பாஜகவின் அடுத்த அதிரடி ப்ளான்! கலக்கத்தில் கட்சிகள்!

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் பாஜக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. இதில் பாஜக மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. இதனையடுத்து பாஜக ஆட்சியில் அல்லாத மாநிலங்களை கைப்பற்ற பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நேற்று கர்நாடக சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது குமாரசாமிக்கு 99 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவும், பாஜக கூட்டணிக்கு 105 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளித்தனர். இந்த நிலையில் குமாரசாமி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

மேலும் இன்னும் ஒரு சில நாட்களில் பாஜகவின் எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்பார் என்று தெரிவிக்கின்றனர்.
இதே போல் இன்னும் ஒரு சில மாநிலங்களில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை இழுத்து அந்த மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்ற பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் குறிப்பாக மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்க பாஜக தலைமை திட்டம் போட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். இதனால் பாஜக ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சொல்கின்றனர். ஏற்கனவே 17 மாநிலங்களில் பாஜக ஆட்சியில் உள்ளது. நேற்று கர்நாடகாவில் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வெற்றிபெற்றதால் பாஜக ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 18 மாநிலங்களாக உயர்ந்துள்ளது.

Share

Recent Posts

குற்றப் பத்திரிகை! ‘மாஜி’ சிதம்பரம் , மகன் கார்த்தி மீது…

புதுடில்லி:'ஐ.என்.எக்ஸ்., மீடியா' முறைகேடு வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம், அவரது மகன் கார்த்தி உள்ளிட்ட, 15 பேர் மீது, டில்லி நீதிமன்றத்தில், சி.பி.ஐ., அதிகாரிகள் குற்றப்பத்திரிகை…

12 hours ago

விசாரணையில் விவசாயி பலி: டி.எஸ்.பி., மீது வழக்கு

ஹபூர்,:உத்தர பிரதேச மாநிலத்தில், விசாரணையின் போது போலீசார் கடுமையாக தாக்கியதில், விவசாயி உயிரிழந்த வழக்கில், டி.எஸ்.பி., உட்பட நால்வர் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.உ.பி.,யில், முதல்வர் யோகி…

12 hours ago

நாடு முழுவதும் தரமற்ற பால் விற்பனை அதிர்ச்சி! எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., ஆய்வில் திடுக் தகவல்

புதுடில்லி, :நாட்டின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்படும் பதப்படுத்தப்பட்ட பாலில், 38 சதவீதம் தரமற்றது என்பது, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., எனப்படும், இந்திய உணவு பாதுகாப்பு தரச்சான்று நிர்ணய அமைப்பு…

12 hours ago

உ.பி.,யில் பட்டப்பகலில் ஹிந்து சமாஜ் தலைவர் சுட்டுக்கொலை

லக்னோ, உத்தர பிரதேசத்தில், பட்டப்பகலில், ஹிந்து சமாஜ் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டது, பெரும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி…

12 hours ago

முன்னாள் பயங்கரவாதி டில்லியில் கைது

ஜம்மு,: ஜம்மு - காஷ்மீரில், 1990ல், நான்கு விமானப்படை வீரர்களை படுகொலை செய்த, ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியை சேர்ந்த முன்னாள் பயங்கரவாதி ஜாவித் அகமது மிர்…

12 hours ago

பாக்.,குக்கு எப்.ஏ.டி.எப்., எச்சரிக்கை: கடும் நடவடிக்கை எடுக்க

புதுடில்லி :பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளிக்கும் விஷயத்தில், பாகிஸ்தானை, அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை, 'கிரே' பட்டியலில் வைத்திருக்க, எப்.ஏ.டி.எப்., முடிவு செய்துள்ளது. 'பயங்கரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை…

12 hours ago