புதுச்சேரி மாநிலம் முத்தரையர்பாளையம் காந்தி திருநலூரில் உள்ள பம்புகவுல் தெருவை சார்ந்தவர் ஜெயகோபால் (42). இவர் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் வள்ளி. இவர்களுக்கு ஒரு மகளும்., மணிபாலா என்ற 18 வயது மகனும் உள்ளனர்.

வள்ளி தினக்கூலியாக பணியாற்றி வரும் நிலையில்., மணிபாலா 8 ம் வகுப்பு பயின்று முடித்து விட்டு கட்டிட பணிக்கு கூலித்தொழிலியாக சென்று வருகிறார். தீபாவளி பண்டிகையை ஒட்டி மணிபாலா பணிக்கு செல்லாததால்., மணிபாலாவின் தாய் தீபாவளி நெருங்குவதால் வேலைக்கு சென்றால் தான் பண்டிகையை கொண்டாட முடியும்.

நானும் உனது தந்தையும் பணிக்கு செல்லும் போது நீ எதற்கு வீட்டில் இருக்கிறாய்?
என்று கேட்டுள்ளார். இதன் காரணமாக இவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவதாம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக கடும் மனஉளைச்சலில் இருந்த மணிபாலா விரக்தியில் எலி மருந்தை உட்கொண்டுள்ளார். மருந்தின் வீரியம் தாங்காமல் எலி மருந்து உட்கொண்டதை தாயிடம் கூறி மயக்கமடைந்தார்.

இதனை கேட்டு பதறிப்போன வள்ளி கதறவே., அக்கம்பக்கத்தினர் சம்பவம் குறித்து கேட்டறிந்து உடனடியாக அவசர ஊர்திக்கு அழைப்பு விடுத்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்க்கு விரைந்த அவசர ஊர்தியின் மூலம் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மருத்துவமனையில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில்., நேற்று பரிதாபமாக மணிபாலா உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply