உயிரைப் பறிக்கும் முயற்சியில் நடுவண் அரசு! இந்திய நாட்டின் பொருளாதாரத்தின் உயிர், ‘ரிசர்வ் வங்கி இருப்பு வைத்துள்ள தங்கம்’

21,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ரிசர்வ் வங்கி விருப்பத்திற்கு பணத்தை அச்சிட்டு வெளியிட்டு விட முடியாது. ரிசர்வ் வங்கி அச்சிட்டு வெளியிடுகிற ஒவ்வொரு ரூபாய்க்கும் இணையான தங்கத்;;;;தை இருப்பு வைத்துக் கொண்டுதான் பணத்தை அச்சிட்டு வெளியிட முடியும். அச்சிட்டு வெளியிடுகிற பணத்தின் மதிப்புக்கு குறைவாக நம் நாட்டு ரிசர்வ் வங்கி தங்கத்தை இருப்பு வைத்திருக்குமானால், உலக நாடுகள் நம் நாட்டின் செலவணி மதிப்பைக் குறைத்து விடும். ஒருவேளை பணமே நாம் இருப்பு வைத்துக் கொள்ளாமல், ரூபாயை அச்சிட்டு வெளியிடுவோமேயானால் அந்தப் பணத்தை உலக நாடுகள் எடைக்கு கூட வாங்காது. இந்த நிலைபாட்டில், ரிசர்வ்வங்கி அச்சடித்த ரூபாய் தாள்களின் உயிராக வைத்துள்ள தங்கம் இருப்பில் இருந்து, நடுவண் அரசு ரிசர்வ் வங்கியிடம் மொத்தம் 3.6 லட்சம் கோடி ரூபாய் பணம் கேட்க உள்ளது நடுவண் அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது.
ரிசர்வ் வங்கியை, நடுவண் அரசு சுதந்திரமாக செயல்பட விடவில்லை என்று பெரிய குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில்தான் ரிசர்வ் வங்கியிடம் நடுவண் அரசு பணம் கேட்க உள்ளது. இதனால் விரைவில் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் பதவி விலகுவார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நடுவண் அரசு ரிசர்வ்வங்கியிடம் மொத்தம் 3.6 லட்சம் கோடி ரூபாய் பணம் கேட்க உள்ளது. ரிசர்வ் வங்கி வைத்திருக்கும் தொகையான 9.6 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 3.6 கோடி ரூபாய் நடுவண் அரசு கேட்க உள்ளது. இரண்டு கிழமை இடைவெளியில் நடக்கவிருக்கும் கூட்டத்தில் இந்த பணத்தை கேட்கப் படவுள்ளது. இப்படி ரிசர்வ் வங்கியிடம் பணம் கேட்பது பெரிய பொருளாதார சீர்குலைவிற்கு வழிவகுக்கும் என்பதை. அதன் அடிப்படையை புரிந்து கொண்ட ஒவ்வொருவருக்கும் அதிர்ச்சியளிக்கும். பொருளாதர நிபுணர்கள் கடுமையாக எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்கள். அதேபோல் ரிசர்வ் வங்கியும், தங்களிடம் சரியான அளவுதான் பணம் கையிருப்பு உள்ளது என்று கூறியுள்ளது. இதனால் அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே பிரச்சனை முற்றியுள்ளது. இதன் காரணமாக ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் விரைவில் பதவி விலகுவார் என்று கூறப்படுகிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,964.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.

Share

Recent Posts

7-ம் கட்ட மக்களவைத் தேர்தல்; 1 மணிநிலவரம்: 38% வாக்குகள் பதிவு

7-ம் கட்டத் தேர்தல் நடைபெறும் 59 தொகுதிகளிலும் மதியம் 1 மணி நிலவரப்படி 39.85 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19…

3 hours ago

7-ம் கட்ட மக்களவைத் தேர்தல் : பிற்பகல் 1 மணி வரையிலான வாக்குப்பதிவு நிலவரம்

8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பகல் ஒரு மணி நிலவரப்படி மாநிலவாரியாக பதிவான வாக்கு சதவீதம் தொடர்பான தகவல் தற்போது…

3 hours ago

தேர்தல சவ்வா இழுக்கறத தவிர்க்கலாம்: நிதிஷ் குமார்!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இன்று கடைசிக் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கிய மக்களவை தேர்தல், 6 கட்டங்களை…

3 hours ago

கேதாரத்தைத் தொடர்ந்து பத்ரிநாத் கோயிலில் மோடி வழிபாடு!

உத்தரகாண்ட் மாநிலம், கேதார்நாத்தை தொடர்ந்து பத்ரிநாத் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு மேகொண்டார்.நாடு முழுவதும் இன்று மக்களவைக்கான இறுதிக் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. நேற்று…

3 hours ago

கத்திமுனையில் 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை; டிவி நடிகர் கைது..!

2 இளம் பெண்களை கத்திமுனையில் பலாத்காரம் செய்த டிவி நடிகர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனா்.உலகில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்த வண்ணம் உள்ளது.…

3 hours ago

Exit Poll Results 2019: எக்ஸிட் போல் முடிவுகள் எங்கு? எப்போது?

மக்களவைத் தேர்தல் எக்ஸிட் போல் முடிவுகளை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழில் லைவ்வாக காணலாம். முன்னணி தொலைக்காட்சிகள் அனைத்தும் இதையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருக்கின்றன.2019-ம் ஆண்டுக்கான மக்களவைத்…

3 hours ago