ரூ.18 கோடி ஊழல்: பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டி தலைமறைவு: போலீஸார் தீவிரத் தேடுதல்

ரூ.18 கோடி பணத்தை சட்டவிரோதமாகப் பெற்ற வழக்கில் பாஜக முன்னாள் அமைச்சரும், பெல்லாரி சுரங்க அதிபருமான ஜனார்த்தன் ரெட்டி தலைமறைவாகியுள்ளார் என்று கர்நாடக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட நேரத்தில் மக்கள் 2 ஆயிரம் ரூபாய்க்காக மணிக்கணக்கில் ஏடிஎம் வாசலில் நின்று வேதனைப் பட்ட நேரத்தில் ஜனார்த்தன் ரெட்டி தனது மகளுக்கு ரூ.500 கோடி செலவில் பிரம்மாண்டமாக திருமணம் நடத்தினார். பணத்தை வங்கியில் இருந்து எடுக்கவே மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை மக்களுக்கு விதித்த நிலையில், ஜனார்த்தன் ரெட்டி தனது மகளுக்கு நடத்திய திருமணம் பெரும் சர்ச்சையைக் கிளப்பி இருந்தது.

கர்நாடக மாநிலம், பெல்லாரியைச் சேர்ந்தவர்கள் ரெட்டி சகோதரர்கள்.
இதில் ஜனார்த்தன் ரெட்டி சுரங்கத் தொழில், இரும்புத்தாது ஏற்றுமதி என பல்வேறு தொழில்கள் செய்து பெரும் பணக்காரர். கர்நாடகாவில் பாஜகவின் ஆட்சியின்போது, அமைச்சராகவும் ஜனார்த்தன ரெட்டி இருந்தார்.

சட்டவிரோதமாக குவாரிகளுக்கு அனுமதி கொடுத்த வழக்கில் முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பா இறங்கியபோது, ஜனார்த்தன் ரெட்டி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 2015-ம் ஆண்டு கைது செய்யப்பட்ட ஜனார்த்தன் ரெட்டி 3 ஆண்டுகள் சிறையில் இருந்து தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

இந்நிலையில், ஜனார்த்தன் ரெட்டி அமைச்சராக இருந்த காலத்தில் நிதி நிறுவன அதிபரை அமலாகப்பிரிவு விசாரணையில் இருந்து காக்கும் பொருட்டு ரூ.18 கோடி பணத்தை தங்கமாகப் பெற்ற வழக்கில் தேடப்பட்டு வந்தார். பெல்லாரி தொகுதியில் மிகவும் வலிமையான மனிதர்களாக வலம் வந்த ரெட்டி சகோதரர்களுக்கு சமீபத்திய இடைத்தேர்தல் முடிவுகள் இடியாக இறங்கின.

பெல்லாரி தொகுதியில் பாஜக படுதோல்வியைச் சந்தித்தது. ஜனார்த்தன் ரெட்டியின் தீவிர ஆதரவாளரான சிறீராமுலுவின் சகோதரி ஜே.சாந்தா இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதையடுத்து, ரூ.18 கோடி ஊழல் வழக்கில் தேடப்பட்டு வந்த ஜனார்த்தன் ரெட்டி திடீரென தலைமறைவாகியுள்ளார் என போலீஸார் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து பெங்களூரு காவல் ஆணையர் டி சுனீல் குமார் கூறியதாவது:

”பரீத் என்பவர் ஆம்பிடென்ட் என்ற நிதி நிறுவனத்தை நடத்தி வந்தார். அந்த நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு அதிகமான லாபம் தருவதாகக் கூறப்பட்டது.இதையடுத்து, ஏராளமானோர் முதலீடு செய்தனர். குறிப்பிட்ட மாதங்கள் மட்டுமே லாபம் வழங்கப்பட்ட நிலையில், அதன்பின் நிறுவனத்தால் வழங்க முடியவில்லை, இதனால், போலீஸிடம் நிறுவனத்தின் அதிபர் பரீத் மீது ஏராளமான புகார்கள் தரப்பட்டன. அமலாக்கப் பிரிவும் பரீத் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.

அலிகான் என்பவர் மூலம் அப்போது அமைச்சராக இருந்த ஜனார்த்தன் ரெட்டியைச் சந்தித்த பரீத் தன்னை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரியுள்ளார். வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டுமானால் ரூ.20 கோடி லஞ்சமாகத் தர வேண்டும் என்று ஜனார்த்தன் ரெட்டி கேட்டுள்ளார். இதை பணமாகத் தராமல், பெங்களூருவில் அம்பிகா ஜுவல்லரிஸ் நடத்திவரும் ரமேஷ் கோத்தாரி என்பவர் மூலம் தங்கமாக வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து அம்பிகா ஜுவல்லரிஸ் நடத்தி வரும் ரமேஷ் கோத்தாரி, 57 கிலோ தங்க நகையை பெல்லாரியில் ராஜ்மஹால் பேன்ஸி நகைக்கடை நடத்திவரும் ரமேஷ் என்பவரிடம் நகையை ஒப்படைத்ததுள்ளார். ரமேஷிடம் விசாரணை நடத்தியதில், ஜனார்த்தன் ரெட்டிக்கு நெருங்கிய நண்பரான அலிகானிடம் நகைகளை ஒப்படைத்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ரூ.18 கோடி மதிப்புள்ள நகைகள் தற்போது மாயமாகியுள்ளன.

ஜனார்த்தன் ரெட்டிக்கு எதிராக எந்தவிதமான கைது வாரண்டும் இல்லை. இருந்தாலும் இந்த வழக்கில் இருந்து தன்னை காத்துக்கொள்ளும் பொருட்டு அவர் நீதிமன்றத்தை நாடி முன் ஜாமீனுக்கு அணுகியுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், இந்த வழக்கில் ஜனார்த்தன் ரெட்டிக்கு நேரடியான தொடர்பு இருப்பதற்கான ஆதாரமாக சில புகைப்படங்கள் கிடைத்துள்ளன. அதுதொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தத் தயாராகி இருந்தோம். ஆனால், அவர் திடீரென தலைமறைவாகியுள்ளார். விரைவில் அவருக்குச் சம்மன் அனுப்பப்பட்டு விசாரணைக்கு அழைக்கப்படுவார். இந்த வழக்கு தொடர்பாக ரமேஷை கைது செய்ததில் அவரிடம் இருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன”.

இவ்வாறு போலீஸ் ஆணையர் தெரிவித்தார்.

Share

Recent Posts

7-ம் கட்ட மக்களவைத் தேர்தல்; 1 மணிநிலவரம்: 38% வாக்குகள் பதிவு

7-ம் கட்டத் தேர்தல் நடைபெறும் 59 தொகுதிகளிலும் மதியம் 1 மணி நிலவரப்படி 39.85 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19…

3 hours ago

7-ம் கட்ட மக்களவைத் தேர்தல் : பிற்பகல் 1 மணி வரையிலான வாக்குப்பதிவு நிலவரம்

8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பகல் ஒரு மணி நிலவரப்படி மாநிலவாரியாக பதிவான வாக்கு சதவீதம் தொடர்பான தகவல் தற்போது…

3 hours ago

தேர்தல சவ்வா இழுக்கறத தவிர்க்கலாம்: நிதிஷ் குமார்!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இன்று கடைசிக் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கிய மக்களவை தேர்தல், 6 கட்டங்களை…

3 hours ago

கேதாரத்தைத் தொடர்ந்து பத்ரிநாத் கோயிலில் மோடி வழிபாடு!

உத்தரகாண்ட் மாநிலம், கேதார்நாத்தை தொடர்ந்து பத்ரிநாத் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு மேகொண்டார்.நாடு முழுவதும் இன்று மக்களவைக்கான இறுதிக் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. நேற்று…

3 hours ago

கத்திமுனையில் 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை; டிவி நடிகர் கைது..!

2 இளம் பெண்களை கத்திமுனையில் பலாத்காரம் செய்த டிவி நடிகர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனா்.உலகில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்த வண்ணம் உள்ளது.…

3 hours ago

Exit Poll Results 2019: எக்ஸிட் போல் முடிவுகள் எங்கு? எப்போது?

மக்களவைத் தேர்தல் எக்ஸிட் போல் முடிவுகளை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழில் லைவ்வாக காணலாம். முன்னணி தொலைக்காட்சிகள் அனைத்தும் இதையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருக்கின்றன.2019-ம் ஆண்டுக்கான மக்களவைத்…

3 hours ago