மாற்றுத்திறனாளி சகோதரிகள் கடவுச்சீட்டு பெற சுஷ்மா உதவி

ஆந்திரத்தைச் சேர்ந்த வயது முதிர்ந்த தம்பதியின் மாற்றுத்திறனாளி மகள்கள் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) பெற வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உதவி செய்துள்ளார். சுட்டுரை உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் தனக்கு வரும் கோரிக்கைகள், புகார் மீது சுஷ்மா ஸ்வராஜ் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறார். அதேபோல சமூக மாற்றத்துக்காக தொடங்கப்பட்ட “சேஞ்ச் டாக் ஆர்க்’ என்ற இணையதளத்தில் வரும் கோரிக்கைகள் மீதும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தாசில்தார் ராலப்பள்ளி ராமசுப்பா ராவ்-சுப்புலட்சுமி தம்பதியினர் அந்த இணையதளத்தில் திங்கள்கிழமை ஒரு புகாரைப் பதிவு செய்தனர்.
அதில், மாற்றுத் திறனாளிகளான தங்களது மகள்களுக்கு கடவுச்சீட்டு பெறுவதற்காக, அவர்களை கடவுச்சீட்டு அலுவலகத்துக்கு அழைத்துச் செல்ல முடியாத நிலையில் இருப்பது குறித்து கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை உடனடியாக கவனத்தில் கொண்ட சுஷ்மா ஸ்வராஜ், சுட்டுரை மூலம், அவர்களிடம் விவரத்தைப் பெற்று உரிய அதிகாரிகளுக்கு உத்தரவுகளைப் பிறப்பித்தார். இதையடுத்து, வட்டார கடவுச்சீட்டு அதிகாரிகள், ராமசுப்பா ராவின் வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை நேரில் சென்று, அவரது மகள்களுக்கு கடவுச்சீட்டு அளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அத்தம்பதியினர் கடந்த 40 ஆண்டுகளாக தங்கள் மாற்றுத் திறனாளி மகள்களைப் பராமரித்து வருகின்றனர். அத்தம்பதியின் மகன்கள் வெளிநாட்டில் உள்ளனர். அவர்களுடன் தங்கள் மகள்களை அனுப்பிவைக்கவே கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்தனர். தங்கள் கோரிக்கையின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்த அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு ராமசுப்பா ராவ் தம்பதியினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

Share
Tags: dinamani

Recent Posts

திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் ரவிக்குமார் வெற்றி!

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கே.எஸ்.ரவிக்குமார் வெற்றி பெற்றுள்ளார்.தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல்…

17 hours ago

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கையிலிருந்து வந்து லொஸ்லியா இடம்பெற்றது எப்படி என உண்மையை வெளியிட்ட அவரது நெருங்கிய தோழி

பிரபல தமிழ் டிவி சேனலில் வரும் பிக்பாஸின் மூன்றாவது சீசனில் ரசிகர்களிடம் வேகமாக பிரபலமாகி வருவது லொஸ்லியா தான். அவ்வாறு நாட்கள் செல்ல செல்ல இவருக்கென புதுபுது…

17 hours ago

திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் ஆர்.கே.செல்வமணி வெற்றி

திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் 1,386 வாக்குகள் பெற்று வெற்றி ஆர்.கே.செல்வமணி பெற்றார். இன்று காலை தொடங்கிய வாக்குப்பதிவு நிறைவடைந்து, உடனே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.…

17 hours ago

காப்பான் படத்தில் ஐந்து பாடல்கள் இவைதான்

இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள். இந்த நிலையில் 'காப்பான்' திரைப்படத்தின் டிராக்லிஸ்ட் சற்று முன் வெளியாகி உள்ளதுஇந்த படத்தின்…

17 hours ago

அனைத்து சிம்பு ரசிகர்களும் தெறிக்க விடும் ஒரு முக்கியமான தருணம்

தமிழ் திரையுலகில் நடிகர் சிம்பு மிகுந்த திறமை கொண்டவர் என்பது பெரும்பான்மையான ரசிகர்களுக்கு தெரியும். மேலும் குழந்தையாக இருக்கும் போது தன் தந்தை டி.ராஜேந்தரால் சினிமாவில் நடிகராக…

17 hours ago

சூப்பர் ஹிட்டான 96 படத்தின் ரீமேக்கில் அதே மஞ்சள் நிற சுடிதாரில் அசத்தும் நடிகை சமந்தா

சென்ற வருடம் தமிழில் விஜய்சேதுபதி, த்ரிஷாவின் நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட்டான படம் 96 . ஏற்கனவே கன்னடத்தில் ரீமேக்கானதை தொடர்ந்து தெலுங்கிலும் தற்போது ரீமேக்காகி வருகிறது. இந்த…

17 hours ago