ஆர்டிஓ வீட்டில் ரூ.70 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்: 3 கிலோ தங்கம், 10 கிலோ வெள்ளி சிக்கியது: ஆந்திராவில் அதிகாரிகள் நடவடிக்கை

வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக வந்த புகாரையடுத்து, போக்குவரத்து துணை ஆய்வாளர் வீட்டிலும், வங்கி லாக்கரிலும் நடத்தப்பட்ட சோதனையில், 3 கிலோ தங்கம், 10 கிலோ வெள்ளி உள்ளிட்ட ரூ.70 கோடி மதிப்புள்ள பொருட்களை ஆந்திரா ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் துணை மோட்டார் வாகன ஆய்வாளராகப் பணியாற்றி வருவர் சரகடம் வெங்கட ராவ். இவர் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துகள் சேர்த்துள்ளதாக ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்குத் தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து, ஊழல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி பி. ரணமி தேவி தலைமையிலான போலீஸார் நேற்று முன்தினம் வெங்கட ராவ் வீடு, அலுவலகம் ஆகியவற்றில் திடீரென ஆய்வு நடத்தினார்கள்.

மேலும், வெங்கட ராவின் வீட்டில் பணியாற்றும் டிரைவர் பி. மோகன், வெங்கட ராவின் சகோதரர் கிரண் குமார் ஆகியோர் வீடுகளிலும், வங்கி லாக்கரிலும் சோதனை நடத்தினார்கள். இந்தச் சோதனையில் கணக்கில் வராத ஏராளமான சொத்துகள், நகைகள், பொருட்கள், சொத்து ஆவணங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

ஏறக்குறைய 2 நாட்கள் நடத்தப்பட்ட சோதனையில் வெங்கட ராவ் கணக்கு வைத்துள்ள பேங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியின் இரு கிளைகளில் இருந்து 1.79 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், ஐடிஐ ஜங்ஷன் பிரிவில் உள்ள எஸ்பிஐ வங்கி கிளையில் உள்ள லாக்கரில் இருந்து 1.30 கிலோ தங்க நகையும், 10 கிலோ வெள்ளிப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், கவுரி கூட்டுறவுவங்கியில் ரூ.75 ஆயிரம் வைப்பு நிதி, பல்வேறு இடங்களில் சொத்துகள் வாங்கி இருப்பதற்கான ஆவணங்கள், வைப்பு நிதிப் பத்திரங்கள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன. வெங்கட ராவின் டிரைவர் வீட்டில் இருந்து 3 பெட்டிகளை போலீஸார் கைப்பற்றினார்கள். வெங்கட ராவின் சகோதரர் வீட்டில் இருந்து ஏராளமான சொத்து ஆவணங்களையும், பத்திரங்களையும் கைப்பற்றியுள்ளதாக ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் தெரிவித்தனர். வெங்கட ராவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள், ஆவணங்கள், பணம் ஆகியவற்றின் சந்தை மதிப்பு ரூ.70 கோடியைத் தொடும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

வெங்கட ராவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம், ஆவணங்கள், நகைகள், பொருட்கள் அனைத்தும் கூடுதல் நீதித்துறை நீதிமன்றத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் ஒப்படைத்தனர். இதையடுத்து, வெங்கட ராவைக் கைது செய்து போலீஸார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share

Recent Posts

7-ம் கட்ட மக்களவைத் தேர்தல்; 1 மணிநிலவரம்: 38% வாக்குகள் பதிவு

7-ம் கட்டத் தேர்தல் நடைபெறும் 59 தொகுதிகளிலும் மதியம் 1 மணி நிலவரப்படி 39.85 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19…

3 hours ago

7-ம் கட்ட மக்களவைத் தேர்தல் : பிற்பகல் 1 மணி வரையிலான வாக்குப்பதிவு நிலவரம்

8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பகல் ஒரு மணி நிலவரப்படி மாநிலவாரியாக பதிவான வாக்கு சதவீதம் தொடர்பான தகவல் தற்போது…

3 hours ago

தேர்தல சவ்வா இழுக்கறத தவிர்க்கலாம்: நிதிஷ் குமார்!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இன்று கடைசிக் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கிய மக்களவை தேர்தல், 6 கட்டங்களை…

3 hours ago

கேதாரத்தைத் தொடர்ந்து பத்ரிநாத் கோயிலில் மோடி வழிபாடு!

உத்தரகாண்ட் மாநிலம், கேதார்நாத்தை தொடர்ந்து பத்ரிநாத் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு மேகொண்டார்.நாடு முழுவதும் இன்று மக்களவைக்கான இறுதிக் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. நேற்று…

3 hours ago

கத்திமுனையில் 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை; டிவி நடிகர் கைது..!

2 இளம் பெண்களை கத்திமுனையில் பலாத்காரம் செய்த டிவி நடிகர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனா்.உலகில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்த வண்ணம் உள்ளது.…

3 hours ago

Exit Poll Results 2019: எக்ஸிட் போல் முடிவுகள் எங்கு? எப்போது?

மக்களவைத் தேர்தல் எக்ஸிட் போல் முடிவுகளை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழில் லைவ்வாக காணலாம். முன்னணி தொலைக்காட்சிகள் அனைத்தும் இதையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருக்கின்றன.2019-ம் ஆண்டுக்கான மக்களவைத்…

3 hours ago