இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு.. சிறிசேனா திடீர் முடிவு

கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைக்கும் உத்தரவில் அதிபர் சிறிசேனா கையெழுத்திட்டுள்ளதாக அமைச்சரவை இணை செய்தித் தொடர்பாளர் கெகலிய ரம்புகெவல்ல தெரிவித்துள்ளார்.

அவரால் பிரதமராக நியமிக்கப்பட்ட ராஜபக்சேவால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலை நிலவுவதாலும், நாடாளுமன்ற சபாநாயகர் தனக்கு சாதகமாக இல்லாத காரணத்தாலும், ராஜபக்சேவுக்கு சாதகமான நிலை சுத்தமாக இல்லாமல் போனதாலும், இந்த முடிவுக்கு சிறிசேனா வந்துள்ளார்.

சிறிசேனாவின் இந்த முடிவால் இலங்கை அரசியல் மேலும் சிக்கலாகும், குழப்பமாகும் என்று கருதப்படுகிறது. இதுகுறித்து டெய்லி மிர்ரர் வெளியிட்டுள்ள செய்தியில், நாடாளுமன்றத்தைக் கலைத்து உத்தரவிடும் பிரகடனத்தில் அதிபர் கையெழுத்திட்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் கலைப்பு உத்தரவு அமலுக்கு வரும் என்று அமைச்சவரை இணைச் செய்தித் தொடர்பாளரும், அமைச்சருமான ரம்புகெவெல்ல தெரிவித்ததாக கூறியுள்ளது.

இந்த முடிவு காரணமாக இலங்கை நாடாளுமன்றத்திற்கு ஜனவரி – பிப்ரவரியில் தேர்தல் நடைபெறும் வாய்ப்புள்ளது.

கடந்த இரு வாரமாகவே இலங்கை அரசியல் பெரும் குழப்பத்தை சந்தித்து வந்தது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவுடன் சிறிசேனாவுக்கு ஏற்பட்ட கடும் மோதலால் ரணிலை டிஸ்மிஸ் செய்தார் சிறிசேனா. அவருக்குப் பதில் யாரும் எதிர்பாராத வகையில் ராஜபக்சேவை பிரதமராக நியமித்து அதிர வைத்தார். அதன் பின்னர் நிலைமை மேலும் சிக்கலானது.

ராஜபக்சேவுக்கு தேவையான பெரும்பான்மை கிடையாது. இதனால் குதிரை பேரம் தொடங்கியது. ஆனால் அப்படியும் கூட ராஜபக்சேவால் தேவையான பெரும்பான்மை பலத்தை திரட்ட முடியாமல் போனது. இதையடுத்தே நாடாளுமன்றத்தைக் கலைக்கும் முடிவுக்கு சிறிசேனா வந்துள்ளார் என்று கூறப்படுகிறது.

source: oneindia.com

Share
Tags: oneindia

Recent Posts

தேதி, நேரம் குறித்த ஆஸ்தான ஜோதிடர்… நாளை காலை திமுகவில் இணைகிறார் செந்தில் பாலாஜி!

கடந்த சில நாட்களாக உலாவிவந்த செய்தி கிட்டத்தட்ட கிளைமேக்ஸை நெருங்கிக்கொண்டிருக்கிறது. ஆமாம், நாளை காலை, அதாவது 13ஆம் தேதி காலை 10.45 மணிக்கு திமுக தலைமைக்கு கழகம்…

58 mins ago

இந்தாளு நம்மளை நிம்மதியா வாழவிட்டமாட்டார்…! ரஜினி வெளிப்படையாக இப்படி புலம்பித் தீர்த்தது யாரால்?

எல்லாமே வேஷம், அனைத்தும் மேக் - அப் என்று நிரம்பி வழியும் சினிமா உலகில், இமேஜைப் பற்றிக் கவலைப்படாமல் திறந்த புத்தகமாக திரிபவர் ரஜினிகாந்த்தான். இதோ சில…

58 mins ago

ரகசியமாக 2 கோடி கொடுத்த நடிகர்! துணிச்சலாக ஒப்புக்கொண்ட நடிகை!

'குளிர்ச்சி' யான கதாநாயகி தற்போது ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வசித்து வருகிறார். இப்போதுதான் இவருடைய மார்க்கெட் மெல்ல மெல்ல களைகட்டி வருகிறது. அவருக்கு நிறைய பட…

58 mins ago

ம.பி.,யில் ஆட்சி அமைக்க காங்கிரஸுக்கு அகிலேஷ் ஆதரவு

மத்தியப் பிரதேசத்தில் ஆட்சி அமைக்க காங்கிரஸுக்கு ஆதரவுக் கரம் நீட்டத் தயாராக இருப்பதாக சமாஜ்வாடி கட்சியின் தலைவரும் உ.பி. முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்திருக்கிறார்.மத்தியப் பிரதே…

58 mins ago

ராகுல் காந்தி பாஸாகிவிட்டார்; மூத்த தலைவர் புகழாரம்

5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில் காங்கிரஸ் கட்சி 3 மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றியது. இதனையடுத்து பல்வேறு தலைவர்களும் பிரபலங்களும் இந்த தேர்தல்…

58 mins ago

தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளரை ட்விட்டரில் அடிச்சிதூக்கிய தல ரசிகர்கள்

தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயினின் ட்விட்டர் பக்கத்தில் அஜித் ரசிகர்கள் விஸ்வாசம் போஸ்டரை பதிவிட்டு திணறடித்துள்ளனர்.சினிமாவின் ஆரம்ப கட்டத்தில் இருந்தே நடிகர்கள் நடிகைகள் மத்தியில்…

58 mins ago