10 நாட்களில் விவசாய கடன்கள் தள்ளுபடி – ராகுல் அதிரடி வாக்குறுதி

சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. முதல் கட்டமாக, நவம்பர் 12-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. ஆட்சியில் உள்ள பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் கான்கெர் பகுதியில் பகன்ஜோர் நகரில் உள்ள பண்டிட் சியாம பிரசாத் முகர்ஜி மைதானத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது:

“மோடி அரசு பணக்காரர்களுக்காக மட்டுமே வேலை செய்கிறது. தொழிலதிபர்களின் சம்மதம் பெறாமல் மோடி எதையும் செய்வதில்லை.

பண மதிப்பிழப்பின் போது நீங்கள் அனைவரும் நீண்ட வரிசையில் காத்திருந்தீர்கள். ஆனால் கருப்பு பணம் வைத்துள்ள யாரும் வரிசையில் நிற்கவில்லை. அதே சமயம் நீரவ்மோடி , விஜய் மல்லையா, லலித் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் உங்கள் பணத்தை எடுத்துக் கொண்டு நாட்டை விட்டு ஓடி விட்டனர்.

சத்தீஸ்கரில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால், 10 நாட்களில் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.” இவ்வாறு அவர் பேசினார்

Share

Recent Posts

7-ம் கட்ட மக்களவைத் தேர்தல்; 1 மணிநிலவரம்: 38% வாக்குகள் பதிவு

7-ம் கட்டத் தேர்தல் நடைபெறும் 59 தொகுதிகளிலும் மதியம் 1 மணி நிலவரப்படி 39.85 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19…

3 hours ago

7-ம் கட்ட மக்களவைத் தேர்தல் : பிற்பகல் 1 மணி வரையிலான வாக்குப்பதிவு நிலவரம்

8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பகல் ஒரு மணி நிலவரப்படி மாநிலவாரியாக பதிவான வாக்கு சதவீதம் தொடர்பான தகவல் தற்போது…

3 hours ago

தேர்தல சவ்வா இழுக்கறத தவிர்க்கலாம்: நிதிஷ் குமார்!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இன்று கடைசிக் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கிய மக்களவை தேர்தல், 6 கட்டங்களை…

3 hours ago

கேதாரத்தைத் தொடர்ந்து பத்ரிநாத் கோயிலில் மோடி வழிபாடு!

உத்தரகாண்ட் மாநிலம், கேதார்நாத்தை தொடர்ந்து பத்ரிநாத் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு மேகொண்டார்.நாடு முழுவதும் இன்று மக்களவைக்கான இறுதிக் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. நேற்று…

3 hours ago

கத்திமுனையில் 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை; டிவி நடிகர் கைது..!

2 இளம் பெண்களை கத்திமுனையில் பலாத்காரம் செய்த டிவி நடிகர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனா்.உலகில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்த வண்ணம் உள்ளது.…

3 hours ago

Exit Poll Results 2019: எக்ஸிட் போல் முடிவுகள் எங்கு? எப்போது?

மக்களவைத் தேர்தல் எக்ஸிட் போல் முடிவுகளை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழில் லைவ்வாக காணலாம். முன்னணி தொலைக்காட்சிகள் அனைத்தும் இதையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருக்கின்றன.2019-ம் ஆண்டுக்கான மக்களவைத்…

3 hours ago