கர்நாடக அமைச்சர் ஹோட்டலில் மிகவும் ருசியாக சமைத்த சமையல்காரருக்கு ரூ.25 ஆயிரம் டிப்ஸ் அளித்ததோடு,அவர் புனித ஹஜ் பயணம் செல்லவும் உதவுவதாக உறுதியளித்த சம்பவ ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தின் உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் பி ஜமீர் அகமது கான் சமீபத்தில் வேலை காரணமாக மங்களூருக்கு சென்றபோது மதியம் அங்குள்ள “பிஷ் மார்க்கெட்” என்ற ஹோட்டலுக்கு சாப்பிட சென்றுள்ளார். மேலும் முன்னாள் எம்எல்ஏ மொய்தீன் பாபா, வக்பு வாரியத் தலைவர் மோனு, இப்திகார் அலி பலரும் சென்றுள்ளனர்.

அங்கு அவர்கள் பல்வேறு வகையான மீன் வகை உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர்.அப்பொழுது “பாம்பிரட்” மற்றும் “அஞ்சல்” ஆகிய மீன் உணவுகளைச் சாப்பிட்ட அமைச்சர் ஜமீர் அகமது அதன் அதன் ருசியில் மயங்கி .அதைச் சமைத்த ஹோட்டலின் தலைமை சமையல்கலைஞர் ஹனீப் அகமதுவை அழைத்து தன் பக்கத்தில் அமர சொன்னார்.

பின் தனது தட்டில் இருந்து உணவுகளை எடுத்து அவருக்கு அன்புடன் ஊட்டிவிட்டு தன்னிடம் இருந்த ரூ.25 ஆயிரம் பணத்தை எடுத்து டிப்ஸாக அளித்து அவரை மகிழ்ச்சிப்படுத்தினார்.

மேலும் அவர் புனித ஹஜ்பயணம் செல்வதற்கான அனைத்து உதவிகளையும் செய்வதாகவும்உறுதியளித்தார்.

இச்சம்பவம் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply