இந்திய – நேபாள ராணுவம் இணைந்து கூட்டுப்பயிற்சி : 600 வீரர்கள் பங்கேற்பு

பித்தோராகர்: இந்திய – நேபாள ராணுவத்தினர் இணைந்து உத்தரகாண்ட் மாநிலத்தில் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சூரியகிரண் என பெயரிடப்பட்டுள்ள இந்த பயிற்சி உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டுப் பயிற்சியில் இருநாடுகளையும் சேர்ந்த 600 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். காடுகளில் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்துவது, பேரிடர் நேரங்களில் துரிதமாக செயல்படுவது குறித்தும் பயிற்சிகள் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய பாதுகாப்பு அதிகாரியான ஆர்.கே.பரத்வாஜ், கூட்டுப் பயிற்சியில் தீவிரவாதிகளை எதிர்கொள்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.
மேலும் பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்கள், பேரிடர் நேரங்களில் வீரர்கள் செயல்பட வேண்டிய முறைகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்படுவதாக கூறினார். மேலும் இயற்கை சீற்றங்களை எதிர்கொள்வதற்கு வீரர்களுக்கு தொழில்நுட்ப ஆலோசனை பயிற்சியில் வழங்கப்படுபகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்திய – நேபாள ராணுவ கூட்டுப் பயிற்சி நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு நேபாளத்தில் இது போன்றதொரு கூட்டுப் பயிற்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இருநாட்டிற்கிடையே நல்லுறவை வளர்க்கும் வகையில் கூட்டுப் பயிற்சி அமைந்துள்ளதாக இருநாட்டு அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.

Share

Recent Posts

பாஜகவிற்கு அதிர்ச்சி அளித்த மரணம்! சிகிச்சை பலனின்றி மறைந்தார் அருண் ஜெட்லீ!

முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜகவின் மூத்த மூத்த தலைவருமான அருண் ஜெட்லி உடல்நிலை குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில்…

4 mins ago

பிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறும் நபர்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

பிக்பாஸ் மூன்றாவது சீசன் தொடங்கி 60வது நாட்களைக் கடந்துவிட்டது. இதுவரை பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா, சாக்ஷி, சரவணன், மதுமிதா அபிராமி ஆகியோர் வெளியேறியுள்ளனர்.…

4 mins ago

அருண் ஜேட்லியின் மறைவு நமது பொது வாழ்க்கையில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது: குடியரசுத் தலைவர் இரங்கல்

புதுடெல்லி: முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மறைவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஒரு…

4 mins ago

அமைச்சர்களுக்கு எடப்பாடி வைத்த டெஸ்ட்…அதிமுக அதிகாரத்தை கைப்பற்றிய இபிஎஸ்!

அதிமுகவில் தற்போது முழு அதிகாரத்தையும் எடப்பாடி கைப்பற்றி விட்டதாக தகவல் வருகின்றன. இதனால் ஓபிஎஸ் தரப்புக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். ஓபிஎஸ்க்கு மத்தியில்…

4 mins ago

மாணவ போராளி அருண் ஜெட்லி, கடந்து வந்த பாதை!!

அருண் ஜெட்லி, கடந்த 1952-ஆம் ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி, புதுடெல்லியில் பிறந்தார். தனது பள்ளி, கல்லூரி படிப்பை டெல்லியில் முடித்தார். தன்னுடைய தந்தையை போலவே சட்டம்…

4 mins ago

#BREAKING | அருண் ஜெட்லி காலமானார்

பாஜக மூத்த தலைரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஜெட்லி, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலமானார். பாஜக மூத்த தலைவரான…

4 mins ago