“தலிபான் தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை” – இந்தியா பங்கேற்க முடிவு

ஆப்கானிஸ்தானில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்வது தொடர்பாக தலிபான் தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தையில் இந்தியா அதிகாரப்பூர்வமற்ற முறையில் பங்கேற்க சம்மதம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பிறகு மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. எனினும் அந்நாட்டின் குறிப்பிட்ட சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தலிபான் தீவிரவாதிகள் அவ்வப்போது தாக்குதல்கள் நடந்தி வருகின்றனர். இதனால் மறுசீரமைப்பு முயற்சிக்கு பின்னடைவு ஏற்பட்டு வருகிறது.

இதனால் தலிபான் தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டத்தை ரஷ்யா முன் வைத்தது. ஆனால் அமெரிக்க உள்ளிட்ட சில நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இதனால் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க இந்தியா தயக்கம் காட்டியது. ஆப்கானிஸ்தான் அரசும் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டவில்லை.

எனினும், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கடந்த செப்டம்பர் மாதம் 4-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் பல நாடுகளும் தயக்கம் காட்டியதால் இது ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், மாஸ்கோவில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதில் தலிபான் அமைப்பினரும் கலந்து கொள்கின்றனர். இதில் பங்கேற்க ஆப்கானிஸ்தான், இந்தியா, ஈரான், சீனா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது.

இந்த பேச்சுவார்த்தை குறித்து இந்திய வெளியுறவு துறை தெரிவித்து தகவலில் ” பேச்சுவார்த்தையில் இந்தியா அதிகாரப்பூர்வமில்லாத முறையில் கலந்து கொள்ளும். ஆப்கானிஸ்தானில் அமைதி மற்றும் சீரமைப்பு மேற்கொள்ள எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளையும் இந்தியா ஆதரிக்கிறது ” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய அதிபர் புதின் சமீபத்தில் இந்தியா வந்தபோது, இந்த பேச்சுவார்த்தை குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. அப்போது, ஆப்கானிஸ்தானில் ரஷ்யா மேற்கொள்ளும் அமைதி முயற்சிக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக இந்தியா தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் இந்தியா சார்பில், முன்னாள் வெளியுறவுத்துறை அதிகாரிகளான அமர் சின்ஹா மற்றும் ராகவன் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். இந்தியாவின் இத்தகைய அறிவிப்புக்கு ரஷ்யா வரவேற்பு தெரிவித்துள்ளது.

Share

Recent Posts

ஜப்பானில் மக்கள் கூட்டத்துக்குள் கார் புகுந்ததில் 2 வயது குழந்தையுடன் இளம் பெண் பலி

டோக்கியோ :ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள இகேபுகுரோ மாவட்டத்தில் சுரங்கப்பாதை ரெயில் நிலையம் ஒன்று உள்ளது. இந்த ரெயில் நிலையம் அமைந்துள்ள சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும்.இந்த…

9 hours ago

இந்தியாவில் மின் உற்பத்திக்காக 12 புதிய அணுஉலைகள் நிறுவ திட்டம்- வெளியான தகவல்

மாஸ்கோ:ரஷியாவில் உள்ள கோச்சி என்ற நகரில் அண்மையில் 11-வது சர்வதேச அணுசக்தித்துறை கண்காட்சி நடைபெற்றது. 'ரொசாட்டம்' என்ற அமைப்பின் ஆதரவுடன் நடந்த இந்த கண்காட்சியில் 74 நாடுகளை…

9 hours ago

அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற இந்தியர்கள் 2 பேர் கைது

நியூயார்க்:அமெரிக்காவிற்குள் ஆட்கடத்தல் கும்பல் மூலம் சட்டவிரோதமாக ஊடுருவ முயன்று, பாலைவனப் பகுதியில் வழிதெரியாமல் சிக்கித் தவிக்கும் அகதிகளை மீட்பதற்காக மெக்சிகோ எல்லைப்பகுதியில் சூரிய மின்சக்தி மூலம் இயங்கும்…

9 hours ago

12 குழந்தைகளை வீட்டில் அடைத்து கொடுமைபடுத்திய தம்பதிக்கு ஆயுள்தண்டனை

கலிபோர்னியா:அமெரிக்கவின் கலிபோர்னியாவை சேர்ந்தவர் டேவிட் ஆலன் டர்பின் (வயது57). இவரது மனைவி லூயிஸ் அன்னா டர்பின் (50). இவர்களுக்கு 12 குழந்தைகள் உள்ளனர். குழந்தைகள் பிறந்ததில் இருந்து…

9 hours ago

எகிப்து அதிபரின் பதவிக்காலம் ஆறாண்டுகளாக நீட்டிப்பு

கெய்ரோ:எகிப்து நாட்டின் அதிபராக அப்டெல் பட்டா சிசி பதவி வகித்து வருகிறார். தற்போதைய நிலவரப்படி அதிபரின் பதவிக்காலம் நான்காண்டுகளாக உள்ள நிலையில், மேலும் இரண்டாண்டுகள் அதிகரித்து அதிபரின்…

9 hours ago

கனடாவில் பனிச்சரிவில் சிக்கி வீரர்கள் 3 பேர் பலி

ஒட்டாவா:கனடாவின் அல்பெர்டா மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணங்களுக்கு இடையே ஹவ்ஸ் பீக் என்கிற மலை உள்ளது. இது அந்நாட்டின் மிக உயரமான மலைகளில் ஒன்றாகும். இந்த நிலையில்,…

9 hours ago