிவிட்டது. இன்று கணினியை எளிய முறையில் கையாள…

11 hours ago

RS 13,999 விலையில் அறிமுகமானது MOTOROLA ONE ACTION.

மோட்டோரோலா ஒன் அதிரடி இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இந்த புதிய மோட்டோரோலா தொலைபேசி ஆகஸ்ட் 30 முதல் விற்பனைக்கு வருகிறது. நிறுவனத்தின் மற்ற ஸ்மார்ட்போன்களைப் போலவே,…

11 hours ago

200 ஆண்டுகள் ஏலியனாக வாழ்வேன் : நித்தியானந்தா ! வைரலாகும் வீடியோ !

நித்தியானந்தா என்றாலே எப்போதும், பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. சுவாமி நித்தியானந்தா ஆன்மீகத்தையும் தாண்டி அறிவியல் பூர்வமாகவும், ஐன்டீன்ஸ் விதியை தவறு என்று கூறி உலகத்தையும் திருப்பி போட்டார்.இந்நிலையில்,…

11 hours ago

சாலைகளில் செல்போன் பேசியபடி செல்லும் பெண்கள்தான் முதல் இலக்கு: கொள்ளையன் பகீர் வாக்குமூலம்.!

இப்போது வரும் புதிய தொழில்நுட்பங்கள் அனைத்தும் மக்களுக்கு பயன்படும் வகையில் தான் இருக்கிறது, ஆனால் அந்த தொழில்நுட்பத்தை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும், எந்த இடத்தில் பயன்படுத்தக்…

11 hours ago

உணவாக மாறிய டைட்டானிக் கப்பல்! என்ன நடந்தது தெரியுமா?

ஒரு நூற்றாண்டிற்கு முன்னால் கடலுக்குள் மூழ்கிய ஆர்எம்எஸ் டைட்டானிக் கப்பல், அதன் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக ஒரு புதிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.கடலில் உள்ள உப்பு…

11 hours ago