பாஜகவில் மாற்றங்கள் – இளைஞரணித் தலைவராக பூனம் மகாஜன் நியமனம்

பாஜக இளைஞரணித் தலைவராக பூனம் மகாஜன் (வயது 36), நியமிக்கப்பட்டார். அப்பதவியில் 6 ஆண்டுகளுக்கு மேல் இருந்த அனுராக் தாக்குர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். பாஜகவின் தாழ்த்தப்பட்டோர் (எஸ்.சி.) பிரிவு, மலைவாழ் மக்கள் (எஸ்.டி.) பிரிவு, இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) பிரிவு, விவசாயிகள் அணிக்கும் புதிய தலைவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். பாஜக தேசியத் தலைவராக அமித் ஷா, இரண்டாவது முறையாகத்…

3 வாரங்களுக்குள் நாட்டில் பணத் தட்டுப்பாடு நீங்கும் : சக்திகாந்த தாஸ்

புதிய ரூ.500 நோட்டுகளை அச்சிடும் நடவடிக்கைகளில் தற்போது தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருவதாக மத்திய பொருளாதார விவகாரங்கள் துறைச் செயலர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். இன்னும் 2 அல்லது 3 வாரங்களுக்குள் நாட்டில் பணத் தட்டுப்பாடு நீங்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்ததைத் தொடர்ந்து நாட்டில்…

போயஸ் கார்டனில் போலீஸ் குவிப்பு

அதிமுகவின் பொதுச்செயலாளர் தேர்வு குறித்து சசிகலாவுடன் ஆலோசனை நடைபெற உள்ளது. இதற்காக மக்களவை துணைத்தலைவர் தம்பிதுரை, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முதலானோர் போயஸ் கார்டனுக்கு வந்துள்ளனர். இதை முன்னிட்டு போயஸ்கார்டனில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. TickTickNews

செல்போன் டவர்களுக்கு சொத்துவரி விதிக்க உச்சநீதிமன்றம் அனுமதி

புதுடெல்லி: செல்போன் டவர்களுக்கு சொத்துவரி விதிக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. செல்போன் டவர் அமைக்க வாடகை விட்டவர்களிடம் இருந்து சொத்துவரி வசூலிக்க அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. TickTickNews

ஆக்ஸிஸ் வங்கியின் 24 ஊழியர்கள் இடைநீக்கம்; 50 கணக்குகள் முடக்கம்

மும்பை: உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகு சந்தேகத்துக்கிடமான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக இதுவரை 24 ஊழியர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று ஆக்ஸிஸ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும், இதுவரை 50 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக, ஆக்ஸிஸ் வங்கியின் தலைவர் ராஜீவ் ஆனந்த், மும்பையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆக்ஸிஸ் வங்கியின் தில்லியில் உள்ள 5 கிளைகள்…

பிரதமர் மோடியை சந்தித்தார் ராகுல்: என்ன பேசியிருப்பார்கள்?

புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடியை, காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று காலை சந்தித்துப் பேசினார். நாடாளுமன்றத்துக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியை, நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் சந்தித்துப் பேசினார். ரூபாய் நோட்டு மதிப்பு இழப்பு விவகாரம் குறித்து இரு தலைவர்களும் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, பிரதமரின் தனிப்பட்ட ஊழல் பற்றி தனக்குத்…

அரசியலுக்கு வருவேன், அத்தையின் இடத்தை நிரப்புவேன்: ஜெ. அண்ணன் மகள் தீபா

1991ம் ஆண்டில் இருந்து 1995ம் ஆண்டு வரை நீங்கள் போயஸ் கார்டனுக்கு அடிக்கடி சென்று வந்தீர்கள். வாரத்திற்கு இரண்டு முறை கூட சென்றீர்கள் என்று நிகழ்ச்சி தொகுப்பாளர் பாண்டே கூறியதற்கு ஆமாம் ரொம்ப அதிகமாச்சு, அப்படி தான் இருந்துச்சு என்றார் தீபா. 1995ம் ஆண்டு உங்களுக்கும் போயஸ் கார்டனுக்குமான உறவு இன்னொரு விரிசலை பெரிதாக சந்தித்தது என்று சொல்லலாமா,…

பிஆர்பி உள்ளிட்ட 4 நிறுவனங்கள் மீது 3,180 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

கிரானைட் முறைகேடு வழக்கில் பிஆர்பி உள்ளிட்ட மூன்று நிறுவனங்கள் மீது 3,180 பக்கங்கள் கொண்ட 4 குற்றப்பத்திரிகையை காவல்துறையினர், மேலூர் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தனர். கிரானைட் முறைகேட்டில் தமிழக அரசுக்கு ரூ.84 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக பிஆர்பி உள்ளிட்ட மூன்று நிறுவனங்கள் மீது காவல்துறையினர் மூன்று வழக்குகள் பதிவு செய்தனர். இந்த வழக்கு மேலூர் நீதிமன்றத்தில் நடந்து…

கருணாநிதி விரைவில் குணமடைய பொன்னார், முத்தரசன் வாழ்த்து

சென்னை, சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் திமுக தலைவர் கருணாநிதி குணமடைய மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் வாழ்த்துதெரிவித்துள்ளார். அதுபோல் கம்யூனிஸ்டு தலைவர் முத்தரசனும் வாழ்த்து தெரிவித்து உள்ளார். தொண்டை மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக திமுக தலைவர் கருணாநிதி நேற்று நள்ளிரவு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவர்…

மது இல்லாத தமிழகம் தான் பா.ம.க.வின் நோக்கம்: ராமதாஸ்

சென்னை: இந்தியா முழுவதும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளையும், பார்களையும் மார்ச் 31-ந் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்திருக்கிறது. இதுகுறித்து, பா.ம.க. ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்தியா முழுவதும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளையும், குடிப்பகங்களையும் வரும் மார்ச் 31-ந் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.…