சபரிமலைக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பெண் மீது தாக்குல் நடத்திய இளைஞர் கைது: 200 பேர் மீது வழக்குப்பதிவு

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பெண் பக்தர் மீது தாக்குதல் நடத்திய 29 வயது இளைஞரை போலீஸார் இன்று கைது செய்தனர்.

சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மாநிலம் முழுவதும் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்தத் தீர்ப்பையடுத்து சபரிமலைக்குச் செல்லும் பெண்களில் 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் வந்தால் அவர்களைப் போராட்டக்காரர்கள் திருப்பி அனுப்பி வருவதால், அங்கு பதற்றமான சூழல் நிலவி வந்தது.

இந்நிலையில், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை நடை கடந்த இரு நாட்களுக்கு முன் திறக்கப்பட்டது.
அப்போது சாமி தரிசனம் செய்ய 52 வயதான லலிதா ரவி என்ற பெண் பக்தர் வந்திருந்தார். தன்னுடைய ஒரு வயதுப் பேரனுக்கு முதல் முறையாக உணவு ஊட்டினார். ஆனால், இந்தப் பெண் 50 வயதுக்குட்பட்டவர் என நினைத்த அங்கிருந்த பக்தர்கள் கோஷமிட்டு, லலிதாவை மலை ஏறவிடாமல் தடுத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டதால், போலீஸார் அங்குவந்து, போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கூட்டத்தில் இருந்த ஒருவர் லலிதா மீது தாக்குதல் நடத்தினார்.

அதன்பின் அந்தப் பெண் தன்னிடம் இருந்த ஆதார் அட்டையைக் காண்பித்து தனக்கு 52 வயதாகிறது என்று கூறியவுடன் அங்கிருந்தவர்கள் மற்ற பெண்களுடன் சாமி தரிசனம் செய்ய அனுமதித்தனர். இந்நிலையில் லலிதா மீது இளைஞர் தாக்குதல் நடத்தியதைப் பார்த்த அங்கிருந்த போலீஸார், அந்த இளைஞரை அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில், உயரதிகாரிகள் உத்தரவின் பெயரில் அந்த இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்து போலீஸார் கைது செய்தனர். அந்த இளைஞர் பெயர் சூரஜ். பத்தினம்திட்டா மாவட்டம், எழந்தூரைச் சேர்ந்தவர் என்று விசாரணையில் தெரியவந்தது. இவர் மீது ஐபிசி 308 (தாக்குதல் முயற்சி), 354 (பெண்ணைத் தாக்குதல்) ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.சூரஜிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக பத்தினம்திட்டா மாவட்ட போலீஸ் எஸ்பி நாராயண் தெரிவித்தார்.

மேலும், லலிதாவை மலை ஏறவும், இறங்கவும் தடுக்க முயற்சித்த அடையாளம் தெரியாத 200 பேர்மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Share

Recent Posts

தேதி, நேரம் குறித்த ஆஸ்தான ஜோதிடர்… நாளை காலை திமுகவில் இணைகிறார் செந்தில் பாலாஜி!

கடந்த சில நாட்களாக உலாவிவந்த செய்தி கிட்டத்தட்ட கிளைமேக்ஸை நெருங்கிக்கொண்டிருக்கிறது. ஆமாம், நாளை காலை, அதாவது 13ஆம் தேதி காலை 10.45 மணிக்கு திமுக தலைமைக்கு கழகம்…

1 hour ago

இந்தாளு நம்மளை நிம்மதியா வாழவிட்டமாட்டார்…! ரஜினி வெளிப்படையாக இப்படி புலம்பித் தீர்த்தது யாரால்?

எல்லாமே வேஷம், அனைத்தும் மேக் - அப் என்று நிரம்பி வழியும் சினிமா உலகில், இமேஜைப் பற்றிக் கவலைப்படாமல் திறந்த புத்தகமாக திரிபவர் ரஜினிகாந்த்தான். இதோ சில…

1 hour ago

ரகசியமாக 2 கோடி கொடுத்த நடிகர்! துணிச்சலாக ஒப்புக்கொண்ட நடிகை!

'குளிர்ச்சி' யான கதாநாயகி தற்போது ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வசித்து வருகிறார். இப்போதுதான் இவருடைய மார்க்கெட் மெல்ல மெல்ல களைகட்டி வருகிறது. அவருக்கு நிறைய பட…

1 hour ago

ம.பி.,யில் ஆட்சி அமைக்க காங்கிரஸுக்கு அகிலேஷ் ஆதரவு

மத்தியப் பிரதேசத்தில் ஆட்சி அமைக்க காங்கிரஸுக்கு ஆதரவுக் கரம் நீட்டத் தயாராக இருப்பதாக சமாஜ்வாடி கட்சியின் தலைவரும் உ.பி. முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்திருக்கிறார்.மத்தியப் பிரதே…

1 hour ago

ராகுல் காந்தி பாஸாகிவிட்டார்; மூத்த தலைவர் புகழாரம்

5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில் காங்கிரஸ் கட்சி 3 மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றியது. இதனையடுத்து பல்வேறு தலைவர்களும் பிரபலங்களும் இந்த தேர்தல்…

1 hour ago

தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளரை ட்விட்டரில் அடிச்சிதூக்கிய தல ரசிகர்கள்

தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயினின் ட்விட்டர் பக்கத்தில் அஜித் ரசிகர்கள் விஸ்வாசம் போஸ்டரை பதிவிட்டு திணறடித்துள்ளனர்.சினிமாவின் ஆரம்ப கட்டத்தில் இருந்தே நடிகர்கள் நடிகைகள் மத்தியில்…

1 hour ago