மானத்தைப் பற்றிக் கவலைப்படாத டி.டி.வி.தினகரனுடன் உடன் விவாதிக்க முடியாது – முக ஸ்டாலின்!!

“மானத்தைப் பற்றிக் கவலைப்படும் ஆயிரம் பேருடன் விவாதிக்கலாம். மானத்தைப் பற்றிக் கவலைப்படாத ஒரு நபரிடம் கூட விவாதிக்க முடியாது”, என்றார் தந்தை பெரியார். இதில், டி.டி.வி.தினகரன் இரண்டாம் ரகம் என திமுகவின் அதிகாரபூர்வ நாளிதழான முரசொலியில் தலையங்கம் பகுதியில் ஓர் கட்டுரை வந்துள்ளது. அந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதாவது,

‘மானத்தைப் பற்றிக் கவலைப்படும் ஆயிரம் பேருடன் கூட விவாதிக் கலாம். மானத்தைப் பற்றிக் கவலைப்படாத ஒரே ஒரு ஆளுடன் கூட விவாதிக்க முடியாது” என்றார் அறிவுலக ஆசான் தந்தை பெரியார்.

இதில் டி.டி.வி. தினகரன் இரண்டாவது ரகம்! சித்தி, சிறையில் இருக்கிறார். தம்பி சிறையில் இருக்கிறார்.
அத்தை சிறையில் இருக்கிறார். அதுவும் தமிழ்நாட்டு சிறையில் அல்ல. வெளி மாநிலத்தில் கர்நாடக மாநிலத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளார்கள். தமிழகத்துக்கான காவிரி உரிமையை மீட்பதற்காக கர்நாடகா சென்று கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்படவில்லை அவர்கள். ஜெயலலிதாவை வீட்டுச் சிறையில் வைத்து சசிகலா குடும்பம் சுரண்டிக் கொழுத்தது சட்ட பூர்வமாக நிரூபிக்கபபட்ட நிலையில்தான் அவர்கள் சிறையில் இருக்கிறார்கள்.

இதில் மயிரிழையில் தப்பியவர் டி.டி.வி. தினகரன். சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, வி.என்.சுதாகரன், இளவரசியை அடுத்து ஐந்தாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டவர்.

இன்னும் சொன்னால் ஜெயலலிதாவையே மாட்டிவிட்ட ஜெகஜால ஜித்தர். ‘சொத்துக் குவிப்பு வழக்கையும், தினகரன் சம்பந்தப்பட்ட லண்டன் ஹோட்டல் வழக்கையும் ஒன்றாகச் சேர்த்துவிட்டால் இரண்டு வழக்கையும் முடிக்கவே முடியாது. எனவே சேர்த்து விடுவோம்’ என்று ஜெயலலிதாவுக்கு சட்ட ஆலோசனை சொல்லப்பட்டது. லண்டன் ஹோட்டல் வழக்கை இதனுடன் சேர்த்தால் நாம் நிரந்தரமாக மாட்டிக் கொள்வோம் என்று தடுத்து, சொத்துக் குவிப்பு வழக்கை தீர்ப்பு வரைக்கும் கொண்டு போகக் காரணமாக இருந்தவர் தினகரன்.

முறைகேடாகச் சம்பாதித்த பணத்தை நமது எம்.ஜி.ஆர். நாளிதழ், ஜெயா பப்ளிகேஷன் வங்கிக் கணக்குகளில் கோடிகளாகச் சேர்த்து, அங்கிருந்து பினாமி நிறுவனங்களில் பங்கிட்டார்கள் என்பதை சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி குன்ஹா குறிப்பிட்டு இருப்பார். அதில் ஜெயலலிதா, சசிகலா மட்டுமல்ல; தினகரனும் பங்குதாரர்தான் என்றும் குன்ஹா குறிப்பிட்டு இருப்பார்.

இங்கிலாந்து ‘பார்கேல’ வங்கியில் ஒரு கோடியே 4 லட்சத்து 93 ரூபாய் அமெரிக்க டாலரையும், 44 லட்சம் இங்கிலாந்து பவுண்டுகளையும் டிப்பர் இன்வெஸ்மெண்ட் நிறுவனத்தின் பெயரில் சட்ட விரோதமாக முதலீடு செய்ததாகவும் – ஐரோப்பிய வங்கிகளில் ஹாப்ஸேகரப்ட் ஹோட்டல் தொடங்க டிப்பர் இன்வெஸ்மெண்ட், டெண்டி இன்வெஸ்மெண்ட், பேனியன் ட்ரீ ஆகிய மூன்று நிறுவனங்களின் பேரில் ‘பார்கேல’ வங்கியில் 36.36 லட்சம் அமெரிக்க டாலர் மற்றும் 1 லட்சம் பவுண்டுகளை முதலீடு செய்ததாகவும் – டி.டி.வி. தினகரன் மீது 21 ஆண்டுகளாக எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. வழக்கை எதிர் கொள்ளாமல் விசாரணைக்கு தடை விதிக்கக் கேட்டு வழக்கு தாக்கல் செய்தவர்தான் தினகரன்.

கொள்ளையைப் பங்குபோடும் அதிகார யுத்தத்தில் இரட்டை இலையைப் பெற தேர்தல் அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் கைதாகி டெல்லி சிறையில் இருந்து வெளியில் வந்தவர் தினகரன். இதில் இடைத்தரகராக இருந்த சுகேஷ் சந்திரசேகரும், மல்லிகார்ஜூனாவும் சிறையில் இருக்கிறார்கள்.

120 பி குற்றச்சதி, IPC 201 ஆதாரங்களை அழித்தல், ஊழல் தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்யலாம் என்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் சொன்னது. இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி தினகரன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 1999ல் அவர் பெரியகுளம் நாடாளுமன்றத்தில் வென்றபோதுதான் அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் சிக்கினார். ‘நான் தான் இந்தியக் குடிமகனே இல்லையே, சிங்கப்பூர் குடிமகன் ஆச்சே’ என்று ஹவாலா வுக்கே அல்வா கொடுக்க முயற்சித்தார். அமலாக்கத்துறை 31 கோடி ரூபாய் அபராதம் விதித்தது. அது பின்னர் 28 கோடியாகக் குறைக்கப்பட்டது.

இவை அனைத்துக்கும் மேலாக ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு காரணம், டி.டி.வி. தினகரனை வெற்றி பெறவைக்க 89 கோடி ரூபாய் பங்கிடப்பட்டதுதான். தேர்தல் ஆணையம் வெளியிட்ட 29 பக்க அறிக்கையில் டி.டி.வி. தினகரன் மேல் புகார்கள் உள்ளன. அமைச்சர் விஜயபாஸ்கர் மீது சொல்லப்படுவது அனைத்தும் தினகரனுக்காக செய்யப்பட்டவையே.

அடுத்து இவர்கள் பிரிந்தார்கள். 20 ரூபாய் நோட்டையே டோக்கனாகக் கொடுத்தார் தினகரன் என்றும், இந்த டோக்கன் வாங்கியவர்களுக்கு பின்னர் பணம் வந்து சேரவில்லை என்றும், தினகரன் தொகுதிக்குள் வந்தபோது 20 ரூபாய் நோட்டோடு பெண்கள் வந்ததும், இன்னும் சிலர் தினகரன் வீட்டை நோக்கியே வந்ததும், அதனாலேயே ஆர்.கே.நகருக்கு வராமலேயே தினகரன் தவிர்ப்பதும் ஊர் அறிந்த ரகசியங்கள்.

இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவு 420 ன்படி பல்வேறு மோசடிகளில் சிக்கி – இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 120 (1) பிரிவின்படி பல்வேறு குற்றவியல் சதிகளைச் செய்து – ஆர்.கே. நகர் தொகுதி மக்களை 20 ரூபாய் நோட்டைக் கொடுத்து ஏமாற்றிய டி.டி.வி. தினகரன் சொல்கிறார், “தேர்தலைப் பார்த்து தி.மு.க. பயப் படுகிறது’ என்று. கட்சி ஆரம்பித்து சில மாதங்களே ஆன சில்லறைகளுக்கு சிகரங்களைப் பற்றி என்ன தெரியும்? நீயே அயிரை மீன். உனக்கு ஏன் விலாங்குச் சேட்டை?.

இவ்வாறு அந்த முரசொலி தலையங்கத்தில் கட்டுரை வெளியாகி உள்ளது.

“மானத்தைப் பற்றிக் கவலைப்படும் ஆயிரம் பேருடன் விவாதிக்கலாம். மானத்தைப் பற்றிக் கவலைப்படாத ஒரு நபரிடம் கூட விவாதிக்க முடியாது”, என்றார் தந்தை பெரியார்.
டி.டி.வி.தினகரன் இரண்டாம் ரகம்!
அயிரை மீனுக்கு ஏன் விலாங்கின் சேட்டை?https://t.co/L6wleTy2J4
#முரசொலிதலையங்கம்
pic.twitter.com/6ORSkp3DDr
– DMK – Dravida Munnetra Kazhagam (@arivalayam) January 8, 2019

Share

Recent Posts

பொங்கலுக்கு விலை குறைந்த சாம்சங் ஸ்மார்ட்போன்கள்.!

தமிழர் திருநாளாம் தை பொங்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. இதையொட்டி சாம்சங் ஸ்மார்ட்போன் நிறுவனம் தற்போது விலையை குறைந்து விற்பனையை அதிரவிட்டுள்ளது.இதனால் ஏராளமான வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போன்களை வாங்க முன்…

3 hours ago

வோடபோன் வழங்குகிறது மேலும் புதிய சலுகை ரூ.396க்கு உங்களுக்கு கிடைக்கும் 96.6GB டேட்டா…!

தொடர்ந்து வோடபோன் நிறுவனம் சமீபத்தில் ரூ.1,499 விலையில் புதிய சலுகையை அறிவித்தது. பின் சில சலுகைகளை மாற்றியமைத்து பயனர்களுக்கு அதிகளவு பலன்களை வழங்கியது. இதைத்தொடர்ந்து வோடபோன் ரூ.396…

3 hours ago

ட்ராய் யின் அதிரடி அறிவிப்பு 100 DTH சேனல்களுக்கு மாதம் ரூ.153 கட்டணம் செலுத்த வேண்டும்

மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் கேபிள் மற்றும் DTH . சேவை கட்டணம் பற்றி புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் 100 இலவச அல்லது…

3 hours ago

மாதம் 100 டிவி சேனல்கள் ரூ.153 கட்டனம் : டிராய்

இந்திய தொலைத் தொடர்பு ஒழங்குமுறை ஆனையம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் , விருப்பமான 100 டிவி சேனல்களை ரூ.153 கட்டணத்தில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்த…

3 hours ago

Honor 10 Lite 24MP Ai செல்பி கேமராவுடன் அறிமுகம்

சிறப்பு செய்திHonor முதல் முறையாக டியூவ்ட்ராப் நோட்ச் உடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 2மாதங்களுக்கு முன்பே சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த போன் பிளிப்கார்டில் எக்ஸ்க்ளுசிவாக விற்பனை…

3 hours ago

பொங்கல் பிளான் தெறிக்கவிடும் பிஎஸ்என்எல்: ஏர்டெல்லுக்கு சாவல்.!

பிஎஸ்என்எல் நிறுவனம் பொங்கல் பிளான் போல் ரூ.798க்கு அறிவித்துள்ளது. இந்த ஆப்பர் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.மேலும், இது ஏரடெல் நிறுவனத்திற்கு கடும் போட்டியை ஏற்படும்…

3 hours ago