தெலுங்கானாவில் பா.ஜ.க வெற்றி பெறும் பட்சத்தில்,ஹைதராபாத் நகரின் பெயர் ‘பாக்யநகர்’ என பெயர் மாற்றம் செய்யப்படும் என்று பா.ஜ.கஎம்.எல்.ஏ ராஜா சிங் தெரிவித்துள்ளார்.

தெலங்கானாவில் வருகிற டிசம்பர் 7ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதையொட்டி, தேர்தல் பிரச்சாரங்கள் அங்கு தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜா சிங் பேசுகையில், “15ம் நூற்றாண்டில்அலி குதுப் ஷா, பாக்யநகர் என்ற பெயரை ஹைதராபாத் என மாற்றினார். வருகிற சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ.கஆட்சிக்கு வந்தால் ஹைதராபாத் மீண்டும் பாக்யநகர் என பெயர் மாற்றம் செய்யப்படும். இதே போன்று செகந்திராபாத் மற்றும் கரீம்நகர் ஆகியவற்றின் பெயர்களும் மாற்றப்படும்” என்று கூறினார்.

முன்னதாக,உ.பியின் அலகாபாத் நகரம் ‘பிரக்யராஜ்’ என்று மாற்றப்பட்டுள்ளது. அதேபோன்றுஉ.பியின் ஃபைசாபாத் நகரம் ‘அயோத்யா’ என்றும், குஜராத்தின் அகமதாபாத் நகரம் ‘கர்ணாவதி’ என்றும் மாற்றப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Leave a Reply