ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத்தின் மகன் தேஜ்பிரதாப் யாதவுக்கும், பீகார் எம்எல்ஏ சந்திரிகா ராயின் மகள் ஐஸ்வர்யா ராய்க்கும் கடந்த மே மாதம் பாட்னாவில் அமைந்துள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் திருமணம் முடிந்து 6 மாதங்கள் ஆகாத நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவகாரத்து கோரி லாலுவின் மகன் தேஜ்பிரதாப் யாதவ் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஆனால் அவரின் முடிவுக்கு தாய் ராப்ரி தேவி உட்பட குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வீட்டை விட்டு வெளியேறிய அவர் எங்கு இருக்கிறார் என்ற விவரத்தையும் வெளியிடவில்லை.

இந்நிலையில், ஹரித்துவாரில் ஒரு ஆசிரமத்தில் தான் தங்கி இருப்பதாக தேஜ்பிரதாப் தகவல் வெளியிட்டுள்ளார் .மேலும் எங்களுடைய பிரச்சனையை சரி செய்ய முடியாது. என்னுடைய திருமணம் நடைபெறுவதற்கு முன்னதாகவே இதுகுறித்து என்னுடைய பெற்றோர்களிடம் வலியுறுத்தினேன்.

ஆனால் என்னுடைய பேச்சை அவர்கள் கேட்கவில்லை. எனவே தனக்கு விவாகரத்து பெற்றுத்தர குடும்பத்தினர் ஒப்புக் கொள்ளும் வரை வீடு திரும்ப வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார்.

Leave a Reply