இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி. இவருக்கும் ஹாசின் ஜஹான் என்ற பெண்ணுக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. ஹாசின் ஜஹானின் இரண்டாவது கணவர் தான் ஷமி. தற்போது ஷமி குறித்து அவரது மனைவி ஹாசின் ஜஹான் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். ஷமிக்கு பல்வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதாக தனது ஃபேஸ்புக்கில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன் முன்வைத்தார்.ஷமி மீது கொலை முயற்சி, பலாத்காரம், என பல்வேறு பிரிவுகளின் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து ஹாசின் ஜஹானின் முன்னாள் கணவர் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் ஹாசின் ஜஹான் குறித்தும் பல்வேறு தகவல்களையும் தெரிவித்துள்ளார்.

ஹாசின் ஜஹானின் முன்னாள் கணவர் சைஃபுதீன் கூறுகையில், முகமது ஷமியும், ஹாசின் ஜஹான் தங்களது கருத்து வேறுபாடுகளை கலைத்து மீண்டும் இணைவார்கள் என நம்புகிறேன் என்றார். தங்களது திருமணம் குறித்து பேசிய சைஃபுதீன், கடந்த 2002ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டதாகவும் இருவரும் மேற்கு வங்கத்தில் வசித்து வந்ததாகவும் தெரிவித்தார். எங்களுக்கு இரண்டு மகள்கள் பிறந்தனர். இந்நிலை மேற்படிப்பு படிக்க வேண்டும் என ஜஷான் விரும்பியதாகவும் ஆனால் நடுத்தர குடும்பத்தில் உள்ள நமக்கு இது சாத்தியப்படாது எனக் கூறியதால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறினார். இதன் காரணமாக எங்கள் திருமண பந்தம் விவாகரத்தில் முடிந்தது. விவாகரத்து பெறும் போது  இரு குழந்தைகளும் தாயிடம் தான் இருக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும் ஷமியை திருமணம் செய்துகொண்ட பின் குழந்தைகள் தன்னிடம் வந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

ஹாசின் ஜஹானின் மூத்த பெண் கூறுகையில், தனது தாயை பிரிந்து இருப்பது வேதனையாக இருப்பதாகவும் விடுமுறை நாட்களில் மட்டுமே எங்களை வந்து அவர் சந்திக்கிறார் என்றும் கூறினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Reply