திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பெரும் ஆபத்து..!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பெரும் ஆபத்து..!

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலை, மத்திய அரசு தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான சதி திட்டங்களை செய்து வருவதாக ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பகீர் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று அம்மாநிலத்தின் சித்தூர் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் மத்திய அரசு மீது கடும் குற்றச்சாட்டுகளை வைத்தார்.
அதில், “மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜனதாவின் மோடி அரசாங்கம், திருப்பதி ஏழுமலையான் கோவிலின் நிர்வாகத்தை கைப்பற்ற சதி திட்டம் தீட்டியுள்ளது. இந்த சதி திட்டத்தை நாங்கள் உடைத்து கோவிலை மாநில கட்டுப்பாட்டிலேயே வைத்திருப்போம்.

மத்திய அரசின் இந்த சதி திட்டம் ஒரு போதும் நிறைவேறாது. திருப்பதி ஏழுமலையான் அருளால், 2003-ம் ஆண்டு என் மீது நடத்தப்பட்ட பயங்கரமான தாக்குதலில் உயிர் தப்பினேன். திருப்பதி ஏழுமலையான் கோவிலின் புனிதத்தை யாரும் சிதைக்க அனுமதிக்கமாட்டேன்.

ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு டெல்லிக்கு சென்று, நம் மாநிலத்தின் வளர்ச்சி திட்டத்திற்கு நிதி ஒதுக்கி தருமாறும், மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குமாறும் கேட்டேன். ஆனால் அவர்கள் எதையும் நமக்கு தராமல் துரோகம் செய்துவிட்டனர்”. என பேசினார்.

முன்னதாக, மத்திய அரசு திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான ஏழுமலையான் கோவில் உட்பட அனைத்து கோவில்களின் சொத்து விவரங்கள், அந்த கோவில்களின் வரலாறுகள் குறித்து தகவல்கள் அனுப்பும்படி, மத்திய தொல்லியல் துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பி, பின் அந்த நோட்டீஸ் வாபஸ் பெறப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

கறுப்பு பணம் பரம ரகசியமாம்… தகவல் சொல்லக் கூடாதாம்

டெல்லி: நாட்டில் எவ்வளவு கறுப்புப் பணப் புழக்கம் எவ்வளவு உள்ளது என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப் பட்ட கேள்விக்கு அது இரு நாடுகளுக்கு…

2 hours ago

இன்றைய (20.05.2019) பெட்ரோல், டீசல் விலை: இன்று அதிரடி மாற்றத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி!!

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை நிர்ணயித்து வந்தது. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை கைவிடப்பட்டு, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை…

2 hours ago

இன்றைய(மே 20) பெட்ரோல் , டீசல் நேற்றைய விலையை விட அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் நிலவரத்தை பொருத்து இந்தியாவில் உள்ள பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றனர்.இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள…

2 hours ago

பிரச்சினையை டெபாசிட் பண்ணிட்டு வன்முறையை வட்டிக்கு வாங்கும் ட்ரம்ப் – வரி இல்லாத வர்த்தகம்

வாஷிங்டன்: சர்வதேச வர்த்தகத்தில் இந்தியா சீனாவுடன் கடும் மோதல் போக்கை கடைபிடித்து வரும் அமெரிக்க தன் அண்டை நாடுகளான கனடா மற்றும் மெக்ஸிகோ உடன் இணக்கமான போக்கை…

2 hours ago

பங்குச் சந்தையில் திடீர் உற்சாகம்: சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு

பங்குச் சந்தையில் வர்த்தகம் துவங்கிய போது மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 900 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.முந்தைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 37…

2 hours ago

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்வு

அந்நியச் செலாவணி சந்தையில் இன்று திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 79 காசுகள் உயர்ந்தது.சீனா-அமெரிக்கா இடையில் ஏற்பட்டுள்ள வர்த்தக நெருக்கடிக்கு பேச்சுவார்த்தையின் மூலம் நல்ல தீர்வு…

2 hours ago