புதிதாக 3 அரசு சட்டக்கல்லூரிகள், 10 ஆயிரம் தடுப்பணைகள்..: பேரவையில் 110 விதியின்கீழ் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை : தமிழகத்தில் புதிதாக 3 அரசு சட்டக்கல்லூரிகள் அமைக்கப்படும் என்று பேரவையில் 110 விதியின்கீழ் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு:*தமிழகத்தில் புதிதாக 3 அரசு சட்டக்கல்லூரிகள் ரூ. 9.58 கோடி செலவில் அமைக்கப்படும். 2019-2020ம் கல்வியாண்டு முதல் தொடங்கப்படும். உடனடியாக ஆரம்பகட்ட பணிகளை மேற்கொள்வதற்காக ஒவ்வொரு கல்லூரிக்கும் ஒரு தனி அலுவலர் நியமிக்கப்படுவார். ஏற்கனவே 13 அரசு சட்டக் கல்லூரிகள், ஒரு தனியார் சட்டக்கல்லூரி உள்ள நிலையில் முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். *திருநெல்வேலி அரசு சட்டக்கல்லூரியில் ரூ.7.70 கோடி செலவில் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும். *மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 24 சார்பதிவாளர் அலுவலகத்திற்கு ரூ.24 கோடியில் சொந்த கட்டிடம் கட்டப்படும்.
*சேலத்தில் ரூ.1 கோடியில் துணை பதிவுத்துறை அலுவலகம் கட்டித் தரப்படும். *5 ஆயிரம் கி.மீ ஊரக சாலைகள் ரூ.1200 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.*கஜா புயலால் சேதமடைந்த சாலைகள், பாலங்கள் ரூ.200 கோடி செலவில் மேம்படுத்தப்படும். *மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.11, 441 கோடி வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் ரூ.12,500 கோடி வங்கி கடன் வழங்க இலக்கு நிர்ணயம். *தமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த ரூ.318 கோடியில் 10 ஆயிரம் தடுப்பணைகள் கட்டப்படும். தண்ணீரை சேமித்து பாசனத்திற்கு பயன்படுத்துவதற்காக தடுப்பணைகள் கட்டப்படும். *ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் மூலம் பல்வேறு தொழில் நிறுவனங்களில் தேவைக்கேற்ப கிராமம் மற்றும் நகர்ப்புற இளைஞர்கள் திறன் பயிற்சி பெற வழிவகை செய்யப்படும். இதற்காக நடப்பாண்டில் ரூ. 125 கோடி செலவில் 25,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக் கூடிய பயிற்சிகள் வழங்கப்படும். *சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் தற்போது இயங்கி வரும் பல்வேறு சார் நீதிமன்றங்களுக்கு கூடுதல் இடம் அளிப்பதற்காக ரூ.202.40 கோடி மதிப்பீட்டில் ஒரு அடுக்குமாடி கட்டிடம் கட்டப்படும்.

Share

Recent Posts

கூகுள் புதிய ஆண்ட்ராய்டு பெயரை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு Q இயங்குதளம் ஆண்ட்ராய்டு 10 என்ற பெயரில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இத்துடன் புதிய இயங்குதளத்துக்கான லோகோவையும் வெளியிட்டது.இதுவரை ஆண்ட்ராய்டு Q…

12 hours ago

கணினியை இப்படி எல்லாம் பயன்படுத்தி இருக்கிறீங்களா?

இன்றைய உலகில் கணினியின் தேவை அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. ஒவ்வொருவரும் கணினியின் பயனை உணர்ந்துக்கொள்வது அவசியமாகிவிட்டது. கணினியைப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாதாகிவிட்டது. இன்று கணினியை எளிய முறையில் கையாள…

12 hours ago

RS 13,999 விலையில் அறிமுகமானது MOTOROLA ONE ACTION.

மோட்டோரோலா ஒன் அதிரடி இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இந்த புதிய மோட்டோரோலா தொலைபேசி ஆகஸ்ட் 30 முதல் விற்பனைக்கு வருகிறது. நிறுவனத்தின் மற்ற ஸ்மார்ட்போன்களைப் போலவே,…

12 hours ago

200 ஆண்டுகள் ஏலியனாக வாழ்வேன் : நித்தியானந்தா ! வைரலாகும் வீடியோ !

நித்தியானந்தா என்றாலே எப்போதும், பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. சுவாமி நித்தியானந்தா ஆன்மீகத்தையும் தாண்டி அறிவியல் பூர்வமாகவும், ஐன்டீன்ஸ் விதியை தவறு என்று கூறி உலகத்தையும் திருப்பி போட்டார்.இந்நிலையில்,…

12 hours ago

சாலைகளில் செல்போன் பேசியபடி செல்லும் பெண்கள்தான் முதல் இலக்கு: கொள்ளையன் பகீர் வாக்குமூலம்.!

இப்போது வரும் புதிய தொழில்நுட்பங்கள் அனைத்தும் மக்களுக்கு பயன்படும் வகையில் தான் இருக்கிறது, ஆனால் அந்த தொழில்நுட்பத்தை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும், எந்த இடத்தில் பயன்படுத்தக்…

12 hours ago

உணவாக மாறிய டைட்டானிக் கப்பல்! என்ன நடந்தது தெரியுமா?

ஒரு நூற்றாண்டிற்கு முன்னால் கடலுக்குள் மூழ்கிய ஆர்எம்எஸ் டைட்டானிக் கப்பல், அதன் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக ஒரு புதிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.கடலில் உள்ள உப்பு…

12 hours ago