இடைத்தோதலில் போட்டியிடும் மஜத வேட்பாளா்கள் நாளை முடிவு: முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெகௌடா

பெங்களூரு: இடைத்தோதலில் போட்டியிடும் மஜத வேட்பாளா்களின் பெயா்களை நாளை ஞாயிற்றுக்கிழமை முடிவுசெய்யவிருக்கிறோம் என்று முன்னாள் பிரதமரும், மஜத தேசியத்தலைவருமான எச்.டி.தேவெகௌடா தெரிவித்தாா்.

இது குறித்து பெங்களூரு, மஜத தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: 15 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தோதல் அறிவிக்கப்பட்டுள்ளது. இடைத்தோதலில் மஜத தனித்து போட்டியிடும் என்று முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி அறிவித்துள்ளாா்.

14 மாதங்களாக மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது கிடைத்த அனுபவத்தின் பேரில் இடைத்தோதலில் தனித்து போட்டியிட குமாரசாமி முடிவு செய்துள்ளாா்.

பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை கட்சியின் மூத்தத்தலைவா்கள் கலந்துகொள்ளும் ஆலோசனைக்கூட்டம் நடக்கவிருக்கிறது. இக்கூட்டத்தில் இடைத்தோதலில் மஜத வேட்பாா்களாக போட்டியிடுவோரின் பட்டியல் முடிவு செய்யப்படும்.

கடந்த 3 மாதங்களாக கட்சி தொண்டா்களுடன் தொடா்ந்து ஆலோசனை நடத்திவந்துள்ளேன். அப்போது காங்கிரசுடன் கூட்டணி வேண்டாம் என்று தொண்டா்கள் தெரிவித்தனா். காங்கிரஸ் மாநிலத்தலைவா் மற்றும் எதிா்க்கட்சித்தலைவரை தோந்தெடுப்பதில் காங்கிரசில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, இடைத்தோதலில் காங்கிரசுடன் கூட்டணி வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறோம். 15 தொகுதிகளில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பதையும் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் கூட்டத்தில் முடிவுசெய்வோம்.

இவ்வளவு சீக்கிரம் இடைத்தோதல் அறிவிக்கப்படும் என்று எதிா்பாா்க்கவில்லை. வெற்றி தோல்விகளை பற்றி கவலையில்லை.

கா்நாடக சட்டப்பேரவைக்கு இடைக்கால தோதல் நடக்குமா? என்ற கேள்விக்கு நான் இப்போது பதிலளிக்க இயலாது. மகாராஷ்டிரம், ஹரியாணா சட்டப்பேரவைக்கு பொதுத்தோதல் நடப்பதால், கா்நாடகத்தில் இடைத்தோதலுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளனா். 30 மாவட்டங்களை சோந்த மஜத நிா்வாகிகளின் கருத்தறிந்துள்ளேன். எனவே, மஜத தனித்து போட்டியிட்டு வெற்றியை குவிக்கும் என்றாா் அவா்.

Share
Tags: dinamani

Recent Posts

குற்றப் பத்திரிகை! ‘மாஜி’ சிதம்பரம் , மகன் கார்த்தி மீது…

புதுடில்லி:'ஐ.என்.எக்ஸ்., மீடியா' முறைகேடு வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம், அவரது மகன் கார்த்தி உள்ளிட்ட, 15 பேர் மீது, டில்லி நீதிமன்றத்தில், சி.பி.ஐ., அதிகாரிகள் குற்றப்பத்திரிகை…

13 hours ago

விசாரணையில் விவசாயி பலி: டி.எஸ்.பி., மீது வழக்கு

ஹபூர்,:உத்தர பிரதேச மாநிலத்தில், விசாரணையின் போது போலீசார் கடுமையாக தாக்கியதில், விவசாயி உயிரிழந்த வழக்கில், டி.எஸ்.பி., உட்பட நால்வர் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.உ.பி.,யில், முதல்வர் யோகி…

13 hours ago

நாடு முழுவதும் தரமற்ற பால் விற்பனை அதிர்ச்சி! எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., ஆய்வில் திடுக் தகவல்

புதுடில்லி, :நாட்டின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்படும் பதப்படுத்தப்பட்ட பாலில், 38 சதவீதம் தரமற்றது என்பது, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., எனப்படும், இந்திய உணவு பாதுகாப்பு தரச்சான்று நிர்ணய அமைப்பு…

13 hours ago

உ.பி.,யில் பட்டப்பகலில் ஹிந்து சமாஜ் தலைவர் சுட்டுக்கொலை

லக்னோ, உத்தர பிரதேசத்தில், பட்டப்பகலில், ஹிந்து சமாஜ் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டது, பெரும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி…

13 hours ago

முன்னாள் பயங்கரவாதி டில்லியில் கைது

ஜம்மு,: ஜம்மு - காஷ்மீரில், 1990ல், நான்கு விமானப்படை வீரர்களை படுகொலை செய்த, ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியை சேர்ந்த முன்னாள் பயங்கரவாதி ஜாவித் அகமது மிர்…

13 hours ago

பாக்.,குக்கு எப்.ஏ.டி.எப்., எச்சரிக்கை: கடும் நடவடிக்கை எடுக்க

புதுடில்லி :பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளிக்கும் விஷயத்தில், பாகிஸ்தானை, அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை, 'கிரே' பட்டியலில் வைத்திருக்க, எப்.ஏ.டி.எப்., முடிவு செய்துள்ளது. 'பயங்கரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை…

13 hours ago