திமுகவுக்கும் தினகரனுக்கும் தான் போட்டி: கருணாஸ்

தமிழகத்தில் 20 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் எந்த நேரத்திலும் இடைத்தேர்தல் குறித்த அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் வரும் பாராளுமன்ற தேர்தலுடன் தான் இந்த 20 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறும் என்றும் ஒரு சாரார் கூறுகின்றனர்.இருப்பினும் இந்த 20 தொகுதிகளில் ஒருசில தொகுதிகளில் இப்போதே தேர்தல் வேலைகளை ஒருசில அரசியல் கட்சிகள் ஆரம்பித்துவிட்டன.…

ஆறுமுகசாமி ஆணையம் தமிழக அரசுக்கு எழுதிய முக்கிய கடிதம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை கண்டுபிடிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் ஒன்றை தமிழக அரசு கடந்த ஆண்டு அமைத்தது. இந்த ஆணையம் தற்போது ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது. விரைவில் இதுகுறித்த அறிக்கையை அரசுக்கு இந்த ஆணையம் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிலையில் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணைக்கு…

மு.க.ஸ்டாலினுடன் சீதாராம் யெச்சூரி சந்திப்பு – உறுதியாகும் கூட்டணி

திமுக தலைவர் ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி சந்தித்து பேசினார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலின் இல்லத்தில் ஸ்டாலின் மற்றும் யெச்சூரி சந்திப்பு நடைபெற்றது. சந்திப்பு குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சீதாராம் யெச்சூரி, இந்தியா பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவே ஸ்டாலினை சந்தித்ததாக தெரிவித்தார். இந்தியா பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக ஒன்றிணைய தேசப்பற்றுள்ள, மதச்சார்பற்ற அரசியல்…

ஃபாலோ ஆன் ஆனது ஜிம்பாவே: வங்கதேசத்திற்கு இன்னிங்ஸ் வெற்றியா?

ஜிம்பாவே மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி டாக்கா நகரில் கடந்த 11ஆம் தேதியில் இருந்து நடந்து வருகிறது.இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 522 ரன்கள் குவித்தது. முசாபிக் ரஹிம் இரட்டைச்சதமும், மொமினுல் ஹக் சதமும் அடித்தனர்.இந்த நிலையில் முதல் இன்னிங்ஸை விளையாடிய ஜிம்பாவே அணி இன்றைய…

இலங்கை நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு சபாநாயகர் அழைப்பு

இலங்கை நாடாளுமன்றத்தை நாளை புதன்கிழமை 14.11.2018 காலை 10 மணிக்கு கூட்டுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2018.11.04 அன்று வெளியிட்ட 2095/50 இலக்க வர்த்தமான அறிவித்தலுக்கமைய நாடாளுமன்றத்தைக் கூட்டுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். இதற்கமைய அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சபை அமர்வுகளில் கலந்துகொள்ளுமாறு சபாநாயகர் கோரியுள்ளார். சபாநாயகரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள…

சென்னையில் கந்துவட்டி கேட்டு மிரட்டியவர் கைது

சென்னையில் கந்து வட்டி கேட்டு மிரட்டியவரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை, நங்கநல்லூர் பாலாஜி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவர் காவல் ஆணையாளரிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில் ரஜினி என்கின்ற அன்புச்செல்வன் கந்துவட்டி கேட்டு மிரட்டுவதாக குறிப்பிட்டிருந்தார். அதில் தன் பணத்தேவையின் பொருட்டு ஆவடியை சேர்ந்த ரஜினி என்ற அன்புச்செல்வன் என்பவரிடம் ரூபாய் 5 லட்சம் ரூபாயை…

சபரிமலைக்கு பெண்களை அழைத்து வரமாட்டோம்: குருசாமிகள் உறுதி

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. இருப்பினும் இந்த தீர்ப்பை பெரும்பாலான ஐயப்ப பக்தர்களும், தேவஸ்தானமும் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவேதான் கடந்த மாதம் சபரிமலையில் நடை திறக்கப்பட்டபோது ஒரு பெண் கூட சன்னிதானத்திற்குள் நுழைய முடியவில்லைஇந்த நிலையில் வரும் 17ஆம் தேதி மீண்டும் சபரிமலையில் நடைதிறக்கப்படவுள்ளது.…

மத்திய அமைச்சர் அனந்த் குமாரின் பொறுப்புகள் சதானந்த கவுடா, நரேந்திரசிங் தோமருக்கு மாற்றம்!

மறைந்த மத்திய அமைச்சர் அனந்த குமாரின் பொறுப்புகள் மாற்றம் செய்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அனந்த குமாரின் பொறுப்புகள் நரேந்திரசிங் தோமர் மற்றும் சதானந்த கவுடாவிற்கு பிரித்து கூடுதல் பொறுப்பாக அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் அனந்த் குமார்(59) புற்றுநோய் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை காலமானார். இவரது மறைவிற்கு குடியரசுத் தலைவர்…

ரஜினியும் ,விஜய்யும் கோமாளி; கமல் அரைவேக்காடு -சரமாரியாக விளாசிய எழுத்தாளர்!

சமீபகாலமாக நடிகர்களின் அரசியல் பிரவேசம் அதிகரித்து வரும் நிலையில் அது குறித்து அறிவுஜீவிகளும் எழுத்தாளர்களும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். ரஜினியின் அரசியல் வருகை கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. கமல் ஒருபடி முன்னால் போய் கட்சி ஆரம்பித்து மக்களைச் சந்தித்து வருகிறார். இடைத் தேர்தலில் பங்கேற்போம் எனவும் அறிவித்துள்ளார். சமீபத்திய சர்கார் படம் மூலம் விஜய்யும் தனது அரசியல் வருகைக்கு…

திட்டமிடப்பட்ட சதி! வேடிக்கை பார்ப்பதற்கு அன்புமணி கண்டனம்! உடனே நிறுத்துங்கள்!

பாலாற்றின் குறுக்கே புதிதாக 21 தடுப்பணைகளைக் கட்ட ஆந்திர அரசு முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. வட மாவட்டங்களில் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளை கடுமையாக பாதிக்கக்கூடிய ஆந்திர அரசின் இந்த அத்துமீறலை தடுத்து நிறுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தமிழக அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது என பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி…