ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரம்: கொல்கத்தா ரிசர்வ் வங்கி முன்பு திரிணமூல் ஆர்ப்பாட்டம்

அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி, மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ரிசர்வ் வங்கி முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அந்த மாநில ஆளுங்கட்சியான திரிணமூ அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி, மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ரிசர்வ்…

புலந்த்சஹர் பாலியல் பலாத்காரம்: ஆஸம் கானின் மன்னிப்பை ஏற்றது உச்ச நீதிமன்றம்

உத்தரப் பிரதேச மாநிலம், புலந்த்சஹரில் தாயும், மகளும் ஒரு கும்பலால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் அவர்களை அவமதிக்கும் வகையிலான கருத்து தெரிவித்த உத்தரப் பிரதேச அமைச்சர் ஆஸம் கான், நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. புலந்த்சஹர் அருகே நொய்டா நெடுஞ்சாலையில் கடந்த ஜூலை மாதம் 29-ஆம் தேதி காரில் சென்ற தாயையும், அவரது…

ரொக்கமாக எம்எல்ஏ ஊதியம்: ஒடிஸா பேரவையில் காங்கிரஸ் கோரிக்கை

எம்எல்ஏக்களின் ஊதியத்தை காசோலை மூலம் வழங்குவதற்குப் பதிலாக ரொக்கமாக தருமாறு பேரவைச் செயலருக்கு காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்திருக்கிறது. ஒடிஸா நிதி ஒதுக்கீட்டு மசோதா-2016 தொடர்பாக சட்டப் பேரவையில் வியாழக்கிழமை நடந்த விவாதத்தின்போது கரன்சி நோட்டு விவகாரத்தில் மத்திய அரசு எடுத்திருக்கும் நடவடிக்கை குறித்து கடுமையாக விமர்சித்துப் பேசினார் எதிர்க்கட்சித் தலைவர் நரசிங்க மிஸ்ரா. அப்போது மேற்கண்ட கோரிக்கையை…

ஊசுட்டேரியில் பறவைகள் எண்ணிக்கை குறைகிறது! கேள்விக் குறியாகும் சரணாலயம் அந்தஸ்து

பறவை சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊசுட்டேரியில், பறவைகளின் எண்ணிக்கை இந்தாண்டு குறைந்துள்ளது, இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.புதுச்சேரி மாநிலத்தின் மிகப் பெரிய நீர்பிடிப்பு பகுதியான ஊசுட்டேரி, தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளை உள்ளடக்கி உள்ளது. 850 ஹெக்டேரில் பரந்து விரிந்துள்ள இந்த ஏரி, புதுச்சேரி பகுதியில் 390 ஹெக்டேரில் அமைந்துள்ளது.ஏரியின் மொத்த நீர்ப்பிடிப்பு பகுதி 15.54 சதுர கிலோ…

திருப்பதி ஸ்ரீநிவாச பெருமாள் திருக்கல்யாண உற்சவம்

புதுச்சேரி: புதுச்சேரியில், திருப்பதி ஸ்ரீநிவாச பெருமாள் திருக்கல்யாண உற்சவம், வரும் 18ம் தேதி நடக்கிறது.திருமலை திருப்பதியில் இருந்து ராமானுஜர் சங்சார ரதம், 18ம் தேதி அதிகாலை புறப்பட்டு, மாலை 2:00 மணியளவில் புதுச்சேரி வருகிறது. எல்லப்பிள்ளைச்சாவடியில் உள்ள சாரதாம்பாள் கோவிலில் ரதத்திற்கு பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்படுகிறது.பின்னர் அங்கிருந்து ரதம் ஊர்வலமாக, இ.சி.ஆரில் உள்ள விவேகானந்தா பள்ளியை அடைகிறது.…

சுடுகாட்டிற்கு அடிப்படை வசதிகள் சேலியமேடு மக்கள் எதிர்பார்ப்பு

பாகூர்: சேலியமேடு சுடுகாட்டில் தகன மேடை, மின் விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஏம்பலம் தொகுதிக்குட்பட்ட சேலியமேடு கிராமத்தில் இறப்பவர்களின்உடல்களை, அப்பகுதியில் உள்ள சுடுகாட்டில், அடக்கம் மற்றும் தகனம் செய்து வருகின்றனர்.இங்கு, 20 ஆண்டுகளுக்கு முன், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், தகன மேடை அமைக்கப்பட்டது. இந்த தகன…

புதுச்சேரி பல்கலை விடுதி மாணவர்களுக்கு 18ம் தேதிக்குள் உணவு கட்டணம் செலுத்த அறிவுரை

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழக விடுதி மாணவர்கள், ஜனவரி 18ம் தேதிக்குள், உணவு கட்டணத்தை செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கான மெஸ் கட்டணம் வெளியிடப்பட்டுள்ளது.முதுநிலை படிப்பு மாணவர்கள் ஜனவரி 17ம் தேதி முதல் மே 9ம் தேதி வரையிலான காலகட்டத்திற்கு, உணவு கட்டணமாக தினசரி நாள் ஒன்றிற்கு 60 ரூபாய் என கணக்கிட்டு 113…

பாட்கோ சார்பில் ஹைமாஸ் விளக்கு அமைச்சர் கந்தசாமி இயக்கி வைத்தார்

பாகூர்: கிருமாம்பாக்கத்தில் 20 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட ஹைமாஸ் விளக்குகளை, அமைச்சர் கந்தசாமி இயக்கி வைத்தார்.ஏம்பலம் தொகுதிக்குட்பட்ட கிருமாம்பாக்கத்தில், பாட்கோ சார்பில் 20 லட்ச ரூபாய் செலவில், சோலை வாழியம்மன் கோவில், தெப்பக்குளம், அம்பேத்கர் நகர், ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதி உள்ளிட்ட 5 இடங்களில் ஹைமாஸ் விளக்குகள் அமைக்கப்பட்டது. அமைச்சர் கந்தசாமி, பூஜை செய்து ஹைமாஸ் விளக்குகளை…

கப்பல் மெக்கானிக் கொலை வழக்கு: முக்கிய குற்றவாளி வாக்குமூலம்

பாகூர்: கப்பல் மெக்கானிக் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியை, காவலில் எடுத்த போலீசார், அவரின் வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.கடலுார் முதுநகர் மோகன் நகரை சேர்ந்தவர் ராம்பிரசாத், 26; சிங்கப்பூரில் கப்பல் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். கடந்த சிலமாதங்களுக்கு முன்பு, ராம்பிரசாத் சொந்த ஊருக்கு திரும்பினார். இவர் கடந்த 24ம் தேதி, புதுச்சேரி எல்லை பகுதி முள்ளோடையில் உள்ள…

தெப்பக்குளத்தில் சுற்றுச்சுவர் சரிந்து விழுந்தது பிள்ளைச்சாவடி பகுதி வீடுகளுக்கு அச்சுறுத்தல்

புதுச்சேரி: பிள்ளைச்சாவடி தெப்பக்குளத்தில் சுற்றுச்சுவர் சரிந்து விழுந்து, வீடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.புதுச்சேரியை அடுத்த பிள்ளைச்சாவடியில், உள்ள பழமையான திரவுபதியம்மன் கோவில் வளாகத்தில் ராஜகோபுரம் புதுப்பிப்பு பணிகள் முடிந்துள்ளன. கோவில் தெப்பக்குளத்தை புதுப்பித்து, நான்குபுறம் கரைகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.மழைக்காலங்களில் பிள்ளைச்சாவடி மேற்பகுதி ஓடைகளில் பெருக்கெடுக்கும் வெள்ளம், தெப்பக் குளத்தில் சேர்ந்து அப்பகுதி நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தி வருகிறது.கடந்த சில ஆண்டுகளாக…