கருப்புப்பணத்தை வெள்ளைப்பணமாக மாற்றுவதற்கான ஊழல் தான் பணமதிப்பிழப்பு நடவடிக்கை: ராகுல் கடும் விமர்சனம்!

மத்திய பா.ஜ.க அரசால் எடுக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை, கருப்புப்பணத்தை வெள்ளைப்பணமாக மாற்றுவதற்கான ஊழல்என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் விமர்சனம் செய்துள்ளார்.

90 சட்டமன்ற தொகுதிகளை சத்தீஸ்கர் மாநிலத்தில் நவம்பர் 12, 20 ஆகிய தேதிகளில் இரண்டுகட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் முடிவடைய உள்ளதால் அங்கு இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது.

காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். இன்று காலை 11 மணியளவில் ராய்ப்பூருக்கு வந்த அவர், அம்மாநில மூத்த காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து பேசினார். பின்னர் கங்கர் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார்.
தொடர்ந்து வீதியில் சென்று வாக்கு சேகரிக்கிறார்.

அப்போது அவர் பேசுகையில், “மத்திய பாஜக அரசால் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது எதற்காக தெரியுமா? கருப்புப்பணத்தை வெள்ளைப்பணமாக மாற்றுவதற்கான ஊழல்.

நீங்கள் பணமதிப்பிழப்பின் போது நீண்ட வரிசையில் ஏ.டி.எம் வாசலில் காத்திருந்தீர்கள், அப்போது எதாவது ஒரு கருப்பு பணம் வைத்திருந்தவர்களை பார்த்தீர்களா?, ஆனால் அந்த சமயத்தில் தான்நிரவ்மோடி, விஜய் மல்லையா, லலித் மோடி உள்ளிட்டோர் உங்களின் பணத்தை எடுத்துகொண்டு வெளிநாடு சென்றுவிட்டனர்” என்று காரசாரமாக பேசியுள்ளார்.

newstm.in

Share

Recent Posts

தேதி, நேரம் குறித்த ஆஸ்தான ஜோதிடர்… நாளை காலை திமுகவில் இணைகிறார் செந்தில் பாலாஜி!

கடந்த சில நாட்களாக உலாவிவந்த செய்தி கிட்டத்தட்ட கிளைமேக்ஸை நெருங்கிக்கொண்டிருக்கிறது. ஆமாம், நாளை காலை, அதாவது 13ஆம் தேதி காலை 10.45 மணிக்கு திமுக தலைமைக்கு கழகம்…

2 hours ago

இந்தாளு நம்மளை நிம்மதியா வாழவிட்டமாட்டார்…! ரஜினி வெளிப்படையாக இப்படி புலம்பித் தீர்த்தது யாரால்?

எல்லாமே வேஷம், அனைத்தும் மேக் - அப் என்று நிரம்பி வழியும் சினிமா உலகில், இமேஜைப் பற்றிக் கவலைப்படாமல் திறந்த புத்தகமாக திரிபவர் ரஜினிகாந்த்தான். இதோ சில…

2 hours ago

ரகசியமாக 2 கோடி கொடுத்த நடிகர்! துணிச்சலாக ஒப்புக்கொண்ட நடிகை!

'குளிர்ச்சி' யான கதாநாயகி தற்போது ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வசித்து வருகிறார். இப்போதுதான் இவருடைய மார்க்கெட் மெல்ல மெல்ல களைகட்டி வருகிறது. அவருக்கு நிறைய பட…

2 hours ago

ம.பி.,யில் ஆட்சி அமைக்க காங்கிரஸுக்கு அகிலேஷ் ஆதரவு

மத்தியப் பிரதேசத்தில் ஆட்சி அமைக்க காங்கிரஸுக்கு ஆதரவுக் கரம் நீட்டத் தயாராக இருப்பதாக சமாஜ்வாடி கட்சியின் தலைவரும் உ.பி. முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்திருக்கிறார்.மத்தியப் பிரதே…

2 hours ago

ராகுல் காந்தி பாஸாகிவிட்டார்; மூத்த தலைவர் புகழாரம்

5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில் காங்கிரஸ் கட்சி 3 மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றியது. இதனையடுத்து பல்வேறு தலைவர்களும் பிரபலங்களும் இந்த தேர்தல்…

2 hours ago

தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளரை ட்விட்டரில் அடிச்சிதூக்கிய தல ரசிகர்கள்

தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயினின் ட்விட்டர் பக்கத்தில் அஜித் ரசிகர்கள் விஸ்வாசம் போஸ்டரை பதிவிட்டு திணறடித்துள்ளனர்.சினிமாவின் ஆரம்ப கட்டத்தில் இருந்தே நடிகர்கள் நடிகைகள் மத்தியில்…

2 hours ago