வருமான வரி சட்டதிருத்த மசோதாவிற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் : கணக்கில் காட்டாத வருமானத்திற்கு 50% வரி

புதுடெல்லி: வருமான வரி சட்டதிருத்த மசோதாவிற்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். குடியரசு தலைவரின் ஒப்புதலை அடுத்து கணக்கில் காட்டாத வருமானத்திற்கு 50 சதவீதம் வரி கட்ட வேண்டி வரும். வங்கிகளில் பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளாக டெபாசிட் செய்யப்படும் கணக்கு காட்டாத பணத்துக்கு 50 சதவீத வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்தது.…

அதிமுக அரசை ஆட்டுவிக்கிறதா பாஜக..? நம்பி நாராயணன்

விருந்தினர் பக்கம்: (இந்தப் பக்கத்தில் பல்வேறு பிரமுகர்களின் கருத்துக்கள் இடம் பெறும். அவை அந்தந்த பிரமுகர்களின் கருத்துகளே. இப்போது இந்துத்துவ பிரமுகர் நம்பி நாராயணன் அவர்களது கட்டுரை இடம் பெற்றுள்ளது.) பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்ட ஜெயலலிதாவின் பூத உடலுக்கு அருகில், அதிமுக எம்பி., எம்.எல். ஏக்களுக்கு மத்தியில் பாஜகவின் வெங்கய்ய நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், ஹெச்.ராஜா, முரளீதர்ராவ் ஆகியோர்…

மறுபடியும் ஆஸ்கார் வெல்வாரா ரஹ்மான்?

பிரபல பிரேசில் கால்பந்து விளையாட்டு வீரரான பீலே அவர்களின் வாழ்க்கையை பற்றிய படமான “Pelé: Birth of a Legend” என்ற ஆங்கில படத்திற்கு ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த வருடத்திற்கான ஆஸ்கார் போட்டியில் இந்த படமும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதில் இசைக்கான பரிந்துரைக்கப்பட்ட படங்களில் பீலே படமும் பெரிதும் விருதுக்கு எதிர்பார்க்கபடுகிறது. ஏற்கனவே 2009 இல் “slumdog millionaire” என்ற…

மார்கழிக்கு ஏன் இத்தனை சிறப்பு?

இந்த மாதத்தில்தான் மகாவிஷ்ணுவுக்குகந்த வைகுண்ட ஏகாதசி வருகிறது. இந்த நாளை கீதாஜெயந்தி என்று- கண்ணன் கீதை மொழிந்த நாளென்று கீதையை வாசிப்பார்கள். நடராஜப் பெருமானுக்குகந்த திருவாதிரையும் மார்கழியில்தான் அமைகிறது. அந்த நாளில் அதிகாலையிலேயே நடராஜருக்கு அபிஷேகம் செய்து வீதியுலா வரச்செய்வர். “மாஸானாம் மார்க்கசீர்ஷோஹம்’ என்பது கண்ணன் வாக்கு. நரசிம்மர் அவதாரம் நிகழ்ந்த வைகாசியையோ, ராமர் அவதரித்த சித்திரையையோ, திருமலைவாசனுக்குகந்த…

‘சசிகலாவை பொதுச்செயலாளராக ஏற்றுக்கொள்ள முடியாது’ – எதிர்ப்பு தெரிவித்த நிர்வாகிக்கு அடி உதை.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில், அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தலமையில் ஜெயலலிதா பேரவை ஆலோசனைக் கூட்டம் நேற்று இரவு .10.45 க்கு துவங்கியது. இதில் அமைச்சர்கள், ஆர்.பி. உதயகுமார், கடம்பூர் ராஜி மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில் பேசிய உதயகுமார், ”அதிமுகவின் பொதுச் செயலாளராக ‘சின்னம்மா சசிகலாவை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு நாம் உறுதுணையாக இருந்து செயலாற்ற வேண்டும்”…

பழைய ரூபாய் நோட்டுகள் பயன்பாட்டை நீட்டிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பை எதிர்த்து பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. மேலும் நேற்றுடன் பழைய ரூபாய் நோட்டுகள் மருத்துவமனை, ரயில் நிலையங்களில் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இதனை நீட்டிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகளை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு…

வங்கிகளில் அதிக பணம் டெபாசிட் செய்த 3000 பேருக்கு நோட்டீஸ்: சுஷில் சந்திரா

டெல்லி: வங்கிகளில் அதிக பணம் டெபாசிட் செய்த 3000 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் சுஷில் சந்திரா தெரிவித்துள்ளார். மேலும் 291 பேரிடம் கருப்பு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார். TickTickNews

தில்லியில் இளம்பெண் காரில் பலாத்காரம்: ஓட்டுனர் கைது

புதுதில்லி தில்லியில் இளம்பெண் ஒருவர் நேற்று காரில் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். மோதிபாக் என்ற இடத்தில் பேருந்துக்காக காத்திருந்த அந்த பெண்ணுக்கு லிப்ட் தருவதாக கூறி ஏற்றிச் சென்ற கார் ஓட்டுநர் வழியில் அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து இளம்பெண் அளித்த புகாரின் பேரில் கார் டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 2012-ம் ஆண்டு தனியார் பேருந்து…