புதுடெல்லி:

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சீனா-இந்தியா எல்லைக்கோட்டுப் பகுதியான ஹர்சில் என்ற இடத்துக்கு இன்று காலை சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கு தாய்நாட்டை பாதுகாக்கும் கடமையில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுக்கு இனிப்பு வழங்கி, வாழ்த்து கூறி அவர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்.

பின்னர் கேதார்நாத் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த மோடி, அங்கிருந்து டெல்லி திரும்பினார். இன்றிரவு ரெய்சினா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு சென்ற அவர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு மலர்செண்டு அளித்து தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

நாட்டு நிலவரம் தொடர்பாக ஜனாதிபதியுடன் ஆலோசனை நடத்திய மோடி, சமீபத்தில் ஜப்பான் சென்றபோது அந்நாட்டு தலைவர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தொடர்பாகவும் அவரிடம் தெரிவித்தார்.

Leave a Reply