2 வாரங்களில் வருகிறது ஆதார் அடிப்படையில் பண பரிவர்த்தனை முறை: மோடி தகவல்

புதுடெல்லி : ரொக்கம் குறைவான பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில், ஆதார் தளத்தை பயன்படுத்தி பயோமெட்ரிக் மூலம் பரிவர்த்தனை செய்யும் முறை இன்னும் 2 வாரங்களில் அறிமுகம் செய்யப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். டெல்லியில் நேற்று, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மேற்கொண்டவர்களுக்கு குலுக்கல் மூலம் பரிசு வழங்கும் டிஜிதன் மேளா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, செல்போன் நம்பரை பயன்படுத்தி வங்கி கணக்கிலிருந்து பரிவர்த்தனை செய்யும் `பீம்’ என்ற ஆப் அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது: டெபிட், கிரெடிட் கார்டு, இ வாலட் போன்ற டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறைகளில் புதிதாக பயோமெட்ரிக் பரிவர்த்தனை முறை இன்னும் 2 வாரங்களில் அறிமுகமாக உள்ளது.
இந்த பயோமெட்ரிக் முறையில் நாம் நமது விரல் ரேகையை பதிவு செய்தால் போதும், வங்கிக் கணக்கில் இருந்து உரியவர்களுக்கு நாம் பணம் செலுத்த முடியும். இது மிக பாதுகாப்பான பணப் பரிவர்த்தனை முறையாக இருக்கும். இதற்காக வங்கி கணக்கு ஆதார் தளத்துடன் இணைக்கப்படும். நாட்டின் சொத்துக்களை சாப்பிட்ட எலிகளை பிடிப்பதற்காக ரூபாய் நோட்டு தடை நடவடிக்கை மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டது. இதனால் பொருளாதாரத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Share

Recent Posts

பயங்கரவாதம், ஆப்கன் குறித்து டிரம்ப்-இம்ரான் ஆலோசனை

வாஷிங்டன்:அமெரிக்க அதிபர், டிரம்பை, பாகிஸ்தான் பிரதமர், இம்ரான் கான், நேற்று சந்தித்து பேசினார். அப்போது, ஆப்கன் மற்றும் பயங்கரவாத பிரச்னைகள் பற்றி, இருவரும் தீவிரமாக ஆலோசித்தனர்.பாகிஸ்தான் பிரதமராக…

10 hours ago

பிரிட்டன் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்வு

லண்டன்:பிரிட்டன் புதிய பிரதமராக, 'கன்சர்வேடிவ்' கட்சியின் மூத்த தலைவர், போரிஸ் ஜான்சன், 55, தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.ஐரோப்பிய நாடான, பிரிட்டனின் பிரதமராக தற்போது பதவி வகிப்பவர், தெரசா…

10 hours ago

சீன, ‘மாஜி’ அதிபர் லீ பெங்க், மரணம்

பீஜிங்: சீனாவின் அதிபராக, 1987 -- 1998ம் ஆண்டு வரை இருந்தவர், லீ பெங்க், 90. இவர், 1998 - 2003ம் ஆண்டு வரை, தேசிய மக்கள்…

10 hours ago

ஹாங்காங் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்: 6 பேர் கைது

ஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவுப் போராட்டக்காரர்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்த 6 பேரை அந்த நகர போலீஸார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:…

10 hours ago

சீனா: முன்னாள் பிரதமர் லீ பெங் மரணம்

சீன முன்னாள் பிரதமர் லீ பெங், தனது 90-ஆவது வயதில் மரணமடைந்தார். சீனாவின் 4-ஆவது பிரதமரான லீ பெங், அந்தப் பொறுப்பை 1987-ஆம் ஆண்டு முதல், 1998-ஆம்…

10 hours ago

பின்லேடன் இருப்பிடம் ஐஎஸ்ஐ-க்கு தெரியும்: இம்ரான் மறைமுக ஒப்புதல்

அல்-காய்தா தலைவர் பின்லேடனைப் பிடிப்பதில் அமெரிக்காவுக்கு தங்களது உளவு அமைப்பு உதவியதாகக் கூறியதன் மூலம், அவரது இருப்பிடம் குறித்து தங்களுக்கு ஏற்கெனவே தெரியும் என்பதை பாகிஸ்தான் பிரதமர்…

10 hours ago